Courtesy: Sri.Rajan
யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலை வழிபடும் படியான புத்தியை அருள் புரிவாயாக என வேண்டுகிறார் அருணகிரிநாதர் யாரை வேண்டிகிறார் என்றால் முருகனைத்தான். அவர் கொடுக்கும் அடை மொழிகளை பார்க்கலாமா! பிறைசந்திரன், கங்கை, பூ இவைகளை அணிந்திருக்கும் சிவபெருமான் அருளிய குமரன், சர்க்கரை, பழம் போல் இனிக்கும் மொழியை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளன், ஒரு கண்ணைக மட்டும் காகாசுரன் இழக்கும் படியாக அருள் புரிந்த இராமனின் மருகன், பிரமனும் தேவர்களும் விண்ணுலகத்தை ஆளும் படி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவன், மா மரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருப்பவன், சூரனுடைய உடல் துணி படவும், கடல் வற்றிப் போகவும் வேலைச் செலுத்திய பெருமாள். ஒரு எட்டு வரி பாடலில் 7 வரி முருகனக்கே உரித்தான அடைமொழிச் சொற்கள். ஒரே ஒரு வரியில் பிரார்த்தனை. அதுவும் எப்பேர்பட்ட பிரார்த்தனை! காலன் எணை அனுகாமல் காப்பாறு முருகா. முடியுமா?. அருணகிரியாரின் வரலாற்றைப் படித்தால் தெரியும்.பாதி மதி நதி போதும் அணி சடை
நாதர் அருளிய குமரேசா

பாதி மதி = பிறைச் சந்திரனையும். நதி = கங்கையையும். போதும் = மலர்களையும். அணி சடை நாதர் = அணிந்துள்ள சடையை உடைய சிவபெருமான். அருளிய குமரேசா = அருளிய குமரோனே.
பாகு கனி மொழி மாது குற மகள்
பாதம் வருடிய மணவாளா
பாகு = சர்க்கரையையும் கனி = பழத்தையும் போன்ற மொழி = மொழிகளை உடைய மாது குற மகள் = குறப் பெண்ணாகிய வள்ளியின் பாதம் வருடிய மணவாளா = பாதங்களைப் பிடித்துத் தடவும் மணவாளா = கணவனே.
காதும் ஒரு விழி காகம் உற அருள்
மாயன் அரி திரு மருகோனே
காதும் = பிரிவு செய்யப்பட்ட. ஓரு விழி = ஒரு விழியை காகம் உற அருள் = (காகாசுரன் என்னும்) காகம் அடையும் படி அருளிய மாயன் = திருமால் (இராமன்). அரி திரு மருகோனே = அரி, இலக்குமி இவர்களுடைய மருகனே.
காலன் எனை அணுகாமல் உனது இரு
காலில் வழி பட அருள்வாயே
காலன் = யமன் எனை அணுகாமல் = என்னை அணுகாதபடி. உனது இரு காலில் = உனது இரண்டு திருவடிகளில் வழி பட அருள்வாயே = வழி படும் புத்தியைத் தந்து அருள்வாயாக.
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு
ஆளும் வகை உறு சிறை மீளா

ஆதி அயனொடு = ஆதிப் பிரமனோடு. தேவர் சுரர் உலகு = தேவர் தேவலோகத்தை. ஆளும் வகை உறு = ஆளும்படி. சிறை மீளா = (அவர்களைச்) சிறையினின்றும் மீட்டு.
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வர வரும் இளையோனே
ஆடும் மயினில் ஏறி = ஆடுகின்ற மயில் மீது ஏறி. அமரர்கள் சூழ = தேவர்கள் சூழ்ந்து வர. வரும் இளையோனே = வந்த இளையவனே.
சூதம் மிக வளர் சோலை மருவு
சுவாமி மலை தனில் உறைவோனே
சூதம் மிக வளர் = மா மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ள. சோலை மருவு = சோலைகள் பொருந்தியுள்ள. சுவாமி மலை தனில் உறைவோனே = திருவேரகத்தில் வீற்றிருப்பவனே.
சூரன் உடல் அற வாரி சுவறிட
வேலை விட வ(ல்)ல பெருமாளே.
சூரன் உடல் அற = சூரனுடைய உடல் துணி பட. வாரி = கடல். சுவறிட = வற்றிப் போக. வேலை விட வல்ல பெருமாளே = வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.மிக பிரசித்தமான பாடல். பட்டிதொட்டியெல்லாம் பரவிய திருப்புகழ். இராமயணத்தில் காகசுரனை மன்னித்து அருள் புரிந்த செயலை நினைவு கூர்ந்ததுக்கு ஒரு காரணமும் உண்டு
இராமன் ஒரு புல்லை அஸ்த்திரமாக காகாசுரன் மேல் ஏவ, அது அவனை எங்கு சென்றாலும் துரத்தியது. அசுரனும் இனி வேறு கதியல்லை எனறு உணர்ந்து இராமன் கால்களை தஞ்சமடைந்தான். இராமன் ஏவிய அஸ்திரம் அந்த அசுரன் உயிரையையே கொல்லக்கூடிய வல்லமை வாய்ந்தது. இருந்தாலும் இராமனை தஞ்சமெனறு எவன் அடைந்தாலும் அவனை காத்திடுவான் என்ற ஒரு ஒப்பற்ற குணமானது இந்த கதையின் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அந்த அசுரனின் உயிரை பறிக்காமல், அவனது ஒரு கண்ணை மற்றும் குத்தியது. 'அந்த இராமனின் அம்பு அவனை துரத்தினது போல காலன் என்னை துரத்துகிறான். அந்த அசுரன் இராமன் காலில் விழுந்தது போல் உன் காலில் நான் விழ அருள் புரிவாயாக ' என்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.

எல்லா எதிர்ப்புக்களையும் எதிரிகளையும் தீர்க்க வல்ல பாடல் இது ஆகும். மரண பயத்திலிருந்து நம்மை காக்கும் மந்திரப் பாடலாகவும் நாம் கருதத் தக்கது

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends