Announcement

Collapse
No announcement yet.

ஆழ்வார்கள் அமுதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆழ்வார்கள் அமுதம்

    பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும் நூற்கடலும் நுண்ணூல தாமரை மேல் - பாற்பட் டிருந்தார் மனமும் இடமாகக் கொண்டான் குருந்தொசித்த கோபா லகன்!
    "கண்ணனாகப் பெருமான்!
    அவதாரம் செய்த காலத்தில் நளகூபர்,மணிக்கிரீவர் போன்ற கந்தர்வர்களாகிய மருத மரங்களை முறித்து அழித்தார் .இத்தகைய ஆற்றல்மிக்க பெருமான ் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் எவை தெரியுமா?
    பள்ளிகொண்டிருக்கும் பாற்கடல்;நின்றருளும் திருவேங்கடம்;குளிர்ச்சி பொருந்திய வானகம்(பரமபதம்)
    கடல் போன்று பரந்ததும் ,நுண்மையான பொருள்களைத் தன்னகத்தே கொண்டதுமான வேத ஆகமங்களில் சொல்லப்பட்டவாறு தம் இதய கமலத்தில் இந்திரியங்கள் நிலைத்து நிற்குமாறு யோகத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியரின் நெஞ்சம்!

    ஆகிய இவையே எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருத்தலங்களாகும் என பேயாழ்வார் பாடுகிறார்

    SOURCE; FB= kvs. Seshadri Iyengar
Working...
X