Monkey sanyasin - Ramana Maharshi spiritual story
🤚🐒ஸ்ரீ ரமண பகவான் வாத்சல்யம்🐒🤚


ஒரு முறை பகவான் ரமணர் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு பக்தர் ஒரு தார் வாழைபழம் கொண்டு வந்து பய பக்தியோடு வைத்தார்.


அப்பொழுது ஒரு குரங்கு அந்த தாறிலிருந்து ஒரு வாழைப் பழத்தை பறிப்பதற்காக முயன்றது.


பகவானின் பக்தர்களில் ஒருவர் ஒரு தடியை எடுத்துக் கொண்டு ஒடி வந்து குரங்கை விரட்ட முயன்றார்.


இதைப் பார்த்த பகவான் கூறினார்: " அவளை விரட்டாதீர்கள்.அவளுக்கு என்ன பசியோ! அவளுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளட்டும்".




பிறகு அந்த குரங்கிடம் திரும்பி," வா அம்மாம்,வா; ஓ! பிள்ளை குட்டிக்காரியா? (அந்த குரங்கின் பிடியில் ஒரு குழந்த குரங்கு இருந்தது )அதுதான் இவ்வள்வு வேகமாக பழத்தை எடுக்க வருகிறாயா? உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள் அம்மா".என்றார்




பகவான் எப்பொழுதும் பறவைகளானாலும் மிருகங்களானாலும் அது இது எனறு சொல்லமாட்டார்,அவன்-இவள் என்றெல்லாம்தான் கூறுவார்.


அந்த குரங்கு மெல்ல மெல்ல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு வந்து அந்த வாழைக்குலையிலிருந்து ஒரேயொரு பழத்தை எடுத்துக்கொண்டு ஒடிப் போயிற்று.


அப்பொழுது பகவான் சொல்லலானார்:
"பார்த்தீர்களா ஐயா அவளை! ஒரே ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு போகிறாள்.அவளுக்கு இன்றைய தேவை அவ்வளவு தான்.




நாமெல்லாம் சன்னியாசிகள் என்று கூறிக்கொள்கிறோம்.ஆனால் நாமோ கிடைப்பதெயெல்லாம் எடுத்துக்கொண்டு போய் உக்கிராண அறையில் பூட்டி வைக்கிறோம்.


நாமா சன்னியாசிகள்? அந்த குரங்கல்லவா நிஜமான சன்னியாசி?"
எப்படி அழகாக கர்ம சன்னியாசியின் இலக்கணத்தை பகவான் சுட்டிக் காட்டுகிறார்.