Announcement

Collapse
No announcement yet.

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம

    மகா பெரியவா தொடர்புடைய இரண்டு ஆத்மானுபவங்கள் இந்த பதிவில் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையது. மகா பெரியவாவின் கடாக்ஷத்திற்கு உள்ள மதிப்பை இந்த இரண்டு சம்பவங்களும் உணர்த்துகின்றன.
    மகா பெரியவாவின் படம் உங்கள் வீட்டில் இருக்கிறதா? அப்போது மகா பெரியவரே பிரத்யட்சமாக அங்கு இருக்கிறார் என்று அர்த்தம். அவர் நம்மை பார்த்துக்கொண்டிருக்க, நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பக்தர் ஒருவர் உணர்த்தியிருக்கிறார். படியுங்கள்..!
    பதிவில் குறிப்பிட்டுள்ள பழக்கம் உங்களில் எவருக்கேனும் இருக்குமானால், அவர் பெயரில் பாரத்தைபோட்டுவிட்டு அதை இன்றே நிறுத்திவிடுங்கள். புண்ணியம் என்னும் பாத்திரத்தில் உள்ள பெரும் ஓட்டை ஒன்றை அடைத்ததற்கு அது ஒப்பாகும்.

    பக்தி… பக்தி… இது தான்!
    சிவ வழிப்பாட்டு குடும்பம். ஆனால், சைவ உணவு மட்டும் தான் என்ற கட்டுப்பாடு இல்லை. பண்டிகை காலங்களில் அசைவ உணவும் உண்டு.
    மகனுக்கு கல்யாணம் ஆயிற்று. ஏராளமான பரிசுப் பொருட்கள் வந்தன.
    விருந்து – மறு விருந்து என ஏக தடபுடல்.
    பெண்ணைக் கொடுத்த சம்பந்தி குடும்பத்தினருக்கு விருந்து ஒரு நாள்.
    சைவச் சமையல்!
    சம்பந்திக்கு கொஞ்சம் திடுக்கிட்டது. அவருடைய வீட்டில் அவ்வப்போது அசைவம் உண்டு. பெண்ணும் அப்படியே வளர்ந்தவள். இந்த வீட்டில் அசைவமே இல்லையென்றால் பெண் ஏங்கிப் போய்விடுவாளே… கல்யாணத்துக்கு முன் பேசிய பேச்சுக்களில் இங்கே அசைவம் உண்டு என்ற மாதிரி தானே பேச்சு வந்தது….
    “என்ன சம்மந்தி சாப்பாட்டுல ஸ்பெஷல் ஐட்டமே இல்லையே…” என்று கேட்டேவிட்டார்.
    சம்மந்தி பதில் சொன்னார். “முன்னேயெல்லாம் நீங்க கேட்கிற ஐட்டம் இருந்தது. இப்போ கல்யாணத்துல ஒரு சிநேகிதர், காஞ்சி பெரியவா படம் அழகா பிரேம் போட்டு ப்ரெசென்ட் பண்ணிட்டார். அதோ மாட்டியிருக்கேன் பாருங்க. அவங்க பார்த்துக் கொண்டிருக்கும்போது நாம எப்படிங்க அதெல்லாம் சாப்பிடுறது? அதனாலே நிறுத்திட்டேன்…”
    பக்தி… பக்தி… இது தான்!
    சுவாமிகள் படமாக இல்லை. பிரத்யட்சமாக பார்த்துகொண்டிருக்கிறார்கள்…
    கண்ணப்பன்கள் இன்றைக்கும் இருந்துகொண்டு தானிருக்கிறார்கள்.

    அமிர்த தாரையில் நனைந்தது போல….!
    கும்பகோணம் ஸ்ரீமடத்தில் பெரிய யாகம் (ஹோமம்) நடந்தது. காலை எட்டு மணிக்கு ஆரம்பம். பிற்பகல் நான்கு மணிக்கு பூர்த்தி.
    காலையில் ஆரம்பத்தின்போது வந்து உட்காரும் பக்தர்களில் ஒருவர் கூட நடுவிலே எழுந்து செல்லவில்லை. பசி – தாகம் நினைவே இல்லை. கைகால்களைக் கூட நெளிக்கவில்லை. அசைக்கவில்லை.
    இது எப்படி சாத்தியமாயிற்று?
    மகா பெரியவாள் அவ்வப்போது வெளியே வந்து கூட்டத்தின் மீது கடாக்ஷத்தை வீசுவார்கள். அமிர்த தாரையில் நனைந்தது போல இருக்கும்!
    மாலை நான்கு மணிக்கு, ‘ஹோமம் ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டது? வீட்டிற்கு போயாகவேண்டியிருக்கிறதே?’ என்ற வருத்தம் தான் தோன்றியதே தவிர, எவருக்கும் அலுப்பே ஏற்படவில்லை.
    மதுரை மீனாட்சியின் பார்வை, பெரியவாளுக்கு அந்த பார்வையில் CALMஆட்சி (காமாக்ஷி)யும் தென்படுவாள்!
    நன்றி : ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ |’வானதி பதிப்பகம்’
    தட்டச்சு : www.rightmantra.com
    - See more at: http://rightmantra.com/?p=14662#sthash.AHYPy9uF.dpuf
Working...
X