Announcement

Collapse
No announcement yet.

TIT BITS FROM UPANYASAMS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • TIT BITS FROM UPANYASAMS

    இந்த அழகான பாசுரத்தை பாருங்கள். பத்து முறை "ழ " உபயோகித்து இருக்கிறாள்
    ஆண்டாள்.
    எழிலுடிய அம்மனைமீர் என்னரங்கதின் இன்னமுதர்
    குழலழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில்
    எழுகமலப் பூவழகர் எம்மானார் என்னுடைய
    கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே 11 . 2 நாச்சியார் திருமொழி

    விபிஷணன் ராமனை சரணாகதி என்று அடைய முதலில் லக்ஷ்மணனை தன் ஆச்சர்யனாக
    ஏற்றுகொண்டான் என்று தெரிகிறது. முதலில் ஆச்சார்யன் மூலம் தான் போக வேண்டும்
    என்று தெரிந்தவன்.

    இதையே திருப்பாவையில் ஏழு முறை உபயோகித்து இருக்கிறாள் ஆண்டாள்.

    கீழ்வானம் என்று தொடங்கும் பாசுரத்தில் சென்று நம் சேவித்தால்
    நாயகனாய் என்று வரும் பாசுரத்தில் தூயோமாய் வந்தோம்
    ஏற்ற காலங்கள் என்ற பாசுரத்தில் உன் அடி பணியுமாபோலே
    அங்கண்மா என்ற பாசுரத்தில் நின் பள்ளிக்கட்டிற்க்கீழே
    அன்று இவ்வுலகம் பாசுரத்தில் இன்று யாம் வந்தோம்
    ஒருத்தி மகனாய் பாசுரத்தில் உன் சேவகமே ஏத்தி
    சிற்றம் சிறுகாலே பாசுரத்தில் வந்து உன்னை சேவித்து

    அதனால் தானோ விபீஷணனை ஏழாவது தம்பியாக ஏற்றுக் கொண்டான் இராமன்

    சில திவ்ய தேசங்கள் பேர் போனது என்பர்: அது எந்த இடம் ?
    திருமலை -- வடைக்கு பேர் போனது
    ஸ்ரீரங்கம் அவனது நடை அழகுக்கு
    காஞ்சீபுரம் குடை அழகு
    செல்லப்பிள்ளை வைனமுடி

    இராமானுஜர் தாயாரும் தந்தையும் வெகு நாட்களாக பிள்ளை பேறு இல்லாததால்
    வந்து வேண்டினர் திருவல்லிக்கேணியானை. அவனும் அருள் பாலித்தான். உங்களுக்கு
    எப்படிப்பட்ட குழந்தை வேண்டும் என்று கேட்க அவர்கள் உங்களை போல் என்றனர்,
    தானே எப்படி பிறக்க முடியும் ? இருந்தாலும் சரி என்று சொன்னான் கீதாசார்யன்.
    அவனே இராமனுஜராக பிறந்தார் என்பது உண்மை. அதனால் தான் சித்திரை
    திருவாதிரை அன்று உற்சவர் புறப்பாடு இல்லை என்று அறிக. ஏனெனில் அவனே
    இராமனுஜனாக பிறந்திருப்பதால்.
    GOD IS NO WHERE ஒரு எழுத்தை மாற்றினால் என்ன கிடைக்கும்

    GOD IS NOW HERE

    எந்த ஆழ்வாரும் ஸ்ரீனிவாசன் என்ற பெயரை உபயோக படுத்தவில்லை என்று அறிக.

    நாதாமுனிக்கு பிறகுதான் தனியன்களே வந்து இருக்கும் என்று அறிக. அதற்கு முன்
    இல்லை என்பது அறிக.

    குருகூர்க்காவலன் என்பவர் குரு பரம்பரையில் 155 திரு நக்ஷத்ரம் வரை இருந்ததாக தெரிகிறது.

    நம்மாழ்வார் தனது 2 .7 கேசவன் தமர் பதிகத்தில் பன்னிரு நாமக்களையும் கூறி இருக்கிறார்
    அதே போல் பெரியாழ்வாரும் 2 - 3 போய்ப்பாடு என்ற பதிகத்தில் பன்னிரு நாமக்களையும்
    உபயோகித்து இருக்கிறார் என்று அறிக.
    .
    பெரியாழ்வார் 3 .4 .5 பெண் பாவத்தில் மற்றவர்க்கென்னைப் பேசலொட்டேன் என்கிறார்
    ஆனால் அவரது பெண்ணான ஆண்டாளோ மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
    வாழகில்லேன் கண்டாய் மன்மதனே என்கிறாள். ஒரு படி அதிகமாகவே கண்ணனைத்
    தவிர வேறு யாரையும் மணம் முடிக்க விரும்பாதவளாக இருக்கிறாள். என்னே அவள் பக்தி.

    நாராயண பட்டத்ரி குருவாயூர் அப்பனை பாடி ஒவ்வொரு தசகமும் முடிந்த பிறகு அவன்
    அனுமதி பெற்ற பின்பே அடுத்த தசகம் செல்வாராம். அந்த கண்ணனும் தலை அசைத்து
    பேசுவானாம். பட்டத்ரி கேட்கிறார், "ஏ" கிருஷ்ணா அன்று கஜேந்திர மோட்சத்தின் போது
    அது வுனக்கு சமர்ப்பித்த தாமரை மலரா உன் கையில் வைத்திருக்கிறாய் என்று.
    குருவாயூர் அப்பனாக இருக்கும் கண்ணனும் "ஆம்" என்கிரனாம். என்னே அவன் கருணை,
    சௌசீல்யம் பக்தர்கள் இடத்தில்.

    நாளை காலை உனக்கு பட்டாபிஷேகம் பரஸ்த்ரீயுடன் சேராமல் இரு என்று ஆச்சர்யன்
    கூற, காலை மூன்று மணிக்கே சரையூர் நதிக்கு போனானாம் இராமன். பெரியாவச்சான்
    பிள்ளை கூறுவார் இராமனை சரயூர் நதிக்கரையில் காணலாம். ஆனால் ஆசாரம் அற்ற
    கண்ணனை கோபி மார்களின் தலைப்பின் பின் காணலாம் என்பார்.

    கும்பகோணம் சொமேச்வரன் கோயிலில் கண்ணன் சென்று ஒரு சிறிய இடம் கேட்டானாம்.
    அவரும் கொடுத்து விட்டு கடைசியில் அவனே ஆக்ரமித்து கொண்டானாம். அங்கே தான்
    உறங்குவது போல் சாரங்கபாணியாக எழுந்தருளியிருக்கிறான்.
    ஆட்டோகாரர்களிடம் சோமேச்வரன் கோயில் போ என்றால் தெரியாதாம் ஏழை
    சோமேச்வரன் கோயில் என்றால் தான் புரியுமாம்.

    பெருமாளுக்கு கண்டருளப்படாத சோற்றினைப் பற்றி ஆழ்வார் என்ன கூறுகிறார் என்று
    பார்ப்போமா?

    திருக்கோட்டியூர் சிறப்பு பதிகத்தில் (5 ) பாசுரம் "பூமி பாரங்க லுண்ணும் சோற்றினை
    வாங்கிப் புல்லைத் திணிமினே" என்கிறார் ஆழ்வார்.

    பேரிடுவது என்பது ஒரு மறக்க முடியாத செயல். ஒரு சிலர் நாராயணன் என்று
    வைப்பர் ஆனால் அழைப்பதோ நாணு என்று. கிருஷ்ணன் என்று வைத்து விட்டு
    அழைப்பதோ கிச்சு என்று. கடைசி நேரத்தில் அவன் பேரை கூப்பிடவே பெரியோர்கள்
    நல்ல பேரை வைக்க வேண்டும் என்று எண்ணினார்கள். இதைப் பற்றி ஒரு பாசுரம்
    என் மனதிற்கு வருகிறது.

    "நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டால்
    நம்பும் பிம்பம் எல்லாம் நாலுநாளில் அழுங்கிப்போம்
    செம்பெருந் தாமரைக் கண்ணன் பேரிட்ட அழைத்தக்கால்
    நம்பிகாள் நாரணன் தம் மன்னை நரகம்புகாள் " பெரியாழ்வார் திருமொழி 4 .6 . 8

    இந்த அழ்வாரே திருமாலிருன்சோலை பற்றி என்ன கூறுகிறார் என்று பார்ப்போமா.
    ஆறு தடவை இந்த பாசுரத்தில் ஆயிரம் என்று வருகிறது.

    "ஆயிரம் தோள்பரப்பி முடிஆயிர மின்னகல
    ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
    ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்
    ஆயிரம் பூம்பொழிலும் உடை மாலிருஞ்சோலையே " 3 .4 .10

    இன்னும் தொடரும் நாராயணன் அருள் இருந்தால்.

    அடியேன்,
    நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்.
Working...
X