சமாஸ்ரயணம் , சிவ தீட்சை செய்து கொண்டவர்கள் தனது உறவினர்,நண்பர், மற்றும் குடும்பத்திற்க்கு வேண்டிய தூரத்து உறவினர் பரமபதித்துவிட்டால் அண்ணாருடைய தசாகத்தில் போஜணம் செய்யலாமா? சில வாத்தியார்கள் கூடாது எங்கிறார்களே. இதை பற்றி பெரியோர்களின் கருத்தை தெரிந்துகொள்ளளாமே.
Announcement
Collapse
No announcement yet.
சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
Collapse
X
-
Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
Sri:
சமாஸ்ரயணம் , சிவ தீட்சை செய்து கொண்டவர்கள் தனது உறவினர்,நண்பர், மற்றும் குடும்பத்திற்க்கு வேண்டிய தூரத்து உறவினர் பரமபதித்துவிட்டால் அண்ணாருடைய தசாகத்தில் போஜணம் செய்யலாமா? சில வாத்தியார்கள் கூடாது எங்கிறார்களே. இதை பற்றி பெரியோர்களின் கருத்தை தெரிந்துகொள்ளளாமே
As per my opinion, "sAmshrayaNam" is a purification karma for all past sins
then he/she has to keep the body pure on their own effort to maintain the purity.
So, such a person can avoid partaking food wherever he feels it is necessary
but it is not a point from 'Shastra'.
nvs
Comment
Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
Sri:
Whether Aksharabyasam/vidyarambham which is prescribed as one of the samskarams is common for both male and female child. Some say this samskaram is only for male child. Pl clarify
It can be done or not done for male or female.
nvs
Comment
Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
ஶ்ரீ:
ஸ்வாமின் பரண்யாசம் பற்றி சிறிது விளக்கமாக கூறுங்களேன்
சின்ன சின்ன சந்தேஹங்களில் கேட்கக்கூடிய கேள்வியா இது?
ஆயினும் சொல்கிறேன் புரிந்துகொள்ள முயலுங்கள்.
1. எல்லா ஜீவராசிகளுமே ஆனந்தமாக இருக்கவே விரும்புகின்றன.
உலகிலுள்ள அனைத்து வஸ்துக்களுமே (ஜீவ, ஜட வஸ்துக்கள்) ஜாதி, மத பேதமின்றி
சரணாகதிக்குத் தகுதியுள்ளவைதான்.
2. மாயையினால் ச்ருஷ்டிக்கப்பட்ட இந்த உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களுமே
முதலில் இன்பமாகத் தோன்றினாலும், முடிவில் ஏதோ ஒரு வகையில் துக்கத்தையே அளிக்கின்றன - என்கிற
உண்மை ஒவ்வொன்றையும் அநுபவித்த பிறகே தெரிகிறது. அநுபவமும் அறிவும் மீண்டும் மறந்தும்போகிறது!
"ஒட்டகமானது கள்ளிச்செடியில் உள்ள ருசிக்கு ஆசைப்பட்டு, அதில் உள்ள முள்ளைப் பொருட்படுத்தாது
ரத்தம் சொட்டச் சொட்ட சுவைத்து உண்ணுமாம்" - அதுபோல் இந்த உலகில் உள்ள சொந்த பந்தங்களின்மேல்
உள்ள ஆசையினால் - பற்றுதலினால் பலவித துன்பத்தை அநுபவித்தாலும் தொடர்ந்து அதிலிருந்து மீண்டு வரவேண்டும்
என்ற எண்ணமின்றி உழல்கிறோம்.
3. பகவத் கடாக்ஷத்தால் - விதிவசத்தால் சத்சங்கம் ஏற்பட்டு - உலக பந்ததத்திலிருந்து விடுபட்டு
ரஜோ - தமோ சம்பந்தமில்லாத, சுத்தஸத்துவமான அந்த மோக்ஷம் ஒன்றே துக்கம் கலவாத ப்ரம்மானந்தம்
என்ற ஜ்ஞானம் ஏற்பட்டவன், அந்த மோக்ஷத்தை அடைய பல உபாயங்களைத் தேடுகிறான்.
4. பக்தி, கர்மா, ஜ்ஞானம் என பலமார்கங்கள் உபதேசிக்கப்பட்டிருந்தாலும் அவை யாவும் அநுஷ்டிக்கும் அளவு
ச்ரத்தை, ஜ்ஞானம், பலம் போன்றவை தன்னிடம் இல்லை, பகவானை (மோக்ஷத்தை) அடைய
"ஸாதனமும் நற்பயனும் நானே யாவன்" (அவனே உபாயமும், உபேயமும்) என்கிற ஜ்ஞானத்தை அடைந்தவன்
அ. ஆநுகூல்யஸ்ய சங்கல்ப: - நின்னருளாம் கதியன்றி மற்றொன்றில்லேன் - பகவானுக்குப் பிடித்ததை மட்டுமே செய்வேன்.
ஆ. ப்ரதி கூல்யஸ்ய வர்ஜனம் - நெடுங்காலம் பிழைசெய்த நிலை கழிந்தேன் - பகவானுக்குப் பிடிக்காதவற்றை செய்திருந்த நிலை மாறிவிட்டேன் (பிடிக்காதவற்றை இனி செய்யேன்).
இ. ரக்ஷிஸ்யதிதி விஸ்வாஸ: - உன்னருளுக்கினிதான நிலை உகந்தேன் - நீயே (பகவானே) என்னை ரக்ஷிக்கக்கூடியவன் என்பதில் மிகுந்த விச்வாசம் உடையவனாய் உள்ளேன்.
ஈ. கோப்த்ருத்வே வரணம் ததா - வானவர்தம் வாழ்ச்சி தர வரித்தேன் உன்னை - மோக்ஷத்துக்கு உபாயமாக உன்னையே வரிக்கிறேன்.
உ. கார்பண்யம் - இன்னருளால் இனி எனக்கோர் பரம் ஏற்றாமல் - உன்னை அடைய செய்யக்கூடிய காரியம் என்னால் எதுவும் இயலாது (உன்னைச் சரணடைவதைத் தவிர)
என்திருமால் அடைக்கலம்கொள் என்னை நீயே!
என்று தன்னை (ஆத்மாவை) எம்பெருமானிடத்தில் அனைத்தும் அவன் பொருப்பாக (ஆசார்யன் மூலமாக) அளித்தலே சரணாகதியாகும்.
5. சரணாகதி அடைந்தவன்:
ஆத்மா வேறு, சரீரம் வேறு; நான் என்பது சரீரம் அல்ல ஆத்மாதான்; உலக வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்தும் சரீரம் சம்பந்தமானவை;
என்கிற ஜ்ஞானத்தைப் பெற்று, நம் குடும்பம், நம் சொந்தம் என சரீரத்தோடு சம்ப்ந்தப்பட்ட ஒரு சிலரை மட்டும் பாவிக்காமல்,
"வாஸுதேவ குடும்பம்" என்கிற ரீதியில் தான் உட்பட உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அந்த வாசுதேவ குடும்பத்தைச் சேர்ந்தவை என்கிற
பரந்த மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டு, "பரோபஹார்தம் இதம் சரீரம்" என வசுதேவ குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பயன்படும்படியாக
தேஹஅவாசனம் வரை - சரீரம் கழியும் வரை (உயிர் பிரியும்வரை என சரணாகதனுக்குச் சொல்லக்கூடாது) வசுதேவ குடும்பத்திற்காக உழைத்து வந்தால்,
"ந ச புநராவர்ததே" என மீளா லோகமாகிய பரமபத வாசியாகி, எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபட்டு, அந்தமில் பேரின்பத்தில் திளைக்கலாம்.
6. சரணாகதி அடைந்தவன் - இதர தேவதைகளின் ஸந்நிதானத்திற்கு ஏன் போகக்கூடாது?
தேவதைகள் தங்களைத் தேடி வருபவருக்கு தங்கள் சக்திக்கும் இஷ்டததிற்கும் ஏற்றபடி வரமளிக்கக்கூடியவர்கள்.
அந்த வரங்கள் இந்த மண்ணுலகில் வாழும் வாழ்வுக்குச் சாதகமாகி அதை மேலும் நீட்டிக்கும் காரணிகளாகிவிடும்
இதனால், இந்த சரணாகதனுக்கு மோக்ஷ ஸாம்ப்ராஜ்யத்தை அடையும் காலம் நீண்டுகொண்டே போகும்.
"கூவிக்கொள்ளும் காலம் குறுகாதோ" என எம்பெருமானார் விளித்ததுபோல, செயல்படவேண்டும் என்பதற்காகவே
வேறு தேவதைகளின் ஸந்நிதானத்திற்குப் போகக்கூடாது என்று உபதேசிக்கிறார்கள். மற்றபடி அந்த தேவதைகளை அவமதித்தால்
இவனுக்கு நிச்சயம் தோஷம் உண்டு.
தற்போதைக்கு இவ்வளவுதான்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
ஶ்ரீ:
மன்னிக்கவும்!
தாங்கள் "பரந்யாஸம்" பற்றிக் கேட்டிருந்தீர்கள்,
அடியேன் ஒரு பரபரப்பில் "சரணாகதி" பற்றி எழுதிவிட்டேன்.
ஆனால் "பரந்யாஸம்" - "சரணாகதி" இரண்டும் ஒன்றுதான் என்று
எழுதாமல் விட்டதற்காக மன்னிக்கவும்.
பரம் என்றால் - பொருப்பு.
பார்யா என்பவளை பொருப்பாக ஆதரிக்கிறவன் என்பதால் அவனுக்கு "பர்த்தா" என்று பெயர்
நாம் தமிழில் கூட பொருப்புகளை "பாரம்", "சுமை" என்று சொல்கிறோம்.
"ந்யாஸம்" என்றால் விடுவது அல்லது வழங்குவது என்று பொருள்.
ஸம் - நன்றாக
ந்யாஸம் - விடுவது
ஸந்நியாஸம். - எல்லாவற்றையும் முழுவதும் விட்டவன்.
எனவே -
பரம் - பொருப்பு
ந்யாஸம் - விடுவது
பரந்யாஸம் - பொருப்பை எம்பெருமானிடத்தில் அல்லது சரணாகதன் இடத்தில் விடுவது "பரந்யாஸம்" ஆகும்.
தாஸன்,
என்.வி.எஸ்
Comment
Re: சின்ன சின்ன சந்தேகங்கள் / கேள்விகள்
பரம் - பொருப்பு
ந்யாஸம் - விடுவது
பரந்யாஸம் - பொருப்பை எம்பெருமானிடத்தில் அல்லது சரணாகதன் இடத்தில் விடுவது "பரந்யாஸம்" ஆகும்.
ஸ்வாமின் தங்கள் பதில் கண்டபின் தான் கேட்டது எவ்வளவு ஆழமான விஷயம் என்பதைப்புரிந்துகொண்டேன் பரண்யாசம் செய்துகொண்ட பிறகு ஒருவர் நடந்து கொள்ளவேண்டிய முறைபற்றியும் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் விவரமானபதிலுக்கு மிகமிக நன்றி
Comment
copyright 2020- 2025 brahminsnet.com
Powered by vBulletin® Version 5.6.5
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
Copyright © 2024 MH Sub I, LLC dba vBulletin. All rights reserved.
All times are GMT+5. This page was generated at 03:03.
Working...
X
Comment