பெண்ஆண் (வதூ,வரன்) ( மணமகள்)(மணமகன்) இருவருக்கும்திருமணத்திற்கு முதல் நாள்காலை செய்ய வேண்டியது.ஏற்கனவேசெய்திருந்தாலும் மறுபடியும்இப்போது செய்ய வேண்டும்.
ஜாதகாதி:-இருவீட்டாருக்கும் சேர்த்து:- பெண்வீட்டார் வாங்கி கொடுக்கவேண்டும்.
தேவையானபொருட்கள்:-மஞ்சள்தூள் 100 கிராம்;குங்குமம்50 கிராம்;சந்தனப்பொடி100 கிராம்;வெற்றிலை100; பாக்கு100 கிராம்;வாழைப்பழம்50; உதிரிபுஷ்பம் 250கிராம்;
தொடுத்தபுஷ்பம் 20முழம்.;மாலை-2;அன்னப்ராஸ்னத்திற்கு ஹவிஸ் 100கிராம்;வெல்லம்,தயிர்,தேன்,நெய்தனிதனியே வகைக்கு 20கிராம்;தேங்காய்20.; ஊதுவத்தி-2பாக்கெட்;
கற்பூரம்2பாக்கெட்;பூஜைமணி-2; கற்ப்பூரதட்டு-2;பஞ்சபாத்திர உத்திரிணி-2.;கிண்ணம்2; டிரே4
வாழைஇலை 20; கோதுமை2கிலோ;பச்சரிசி2 கிலோ.மாவிலைகொத்து 20;சுண்ணாம்பு-2பாட்டில்;
நாந்திக்குபச்சரிசி ,பயற்றம்பருப்பு;வாழைக்காய்; 9x5 வேஷ்டி-9 பேருக்கு:வாத்யார்சொல்படி தலைக்கு 250கிராம்பச்சரிசி;பருப்பு50 கிராம்;
வாழைக்காய்1; வேஷ்டி-1;தேங்காய்1; வெற்றிலை,பாக்கு.பழம்;புஷ்பம்.மாப்பிள்ளைவீட்டார்க்கு 9பேருக்குதலைக்கு 250கிராம்பச்சரிசி,பயற்றம்புருப்பு 50கிராம்,தேங்காய்:வாழைக்காய்,வாழைஇலை, பழம்,புஷ்பம்.
நாந்திமுடிந்தவுடனும் புண்யாஹவசனம் செய்ய வேண்டும்.
ஹாரத்திதாம்பாளம்;ஹாரத்திகரைசல்; குத்துவிளக்கு-2;திரிநூல்;எண்ணெய்;தீப்பெட்டி.-2;
பாலிகை-10;பாலிகைத்ரவியம்;-250 கிராம்.பாலிகைதெளிப்பதற்கு முதல் நாளேதண்ணிரில் ஊற போட வேண்டும்.பாலிகைதிரவியம் என்பது
மிகவும்சீக்கிரமாக முளைக்க கூடிய
கடுகு,உளுந்து,பயறு,நெல்,கருப்புஎள்ளு. இவைமட்டும்.வகைக்கு50 கிராம்இரு வீட்டார்க்கும்.சேர்த்து, வீபூதி2 பாகெட்;கலசத்திற்குசொம்பு-2; புதுதுண்டு கலசத்திற்கு சாற்ற2;
ஆஸனபலகை அல்லது தடுக்கு 8;
ஹோமகுண்டம்-1;பிள்ளைவீட்டார்க்கு மட்டும்.
வைதீகவிவரம்:-அநுக்ஞை=பர்மிஷன்;10 பேர்;விக்னேஸ்வரபூஜை;
ஆரம்பக்ருஹ ப்ரீதி;முக்யகால க்ரஹ ப்ரீதி;நாமகரணபுண்யாஹ வசனம்;ஜபதக்ஷிணை; அன்னப்ராஸ்ன க்ரஹ ப்ரீதி;தேன்தயிர் ஹவிஸ் கொடுத்தல்.
பாலிகைதெளித்தலுக்கு புண்யாஹ வசனம்;ஓஷதிஸூக்த ஜப தக்ஷிணை;ரக்ஷாபந்தன க்ரஹ ப்ரீதி;ஜபதக்ஷிணை; சூடாகர்மா; ஹாரத்தி
பருப்புதேங்காய்:-
முந்திரி,பருப்புதேங்காய் ஒரு ஜோடி;அல்லது
தேங்காய்பர்பி பருப்பு தேங்காய் ஒருஜோடி;
பொட்டுகடலை அல்லது நிலக்கடலை புருப்புதேங்காய் சிறியது 5.
லட்டுபருப்பு தேங்காய் ஒரு ஜோடி.
மனோகரம்பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
மைசூர்பாகு பருப்பு தேங்காய் ஒருஜோடி;
4 தினுசுகள்வழக்கம்.சக்திக்குதகுந்தார் போல் செய்துகொள்ளவும்.
கைமுறுக்கு 31;அதிரசம்31; லட்டு-31.
முறுக்கு31; முள்ளூதேங்குழல் 31.மூடிபோட்ட பாத்திரங்களில் வைக்கவேண்டும்.
பித்தளைகுடம், குத்துவிளக்கு. வெங்கலபானை கரண்டி,அருக்கஞ்சட்டி,சொம்புமிக முக்கியம்.சீர்பாதிரங்கள் லிஸ்ட் போட்ட படிவாங்கி வைக்கவும்.
அரிசி,வெல்லம்,அங்கமணி சாமான்கள் வாங்கி வைக்கவேண்டும்.
புஷ்பவகையராக்கள்.
மாப்பிள்ளைஅழைப்பு மாலை-1;
நிச்சயதாம்பூலத்திற்கு பெண்ணுக்குமாலை 1;
புஷ்பசரம் 20 முழம்;
ஜாதகாதிக்குபெண்ணுக்கு மாலை 1
விரதத்திற்குமாப்பிளைக்கு மாலை-1.
முஹூர்த்தமாலை ஒரு ஜோடி;
மாற்றுமாலை -5.
முஹுர்த்ததிற்குபுஷ்ப சரம் 25முழம்.
நலங்கு, ரிசெப்ஷன்மாலை ஒரு ஜோடி.
நலங்கிற்குபுஷ்ப பந்து 2
புஷ்பசரம் 15 முழம்;
சேஷஹோமத்திற்கு மாலை 2.
பாலிகை10; ஒளபாசனபானை-1; மடக்குபெரிது 5; சிறியது5.
நெல்விதை கோட்டை-1;நெல்பொரி 1 லிட்டர்
உமி2 கிலோ;விசிறி2; விராட்டி-10;நெய்500 கிராம்;சிறாய்தூள் 2 கிலோ;அம்மி-1;
மாப்பிள்ளைக்குஅஷ்ட விரதம்:-
அனுக்ஞை8 பேர்;விக்னேஸ்வரபூஜை; காலாதீத க்ரஹ ப்ரீதி;ஆரம்பக்ருஹ ப்ரீதி;கும்பரத்னம்; ப்ரதிமை;ஸ்வர்ணபுஷ்பம்;ப்ருஹ்ம
தக்ஷிணை;ஜபதக்ஷிணை;உத்ஸர்ஜன அனுக்ஞை;க்ரஹப்ரீதி; நாந்தி9பேர்;
புண்யாஹவசனம்; ஜபதக்ஷிணை; மதந்தீஜப தக்ஷிணை;அங்குரபுண்யாஹ வசனம்;பாலிகைஜப தக்ஷிணை;ஓஷதீஸூக்த ஜப தக்ஷிணை;
ப்ரதிஸர கும்பம்;ஜபதக்ஷிணை; ரக்ஷாபந்தன க்ரஹ ப்ரீதி,சாத்குண்யம்,ஹாரத்தி.
அஷ்டவிரதமென்பது 8விரதம்.மிகவும்சுருக்கமாக இதை திருமணத்திற்குமுதல் நாள்
செய்கிறோம்.பிள்ளைவீட்டார் பெண் வீட்டாரிடம்சந்தனம்,குங்குமம்எடுத்து கொண்டு போய் கொடுத்துவிரதம் நடந்து கொண்டிருக்கிறது.
விரதம்பார்க்க பாலிகை தெளிக்க வரவேண்டும் என்று அழைக்கவேண்டியது.பெண்வீட்டார் அப்பம்,கண்ணாடி,பக்ஷணங்களைஎடுத்து கொண்டு வந்து கெளரிகல்யாணம் பாடி சபையில் வைக்கவேண்டியது.
பிள்ளைவீட்டார் வந்த பெண் வீட்டார்களுக்குபாலிகை தெளித்த பின் சந்தனம்,குங்குமம்,சக்கரை,தாம்பூலம்,பணம்வைத்து கொடுக்க
வேண்டும்.கங்கணம்கட்டும் போது கெளரி கல்யாணம்பாட வேண்டும்.பாலிகைதெளிக்க மடிசார் புடவை,கட்டிகொண்டிருக்க வேண்டும்.
விரதம்முடிந்த பின் மாப்பிள்ளைஸர்வாங்க க்ஷவரம் செய்துகொள்ள வேண்டியது.அஷ்டவிரதம் செய்வதனால் ப்ருஹ்மசாரியாகஇருந்த போது செய்த எல்லாபாபமும் போய் விடுகிறது.
வைதீககர்மாக்களை செய்யாதவர்கள்கடமையை கை விட்டவராகிறார்கள்.நாம்நம் கடமையை செய்வதனால் நம்குடும்பம் க்ஷேமம் அடைகிறது