உத்தர கண்ட மாநிலத்தில் சமஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பு
உத்தர கண்ட மாநிலத்தில் சம்ஸ்க்ருதம் இரண்டாவது அதிகாரபூர்வ மொழியாக இருக்கும் என்று அந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் நிஷான்க் அறிவித்தார்.

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.K.C. சுதர்சன் சம்ஸ்க்ருதம் எல்லா மொழிகளுக்கும் தாய். பலரும் அதை கற்பது கடினம் என்று நினைக்கிறார்கள் உண்மையில் அது மிகவும் எளிது, என்றார். அவர் மேலும் கூறுகையில் இந்தியாவில் உருது மொத்தம் பதினெட்டு மாநிலங்களில் இரண்டாவது அதிகார பூர்வ மொழியாக இருக்கிறது. இந்தியாவிலேயே உத்தர கண்ட மாநிலம் தான் முதன் முறையாக சமஸ்க்ருதத்தையும் அதிகார பூர்வ மொழியாக அறிவித்திருக்கிறது. இது மிகச்சரியான ஒரு முடிவு என்று கூறினார்.
உத்தரகண்ட மாநிலம் சம்ஸ்க்ருத மொழியுடனும் பாரத தொன்மையிலும் மிகவும் முக்கியம் இடம் வகிக்கக் கூடியது. இந்த பிரதேசத்தில் இருந்து தான் வியாசர் மகா பாரத கதையை இயற்றினார் என்பது நம்பிக்கை. மகா கவி காளிதாசர் பிறந்ததும் இங்கே தான் என்று கூறுவர். இந்துக்களின் புனித தலங்களான ஹரித்வார், ரிஷிகேஷ் ஆகிய இடங்கள் இந்த மாநிலத்தில் தான்உள்ளன.