Announcement

Collapse
No announcement yet.

3 VSITORS

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 3 VSITORS

    3 visitors


    Courtesy: sri.JK.Sivan


    யார் வரவேண்டும்




    சர்மா ஒரு கிருஷ்ண பக்தர். தினமும் அருகே இருந்த கிருஷ்ணன் கோவிலில் தான் நாள் முழுதும் பாடிக்கொண்டும் பஜனை செய்துகொண்டும் காலம் கழிப்பவர். அவர் மனைவி பெயரில் சாந்தா, குணத்தில் பத்ர காளி. எப்போதும் அவளது ஒரே வேலை சர்மாவை துன்புறுத்துவது. ''ஒன்றுக்கும் லாயக்கில்லை. ஒரு பைசா சம்பாதிக்க யோக்யதை இல்லை''' அவர்கள் மகள் ரூபா அப்பாவைபோல் சாந்தமாக இருப்பவள். எப்போதும் புன்னகையோடு இருப்பவள். அவர்கள் வசித்த வீடு ஒரு சிறிய ஓட்டுவீடு என்றாலும் சுற்றி நிறைய பூஞ்செடி கொடிகள் ரம்யமாக வளர்த்தார்கள். நிழலுக்கு அமர ஒரு மர பெஞ்ச் போட்டிருந்ததால் தெருவில் வருவோர் போவோர் கூட சற்று நேரம் அங்கு அமர்ந்து போவார்கள்.


    ஒரு நாள் மாலை அந்த பெஞ்சில் 3 வயதான வழிப்போக்கார்கள் அமர்ந்திருந்தார்கள். ரூபா அவர்களைப்பார்த்து ''உங்களைப்பார்த்தால் ரொம்ப களைப்போடு இருக்கிறீர்களே. உள்ளே வந்து கொஞ்சம் நீர் மோர் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டாள்.


    "வீட்டில் பெரியவர்கள் யாருமில்லையா".


    ''அப்பா கோவிலுக்கு போயிருக்கிறார். வரும் நேரம் தான்.''


    அவர் வரட்டும்''


    சர்மா வரும்போது அவர்களை பார்த்தார். யார் யாரோ வந்து போகிறார்களே என்பதால் கவனிக்கவில்லை.
    ரூபா அவர்கள் அவருக்காக காத்திருப்பதாக சொன்னதும் ''அவர்களை உள்ளே கூப்பிடேன்'' என்றார்.
    ரூபா அவர்களை உள்ளே அழைத்தபோது ஒருவர் பதில் சொன்னார்.''குழந்தே நாங்கள் மூவரும் ஒன்றாக உள்ளே வரமுடியாது. யாராவது ஒருவர் தான் எங்குமே வீட்டுக்குள் செல்வோம்''


    ''ஆச்சர்யம். யார் நீங்கள்?''


    ''என்பெயர் குபேரன் ,நான் யார் வீட்டுக்குள்ளாவது வந்தால் பணம் கொட்டும்''


    இதோ நடுவில் இருப்பவர் பிரம்மன் இவர் வந்தால் அங்கு கல்வி மேம்படும்.


    அதோ அவர் தான் தக்ஷிணாமூர்த்தி. இவர் நுழைந்த வீட்டில் அன்பும் பாசமும் கொப்புளிக்கும்.
    யார் வரவேண்டும் என்று உள்ளே போய் கேட்டுக்கொண்டுவா''


    சாந்தா ''குபேரனைக் கூப்பிடு இப்போதே. நமக்கு தான் இங்கு உன் அப்பாவின் கைங்கர்யத்தால் வறட்சியாக இருக்கிறதே என்றாள்.


    ''அம்மா அந்த பிரம்மனையே கூப்பிடுவோம் இங்கு சரஸ்வதி கடாக்ஷம் நிரம்பட்டும்'' என்றார் சர்மா


    ரூபா '' எனக்கென்னவோ இந்த வீட்டில் அன்பும் பாசமும் தான் துளியும் இல்லையே . தக்ஷினாமுர்தியே உள்ளே வரட்டும் என்று தோன்றுகிறது.''


    நிறைய பேசினார்கள் கடைசியில் பெண் தான் ஜெயித்தாள் .


    வெளியே வந்து ''தக்ஷிணாமூர்த்தி உள்ளே வரட்டும் '' என்றாள் . மற்ற இருவரும் கூடவே எழுந்தார்கள்.
    ஆச்சர்யமாக பார்த்த ரூபாவிடம் மற்ற இருவரும் எங்கு அன்பும் பாசமும் பரிவும் நிரம்பி இருக்கிறதோ அங்கு நாங்களும் கூடவே இருப்போம் என்று சொல்லி அவர்களும் வீட்டில் நுழைந்தார்கள்
Working...
X