5. திருவரங்கத்து மாலை - 30/114 : ஸ்ரீ வராஹ அவதார வைபவம் 3/3

மறக்குஞ்சரம் மாய்த்த மாயோன் மாண்பு மாணப் பெரிது !

நிறக்கும் செழும் சுடர்க் கோடும் , இப்பாரும் , நிசா முகத்து
சிறக்கும் பிறையும் களங்கமும் போலும் எனில் சிறு கண்
மறக்குஞ்சரம் செற்ற மாயோன் , அரங்கன் வராகம் - அது ஆயப்-
பிறக்கும் பிறப்பின் பெருமை எவ்வாறு இனிப் பேசுவதே ?

பதவுரை :

நிறக்கும் செழும் சுடர்க் கோடும் நிறமும் ஒளியும் கொண்ட வராஹனின் தந்தமும்
இப்பாரும் அந்த தந்தத்தில் இருக்கும் இந்த பூமியும்
நிசா முகத்துஇரவின் முன் வரும் மாலையின்
சிறக்கும் பிறையும் சிறந்த பிறைச் சந்திரனையும்
களங்கமும் போலும் எனில் அதனிடம் உள்ள மருவையும் ஒக்கும் என்றால்
சிறு கண் சிறிய கண்களை உடைய
மறக்குஞ்சரம் செற்ற வலிமையான குவலயாபீடம் எனும் யானையைக் கொன்ற
மாயோன் அரங்கன் கண்ணன் ஆகிய அரங்கன்
வராகம் அது ஆய் பன்றி வடிவமாய்த்
பிறக்கும் பிறப்பின் பெருமை தோன்றிய அவதாரத்தின் பெருமையை
எவ்வாறு இனிப் பேசுவதே ? இனி சொல்வது எப்படி ? (முடியாது)

அடுத்து வருவது : ஸ்ரீ நரசிம்ஹ அவதார வைபவம் 1/3

V.Sridhar