Announcement

Collapse
No announcement yet.

Aachaaram

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Aachaaram


  மன சித்த சுத்திக்கு "ஆசாரம்" தேவை - ஸ்ரீ மஹா பெரியவா

  இன்றைய நாளில் fashion என்ற பெயரில் , கை, கால் முதலான கர்மேந்திரியங்களுக்கு வேலை கொடுக்காமல் சோம்பேறியாய் கடுமையான ஆசாரங்களை விட்டொழித்தன விளைவு, மனம் சித்த சுத்தி அடைய மாட்டேங்கிறது என்பதையும், "ஆசாரம்" ஏன் தேவை? அது மன சித்த சுத்திக்கு எவ்வாறு முக்கியம் எனபதை ஸ்ரீ பெரியவா மிக அழகாக கூறும் விளக்கம்.  கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந் I
  இந்த்ரியார்தான் விமூடாத்மா மித்யாசார : ஸ உச்யதே II
  (கீதை : 3.6)

  அதாவது :"காரியத்திலா ஞானம் இருக்கிறது? அதெல்லாம் வேண்டாம்" என்று கை, கால் முதலான கர்மேந்திரியங்களுக்கு வேலை கொடுக்காமல் நிறுத்திவிட்டு நேராக மனஸை சுத்தமான தியானத்தில் நிறுத்துவதற்கு ஆரம்பித்தால் என்ன ஆகிறது ? அந்த மனஸ் பரமாத்மாவையா நினைக்கிறது? இல்லை.

  இந்த்ரியார்தான் மநஸா ஸ்மரந் -

  இந்திரியங்களுக்கு வேண்டிய அல்ப ஸுகங்களைத்தான் மனஸு நினைக்கிறது. கர்மாவால் கர்மேந்த்ரியங்களை அழுக்கெடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளாதபோது மனஸும் அழுக்கைவிட்டு மேலே போகாதுதான். வெளியிலே இவன் பெரிய ஃபிலாஸபர், தத்வஞானி, ரிஷி என்றேகூட (இப்போது பத்திரிகைகள் நிறைய ஏற்பட்டபின் எல்லாவற்றுக்கும் அதிசயோக்தி தான்!) பெத்தப் பெயர் இருந்தாலும், லெக்சரிலும் புஸ்தகத்திலும் இவன் எவ்வளவு சோபித்தாலும், இப்படி மனஸிலே அழுக்கை வைத்துக் கொண்டிருப்பவனை பகவான் விமூடாத்மா - 'மஹா மூடன்' என்றுதான் சொல்கிறார். 'மூளையில்லாமல் காரியங்களைக் கட்டிக் கொண்டு அழச் சொல்கிறவர்களிடமிருந்து நம்மையும் நம் மதத்தையுமே ரக்ஷிக்கிற இவர்தான் மஹா புத்திமான்' என்று லோகத்தார் எவரைக் கொண்டாடுகிறார்களோ, அவரையே பகவான் "விமூடாத்மா" என்கிறார். அதற்கும் மேலே இன்னொரு வார்த்தை சொல்கிறார்.

  மித்யாசார :

  மித்யா என்றால் நிஜம் போல இருந்து கொண்டே பொய்யாகப் போகிற வேஷம் என்று அர்த்தம். ஆசாரமே வேண்டாமென்று இருக்கிற வாய் வேதாந்தியை 'மித்யாசாரன்' என்கிறார். இவன் கர்மாவை விட்டு விட்டான். 'மனஸ் சுத்தம்தானே எல்லாம்?' என்கிறான். ஆனாலும் இவன் மனஸ் அழுக்கிலேயே கிடக்கிறது. வெளியே வேதாந்தி போல வேஷம் போடுகிறான். இப்படி வெளியே ஒன்றாகவும் உள்ளே வேறாகவும், உயர்ந்த லக்ஷ்யத்தைப் பேசிக்கொண்டும் கீழான ஒழக்கத்தில் போய்க்கொண்டும் இருப்பதால் 'மித்யாசாரன்' என்கிறார். 'மித்யாசாரன்' என்பதற்கு ஸரியான வார்த்தை hypocrite.  காரியம் பண்ணப் பிடிக்காத சோம்பேறித்தனம், ஒரு ஒழுக்கத்தில் கட்டுப்பட்டிருக்கப் பிரியமில்லாமை - இதற்காகவேதான் "Vedanta, Vedanta" என்று சாஸ்திர கர்மாவிலிருந்து பிரித்துப் பேசுகிறார்கள். உள்ளே பார்த்தால் - இதைச் சொல்ல ரொம்ப வருத்தமாயிருக்கிறது - எந்தக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இவர்கள் போயிருப்பதால் அநேக lapses* (*தமிழில் சொன்னால் கடுமையாய் தொனிக்குமென்றே, ஸ்ரீ பெரியவா "lapses " என்று சொன்னதாக சொல்கிறார்கள்.) இருப்பது தெரிகிறது. ஆசாரக்காரர்கள் மூடர்களாயிருக்கட்டும், ஸ்வயநலக் கும்பலாயிருக்கட்டும், இரக்கமேயில்லாத துஷ்டர்களாகத்தான் இருக்கட்டும். ஆனால் அவர்களிடம் இப்படிப்பட்ட lapses இருப்பதில்லையல்லவா? அதுதான் discipline (நெறி) என்பதன் சக்தி.

  ஆகக்கூடி பலவிதமான ஆசாரச் சீர்திருத்தங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்த்தோமேயானால், பழைய ஒழுக்கத்தையும் காரியங்களையும் எடுத்துவிட்டுப் புதியதை வைத்தால், பழசை மீறிய பழக்கத்தில் புதிசையும் மீறிக் கட்டுப்பாடில்லாமல் போகிறார்கள். இவர்கள் காரியம் என்று பண்ணுவதெல்லாம், ஸ்வயலாபம், 'தான்' என்கிறதை வளர்த்துக்கொள்வது என்பதற்காகத்தான் ஆகிறது.

  ஆசாரங்கள் கடுமையாக இருக்கிறதென்று இளக்கி, ஃபாஷன் பண்ணினால் பலனும் இளகி ஓடியே விடுகிறது. சித்த சுத்தி ஏறப்பட மாட்டேன் என்கிறது. "கார்யத்தில் ஒன்றுமில்லை; வேதாந்தா" என்றால் வெறும் சோம்பேறியாகப் போகிறான்; அப்போது மனஸ் சுத்தமாகாமல் போகிறது என்பது மட்டுமின்றி, இருக்கிற சுத்தமும் போய் அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. ஆசாரமில்லாமலிருக்கிற அநாசாரம்;ஆசாரக் கட்டுப்பாடு போனதால் கண்டதைத் தின்பது, குடிப்பது, கலஹம் செய்வது, இன்னும் மஹாபாபங்களைப் பண்ணுவது என்கிற துராசாரம்;உள்ளன்றும் புறமொன்றுமாக ஹிபாக்ரிஸி செய்யும் மித்யாசாரம் என்பவைதான் மொத்தத்தில் விருத்தியாகின்றன.


  Source:KN Ramesh
Working...
X