* பத்துவகையான ஆயுதங்களில் முதலாவது வச்சிராயுதம். இது மிகப்பலம் பொருந்திய ஆயுதம்.
* இந்திரன் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியுள்ளான். கள்ளிச் செடிக்கு வச்சிரம் என்ற பெயருண்டு.
* அப்பு என்றால் நீர். பஞ்சபூதங்களில் ஒன்று.
* கணக்கு நமக்குத்தெரியும். அதென்ன கீழ்க்கணக்கு. 1க்கு மேல் உள்ல பத்து, நூறு, ஆயிரம் முதலானவை மேல்கணக்கு. ஒன்றுக்கு கீழ் உள்ள முக்கால்,
அரை, கால் முதலியன கீழ்க்கணக்கு.
* மனிதர்களுக்கு மட்டும் நான்கு கண்கள் உண்டு. வெளியில் இருப்பன புறக்கண்கள் ( ஊனக்கண்கள் ). இன்னும் இரண்டு கண்கள் அகக்கண்கள் .
( ஞானக்கண்கள் ).
-- தினமலர். பக்திமலர். செப்டம்பர் 19, 2013.