*இன்று (03.07.2020)**ஶ்ரீ நம்பெருமாள் ஜ்யேஷ்டாபிஷேகம*
*ஜ்யேஷ்டா* என்றால் *பெரிய* என்று பொருள்!
*ஜ்யேஷ்டா நக்ஷத்திரம்* என்றால் *பெரிய நக்ஷத்திரம்* என்றும் பொருள்!
ஆனி மாதம், ஜ்யேஷ்டா *(கேட்டை*) நக்ஷத்திரத்தன்று, நம்பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் - பெரிய நதியான *தென் திருக்காவிரியில்* இருந்து, பெரிய கோபுரமான *ராஜ கோபுரத்தின்* வழியே யானை மீது தீர்த்தம் கொணர்ந்து *பெரிய திருமஞ்சன* வைபவம் *ஜ்யேஷ்டாபிஷேகம்*!
இன்று பெரியபெருமாளுக்கு *தைலகாப்பு* சாற்றப்படும்! தைலகாப்பு ஆன நாள் முதல், ஒரு மண்டலத்திற்கு திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் சேவை சாதிப்பார்!
நம்பெருமாள்-உபயநாச்சிமார்களுக்கு இன்று தென் திருகாவிரியிலிருந்து கொணர்ந்த தீர்த்தத்தில், முதல் பிரகாரமான *திருவெண்ணாழி* திருச்சுற்றில் *பெரிய ஏகாந்த திருமஞ்சனம்* கண்டருள்வார்!
மறுநாள்(4/7) *பெரிய திருப்பாவாடை தளிகை* பெரியபெருமாள் சன்னதி வாசலில் சமர்ப்பிக்கப்படும். இதில் மா, பலா, வாழை, தேங்காய், நெய் ஆகிமவற்றை சேர்ப்பர். இது மற்ற நாட்களில் கண்டருளும் தளிகையில் குறைபாடுகள் இருந்திருந்தால், அதற்கு பிராயச்சித்தமாக இந்த பெரிய திருப்பாவாடை தளிகை அமுது செய்விக்கப்படுவதாக ஐதீகம்!
"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்டவாயன்*
என்உளம் கவர்ந்தானை*
அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள்*
மற்றொன்றினைக் காணாவே!"
-அமலனாதிபிரான்
(திருப்பாணாழ்வார்)