Height of dharma by Karna
தா்மதாயின் ஒரேமகன் கா்ணன்..!
கா்ணன் போன்ற கொடையாளியை இதுவரை இந்த அகிலம் கண்டதில்லை..!
கா்ணனது கொடையின் புகழை அவனது உற்ற நண்பன் துரியோதனனால் கூட சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஒரு கட்டத்தில் கா்ணனுக்கு இணையாக நாமும் கொடையாளி என்று புகழ் பெற வேண்டும் என விரும்பினான் துரியோதனன்.
அதன்படி "இங்கு யார் வந்து என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கப்படும்!" என்ற அறிவிப்பு பலகையை தன் அரண்மனை வாசலில் வைத்தான் துரியோதனன்.
ஸ்ரீகிருஷ்ண பரந்தாமனும் இந்த அறிவிப்பை கண்டார்.
துரியோதனன் உளமார தருமம் செய்ய முன்வரவில்லை, கா்ணனை போல தா்மவான் என்று புகழ் பெறவே இவ்வாறு செய்கிறான் என்பதை உணர்ந்தார்.
கா்ணனின் பெருமையை துரியோதனனுக்கு உணா்த்த தக்க தருணத்தை எதிா் பார்த்து காத்திருந்தார் பரந்தாமன்.
ஒரு முறை.. மாதக்கணக்கில் தொடா்ந்து பெருமழை பெய்தது, மழை சற்று ஓய்ந்ததும் அந்தணா் வேடத்தில் சென்று துரியோதனனை சந்தித்தார் ஸ்ரீகிருஷ்ணர்..!
மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்ற துரியோதனன் "என்ன வேண்டும் கேளுங்கள்" என்றான்..
நான் ஒரு யாகம் நடந்த போகிறேன். இதில் தினமும் ஆயிரக்கணக்கான சாதுக்கள் பங்கேற்க உள்ளனர்,
அவர்களுக்கு உணவு சமைக்க ஆயிரம் வண்டி காய்ந்த விறகு தேவைபடுகிறது, தாங்கள்தான் தந்து உதவ வேண்டும் என்றார் அந்தணா் வேடத்தில் வந்த பகவான்..
இதை கேட்டதும் எரிச்சல் அடைந்தான் துரியோதனன், பேய் மழை பெய்து இப்போதுதான் ஒய்ந்து இருக்கிறது, இந்த நிலையில் காய்ந்த விறகு வேண்டுமாம் என்று தனக்குள் சலித்துக்கொண்டான்.
இருப்பினும் பணி ஆட்களை அழைத்து விசாரித்தபிறகு "காய்ந்த விறகு இல்லை" என்று திட்டவட்டமாக கூறினான்.
விறகு இல்லை என்றால் அரண்மனை வாசலில் "யார் என்ன கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்கப்படும்" என்ற அறிவிப்பு பலகை எதற்க்காக உள்ளது என்று கேட்டார் அந்தணா்.
இருப்பதை தானே தரமுடியும்?
தற்போதைய சூழலில் வேறு எவரேனும் காய்ந்த விறகு கொடுத்துவிட்டால், நான் அந்த அறிவிப்பு பலகையை அகற்றி விடுகிறேன் என்று சூளுரைத்தான் துரியோதனன்.
அதன்பிறகு, கா்ணனின் அரண்மனைக்குச் சென்றார் அந்தணா் வேடம் தரித்த பகவான்..
கா்ணனிடமும் யாகம் குறித்த விவரங்களை எடுத்துரைத்து காய்ந்த விறகு தந்து உதவுமாறு வேண்டினார்.
கா்ணன் அரண்மனையிலும் அதே நிலைதான், காய்ந்த விறகு இல்லை.!
இதையறிந்த கா்ணன், "பக்கத்தில் ஒரு வீடு உள்ளது, அங்கு சென்று உரையாடலாம் வாருங்கள் என்று அந்தணரை அன்புடன் அழைத்து சென்று உபசரித்தான்.
சிறிது நேரத்தில் ஆயிரம் வண்டி விறகு வாசலில் தயாராக இருந்தது..!
வியந்து போன அந்தணர், உன்னால் மட்டும் எப்படி முடிந்தது என்று கேட்டார்..!
நீங்களே தெரிந்துகொள்வீா்கள் என்று கூறி அந்தணரை வெளியே அழைத்து வந்தான்.
எதிரே கா்ணனின் அரண்மனை முற்றிலுமாக இடிக்கப்பட்டு, தரைமட்டமாகி கிடந்தது..!
அந்த அரண்மனை கட்டுமானத்தில் இருந்த உயா்ந்த ரக தேக்கு, சந்தானம், தேவதாரு முதலான மரப் பொருட்கள், விறகுகளாக வண்டிகளில் அடுக்கபட்டு இருந்தன.!
கா்ணனை வாழ்த்திய பரந்தாமன், ஆயிரம் வண்டி விறகுகளுடன் துாியோதனனின் அரண்மனை வாயிலை அடைந்தார் அந்தணராக..!
இதை கண்ட துாியோதனன் வெட்கித் தலைகுனிந்தான், வாசலில் இருந்த அறிவிப்பு பலகையையும் அகற்றும்படி உத்தரவிட்டான்.
எனதருமை தோழமைகலே..!
ஆத்மார்த்தமாக மற்றவருக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வந்து விட்டால் அங்கே இல்லை என்ற சொல்லே இல்லாமல் போய் விடும்..!