ப்ரயாகையில்செய்ய வேண்டியது
ஆத்மருணம் தேவ ருணம் பித்ரு ருணம்என்ற மூன்று கடன்களுடன் நாம்பிறக்கின்றோம் .இவைகளைஅகற்றினால் தான் முக்திபெறலாம்.ப்ரயாகை
யில்ஆத்ம ருணம்;காசியில்தேவ ருணம் கயா வில் பித்ருருணம் அகலும்;
முக்திபெற விரும்புவோர் அவசியம்இதை செய்ய வேண்டும் இந்த
கடன்களிலிருந்து விடுபடத்தான் தெய்வங்களையும்பித்ருக்களையும் ஆராதிக்கவேண்டும்.தீர்த்தாடனம்செய்ய வேண்டும் என யாத்ராகல்பம்
கூறுகிறது.மத்ஸ்ய புராணம்வாயு புராணம் பத்ம புராணங்களில்இந்த ப்ரயாகை காசி கயா யாத்திரைமிக சிறந்தது என க்கூறுகின்றது.
அலகாபாத்திலிருந்து6கிலோ மீட்டரில்உள்ளது.ப்ரயாகை;தாரா கஞ்ச் என்றரயில்வே ஸ்டேஷனுக்கு மிகசமீபம்..இங்கு சிவ மடம்உள்ளது.
இந்தசிவ மடத்தில் உள்ள பண்டிதரிடம்என்னால் இவ்வளவு தான் முடியும்எனச்சொல்லி பணம் கொடுத்தால்அதற்கு தகுந்த மாதிரி அவர்உங்களுக்கு எல்லாம் செய்துவைக்கிறார்..
1.ப்ராஹ்மணர்களுக்குதக்ஷிணை தந்து த்ரிவேணிஸ்நானம்/வேணி தாநம் செய்யமுதலில் யோக்கியதை உண்டாவதற்குஅநுமதி பெற வேண்டும்.
2ஸகல பாபங்களும்அகல ப்ராஜாபத்ய க்ருச்சரதாநம் செய்ய வேண்டும்.இதற்கு ஒரு மட்டைதேங்காயுடன் தக்ஷிணை ப்ராமணருக்குகொடுக்கவும்.
3.பார்வதி பரமேஸ்வரர்;லக்ஷ்மி நாராயணர்அருளை பெற பல தாநம் செய்யவேண்டும்.பழம் தாம்பூலம்,தக்ஷிணை தரவேண்டும்.
4.கங்கா புத்ரர்களாகக்ஷேத்ர வாஸிகளாக உள்ளவருக்குமுழு தேங்காயும் தக்ஷிணையும்தந்து தீர்த்த ராஜனது பேட்டிபெற வேண்டும்.
5.ஸ்நானம் செய்தபிறகு நமது பீடை அகல நாம்உடுத்திய புதிய அல்லது பழையவஸ்திரத்தை பண்டாவிற்குதக்ஷிணையுடன் தானமாக தரவேண்டும்..
6ஸேதுவிலிருந்துகொண்டுவந்த வேணி மாதவர் மணலைபூஜை செய்து ஜலத்தில் போடவேண்டும்.
7.மறு நாள் தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.விசுவே தேவருக்குஒருவர்; அப்பா வர்க்கம்ஒருவர்;அம்மா வர்க்கம்ஒருவர்;தாயின் அப்பாவர்க்கம் ஒருவர்;
தாயின் அம்மாவர்க்கம் ஒருவர்;காருண்ய பித்ருக்கள்ஒருவர்.
மொத்தம்6ப்ராமணர்கள்.வரித்து விதிப்படிவேஷ்டி அளித்து தீர்த்தசிராத்தம் செய்ய வேண்டும்.சிராத்தத்திற்குமுன்பே பரேஹணி தர்பணம் செய்யவேண்டும்.17பிண்டங்கள்வைத்து பிண்ட ப்ரதானம் செய்யவேண்டும்;
அப்பாவழி 3;அம்மா வழி 3;தாயின் அப்பாவழி 3;தாயின் அம்மாவழி 3;காருண்ய பித்ருக்கள்-1;தர்ம பிண்டம் (க்ஷேத்ர பிண்டம்)-4.மொத்தம்=17
தசதானம் அல்லது பஞ்ச தானம்செய்வது அவசியம்..
8.மூன்றாவது நாள்:-தம்பதீ பூஜைசெய்ய வேண்டும்.வேட்டி;புடவை;தக்ஷிணை;ஸெளபாக்கியத்ரவ்யங்கள்;மெட்டி;திருமாங்கல்யம்..தாம்பூலம் புஷ்பம்;பழம்;நலங்கு சாமான்;பால் கொடுக்கும்கிண்ணம் முதலியன
ஸங்கல்பம்செய்து முடித்துக்கொண்டுபோட் மூலம் கங்கை,யமுனை;ஸரஸ்வதி என்றமூன்று நதிகளும் கூடும்த்ரிவேணிக்கு செல்ல வேண்டும் இங்கு .கங்கைஜலம் பிடிக்க ப்லாஸ்டிக்கேன் கொண்டு செல்ல வேண்டும்
போட்டில்பண்டா மந்திரம் சொல்லி இந்தமூன்று நதிகளையும் பூஜிக்கசொல்வான் .த்ரிவேணிஸங்கமத்தில் போட்டை நிறுத்துவான்.முதலில் புருஷர்கள்வபனம்
செய்து கொள்ள வேண்டும். இனி வபனம் கயாசிராத்தம் முடிந்த பிறகுதான் செய்து கொள்ள வேண்டும்அது வரை வபனம் இல்லை..அதற்குமுன் மனைவி தன்
புருஷனைமாதவனாக கருதி பூஜை செய்துகல்யாணம் ஆனது முதல் இதுவரைதான் புருஷனுக்கு செய்தஅபசாரங்களை மன்னிக்கும்படிகேட்க வேண்டும்.அப்படியே அதைமன்னித்து மனைவியை த்ரிவேணியாககருதி பூஜிக்க வேண்டும்
.கணவன்மனைவியின் தலை வாரி பின்னல்போட்டு புஷ்பம் வைத்து தலைமுடியின் நுனியில் இரண்டுஅங்குலம் கத்திரித்து மஞ்சள்குங்குமம் அக்ஷதை அப்ரஹபொடி,சந்தனம்காதோலை கருகமணி வெற்றிலைபாக்கு
இவைகளுடன்வைத்து மனைவியிடம் கொடுக்கஅதை மனைவி பண்டாவிடம் கொடுக்கவேண்டும்.பண்டா அதை ஜலத்தில்போடுவார்.வெற்றிலைமாத்திரம்
மிதந்து சென்றுவிடும் .முறத்தில்உள்ள மற்ற பொருட்களை பண்டா இந்த இடத்தில் போட மாட்டார்.
முடி மேலே மிதக்காமல் உள்ளே சென்றுவிடும்.த்ரிவேணிக்குமூங்கில் (வேணு) தாநம் செய்தால்ப்ரியம்.எனவே சிறியமுறத்தில் சீப்பு கண்ணாடி.குங்கும சிமிழ்;மஞ்சள் பொடி;அப்ரஹ
பொடி;அரிசி;வெற்றிலை;பாக்கு பழம்;ரவிக்கை;தக்ஷிணை இவைகளைவைத்து மற்றொரு முறத்தால்மூடி தானம் செய்ய வேண்டும்.
வேணிதானம் செய்த பின் தம்பதிகள்இருவரும் சேர்ந்து யமுனையில்ஸ்நானம் செய்து போட்டின்வழியாக கோட்டை அருகே செல்லவேண்டும்.அங்குகோட்டைக்குள் பூமிக்கு அடியேஒரு பெரிய கோவில் உள்ளது அதில் மனித உரு
அளவில்சந்திரன்;சூரியன்;யமன்;வால்மீகி;வ்யாஸர்;துர்வாஸர்;தத்தாத்ரேயர்முதலிய விக்கிரஹங்களும்ஆலமரத்தின் அடியும் தெரிகிறது;
இந்தஆல மரம் அக்ஷயமானது இந்த ஆலமரத்தில் மத்ய பாகம் காசியிலும்;நுனிபாகம் கயா விலும் உள்ளது;ப்ரளய காலத்தில்இந்தஇலையின் மீது பகவான்
படுத்து இருப்பார்.
இங்கிருந்துவீட்டிற்கு ஆட்டோ அல்லதுடாங்கா வைத்துக்கொண்டு செல்லவேண்டும்.போகும் வழியில்பூமியில் ஹனுமார் படுத்தவண்ணம் இருக்கும்
கோவிலில்சென்று பார்த்து விட்டு செல்லவேண்டும்..ஆனந்த பவன் பார்.
இங்குபரத்வாஜர் ஆச்ரமத்தில் ஸப்தரிஷிகள்;பார்வதி பரமேஸ்வரர்;காளி வாசுகி;ஒரு குகை இவைகள்இருக்கின்றன.காஞ்சி சங்கராசார்யார்விமான மணடபம் பார்க்க வேண்டியஒன்று வேணி மாதவரை இங்குபார்க்க வேண்டும். ராமானுஜ மடம்;மத்வ மடம்பார்க்கலாம்.
ப்ரயாகையின்காவல் தெய்வம் வாஸுகி என்றஸர்ப்ப ராஜன்.இந்த ஆலயத்தில்அம்பு படுக்கையில் பீஷ்மர்படுத்து இருப்பதையும்பார்க்கலாம்.
அலோபிமாதா சோமேச லிங்கம் பார்க்கலாம்பெரு வேள்விகள் கண்ட பூமி ஆனதால் ப்ரயாகை என்று அழைக்கபடுகிறது;சிராத்தம் ஆனபிறகுவேணி மாதவரை அவசியம் தரிசனம்செய்ய வேண்டும்.