Announcement

Collapse
No announcement yet.

ஆழ்வார்கள் அமுதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆழ்வார்கள் அமுதம்

    குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி வடதிசை பின்பு காட்டித் தென்திசை யிலங்கை நோக்கி கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத் துயிலு மாகண்டு உடலெனக் குருகு மாலோ! என்செய்கேன்? உலகத் தீரே!
    "உலகத்தில் வாழ்பவர்களே! கடல் போலும் கரிய நிறத்தை உடைய எம்பெருமானாகிய திருவரங்கன் பாம்பணை மேல் பள்ளி கொண்டிருக்கிறான். அவன் பள்ளி கொண்டிருக்கும் பாங்கினைக் கூறுகிறேன் கேளுங்கள்
    மேற்குத் திசையில் திருமுடியை வைத்தும், கிழக்குத் திசையில் திருவடிகளை நீட்டியும், வடக்குத் திசையில் முதுகுப் புறத்தைக் காட்டியும்,தெற்குத் திசையில் இலங்கை மாநகரைப் பார்த்துக் கொண்டும் திருவரங்கப் பெருமான் அறிதுயில் கொள்ளும் அழகே அழகு !
    அந்த அழகைக் கண்டு என் உள்ளம் மட்டுமா உருகுகிறது! உடலுமன்றோ உருகுகிறது! அழகில் ஈடுபட்ட நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன்!" என்று எம்பெருமானின் அழகை வியக்கிறார் தொண்டரடிப்பொடி ஆழ்வார்




    Source:Kvs Seshadri Iyengar
Working...
X