*28/09/2020*
*முசிறி அண்ணா ஷண்ணவதி தர்ப்பணம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.*
*ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை வரிசைப் படுத்திப் பார்க்கும் பொழுது யுகாதி பற்றிய புண்ணிய காலத்தை பார்க்கிறோம். அதற்கு நடுவில் சில சந்தேகங்களுக்கு பதிலைப் பார்ப்போம்.*
*அதாவது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒருநாள் ஆரம்பித்து அப்படியே ஒரு வருடம் செய்து முடிப்பது என்கின்ற வழக்கம் உண்டா? என்றால் அப்படி கிடையாது. ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை ஆரம்பிப்பதும் ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை முடிப்பதும் என்றெல்லாம் கிடையாது.*
*சந்தியாவந்தனம் எப்படி செய்கிறோமோ அதே போல்தான் இந்த தர்ப்பணங்கள். அதனால் ஒரு வருடத்திற்கு நான் செய்கிறேன் என்று சங்கல்பித்து கொண்டு செய்வது என்பதெல்லாம் கிடையாது, இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.*
*இரண்டாவது, இந்த 96 தர்ப்பணங்களை நாம் குறித்து வைத்துக்கொண்டு அப்பப் பொழுது பார்த்து செய்துகொண்டு வருகிறோம். சில காரணங்களினால் நடுவில் செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது அதற்கான பரிகாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.*
*எதனால் அது விட்டுப் போகிறது என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மூன்றுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.*
*தீட்டு நடுவில் வந்தால் அந்த புண்ணிய காலங்கள் விட்டு போகலாம் 10 நாள் தீட்டு ஒருவர் காக்க நேரிடுகிறது என்றால், அதற்கு நடுவில் ஒரு புண்ணிய காலம் வருகிறது அந்த தீட்டு முடிந்து அந்த புண்ணிய காலத்தை செய்ய வேண்டுமா என்றால் வேண்டியதில்லை.*
*தாயார் தகப்பனார் களுக்கு செய்யக்கூடிய ஸ்ராத்தம் நடுவில் வந்தால், தீட்டு போகக்கூடிய அன்று அதை செய்தே ஆக வேண்டும். ஆனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு வரும்போது தீட்டுக்கு நடுவில் அவைகள் வந்தால், அந்த தர்ப்பணங்கள் கிடையாது தீட்டுக்கு நடுவில். அது விடப்பட்டு போய்விடுமே என்றால் அங்குதான் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.*
#ஒரு_ஜீவனை_உத்தேசித்து_நாம்_தீட்டுக் #காத்துக்_கொண்டிருக்கிறோம். #அதனாலேயே_இந்த_தர்ப்பணம்
#செய்ததாக_ஆகிறது_என்று_தர்ம #சாஸ்திரம்_காண்பிக்கிறது. நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கும் பொழுது என்ன விதமான நியமங்களில் இருக்கிறோமோ அதே நியமங்கள் தான் நாம் தர்ப்பணம் செய்யக்கூடிய தினத்திலும் கடைபிடிக்கிறோம்.*
*அதாவது ஒரு காலம்தான் போஜனம் செய்ய வேண்டும் மற்ற இடங்களுக்குப் போய் சாப்பிடக்கூடாது. இந்த நியமங்கள் தீட்டு காலத்திலும் உண்டு. தர்ப்பணம் மட்டும்தான் கிடையாதே தவிர மற்ற எல்லா நியமங்களும் ஒன்றாகத்தான் இருக்கும். அதனாலே அந்த தீட்டு காலத்தில் வரக்கூடிய அமாவாசையும் மற்ற புண்ணிய காலங்கள் செய்ய வேண்டியதில்லை, தீட்டு காலம் முடிந்த பிறகும் கூட, அதற்கு #கால_பிரயத்தம் என்று பெயர்.*
*அதுதான் காலம் இப்போது அம்மாவாசை இருக்கிறது என்றால், அப்போது நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால், அம்மாவாசை போன பிறகு நாம் அதை செய்யக்கூடாது. அந்தக் காலம் தான் முக்கியம். அந்தக் காலம் விட்டு போனது என்றால் விட்டு போனது தான். இதுபோன்ற காலங்களில் விட்டுப்போனால் தோஷமில்லை.*
*அதேபோல் இரண்டாவது காரணம் ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வியாதிகள் வந்தால். மருத்துவமனையில் போய்ச் சேர்ந்துவிட்டோம் எழுந்திருக்க முடியவில்லை என்ற காரணத்தினால். இது போன்ற காரணங்களினால் சில புண்ணிய காலங்கள் வரும் பொழுது நாம் செய்ய முடியவில்லை என்றால் அப்போது என்ன செய்வது அதற்காக சில மந்திரங்களை சொல்லி இருக்கிறார்கள்.*
*ஒவ்வொரு புண்ணிய காலங்களிலும் அந்த தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில், அதற்குப் பரிகாரமாக சில மந்திரங்களை காண்பித்திருக்கிறார்கள் அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்யப்படும். ஒரு மந்திரத்தை காண்பித்து குறிப்பிட்ட எண்ணிக்கையும் சொல்லியிருக்கிறார்கள்*
*இந்த மந்திரத்தை 12 அல்லது 108 முறை ஜெபம் செய்யவேண்டும் என்று காண்பித்து இருக்கிறார்கள். அதை ஜெபிக்கவேண்டும் அன்றைய தினம் சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். நோயுற்றவன் அதுபோல்தான் இருப்பார் கஞ்சி குடித்துக் கொண்டு. ஆகையினாலே அது விட்டு போனதாக ஆகாது தோஷமில்லை.*
#ஏதோவொரு_பிரயாணத்தின் மூலமாகவோ அல்லது மறதியின் மூலமாகவோ விடுபட்டு போகிறது, என்றால் அதற்கு #தோஷம்_ஜாஸ்தி. நமக்குத் தெரிந்தே அது விட்டுப் போகிறது என்றால் #அதற்கு_பரிகாரம் #சமுத்திர_ஸ்நானம். காயத்ரி மந்திரம் சொல்லி விட்டு போனதற்கான மந்திரங்களையும் சொல்லி சமுத்திர ஸ்நானம் மூலமாக அந்த பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.
*நமக்கு உடனே என்ன தோன்றும் இவ்வளவு பொறுப்புகள் இருக்கும் போது இதை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று, மன்வாதி புண்ணிய காலம் வருகிறது உத்தியோகம் காரணமாக நாம் எங்கோ இருக்கிறோம் நமக்கு தெரியவில்லை, எடுத்துக்கொண்டு அதை ஏன் விட்டு விடுவானே என்று செய்யாமலேயே இருந்து விடுகிறோம். #செய்யாமல் #இருந்தால்_இன்னும்_பாவங்கள் #ஜாஸ்தி.
*ஆகையினாலே புத்திபூர்வமாக அதை விடக் கூடாது. அந்த ரிங் மந்திரம் இருக்கிறது. வாத்தியாரை வைத்துக்கொண்டு அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போனால் என்ன விதமான ரிங் மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இந்த 96 தர்ப்பணங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.*
எந்தெந்த காலங்களில் நமக்கு தர்ப்பணங்கள் விட்டு போய்விட்டதோ அதற்கான ரிங் மந்திரங்கள் என்ன, அந்த மந்திரங்களுக்கு ஆன அர்த்தங்கள் என்ன, என்பதை தனியாக நாம் கடைசியில் பார்க்கலாம்.
இப்பொழுது யுகாதி புண்ணிய காலம் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். இவை விட்டுப் போகாமல் நாம் செய்ய வேண்டும் என்பதை வைத்துக் கொள்ள வேண்டும். #எந்த_ஒரு_புண்ணிய #காலத்திற்கும்_ஒரு_நியமம் #வைத்துக்கொள்ள_வேண்டும். #தர்ப்பணம்_நாம்_செய்த_பிறகு #இன்னொருவர்_வீட்டிலே_போய் #போஜனம்_செய்யக்கூடாது_தர்ப்பணம்
#தினமன்று_நாம்_வெளியில்_போக #வேண்டிய_நிலைமை_ஏற்படுமேயானால்_நாம்_கையிலே_ஆகாரம்_எடுத்துக் #கொண்டு_போய்விட_வேண்டும். #அல்லது_போகின்ற_இடத்திலே_நாமே #ஆகாரம்_செய்து_சாப்பிட_வேண்டும்.
முக்கியமாக இன்னொருவர் வீட்டில் இன்னொருவர் சமைத்து நாம் சாப்பிடக்கூடாது என்பது வைத்துக்கொள்ளவேண்டும். அதே நாளில்தான் கூடுமானவரையில் புண்ணிய காலங்களில் நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கின்ற நியமங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.
*இந்த யுகாதிக்கும் மாத பிறப்பிற்கும் சம்பந்தம் உள்ளது. அவைகள் தனியாக இருக்கின்றன என்று நினைக்காமல் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.