உலக பிராமணர்கள்
ஸ்ரீ காமகோடி என்பவர் பிரமாதமான கார்யம் செய்து வருகிறார்.
சென்னை அருகில் செங்கல்பட்டு வட்டம் ஆத்தூர் எனும் ஊரில் வேத பாடசாலை ஒன்றை அமோகமாக நிர்வகித்து நடத்தி வருகிறார். பாடசாலை விவரங்களை கேட்டப்போது நான் ஆச்சர்யப்பட்டு விட்டேன்.
நீங்களே விவரங்களை சற்று பாருங்களேன்...அசந்து போய் விடுவீர்கள்.
1. பாடாசாலை மொத்தம் 10 க்ரவுண்டில் அமைந்துள்ளது. தனது சொந்த காசில் வாங்கியுள்ளார். கட்டிடமும் தன் சொந்த சேமிப்பின் மூலம்தான்.
2. பாடசாலையில் மொத்தம் படிக்கும் வித்யார்த்திகளின் என்ணிக்கை: 31.
3. பாடசாலையுடன் கோசாலை. அதில் பசுக்களின் எண்ணிக்கை 22.
4. காமாக்ஷி அம்மன் கோவிலும் அமைத்து சமீபத்தில் கும்பாபிஷேகமும் விமர்சையாக நடந்துள்ளது.
5. இந்த வருஷத்திலிருந்து மஹா பெரியவா ஆராதனையும் நடந்து வருகின்றது.
6. பாடசாலை வித்யார்த்திகளுக்கு ப்ரதானமான வேத பாடத்தை தவிற மேற்கொண்டும் ஆங்கில, சம்ஸ்க்ருதமும் கற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் மாத சம்பளத்தில் ஒரு கம்பேனியில் பெரிய பொறுப்பில் வேலை செய்து வரும் இவர் தனது சொந்த சேமிப்பிலிருந்து பணத்தை போட்டுத்தான் இவ்வளவையும் நடத்தி வருகிறார்.
மாதாமாதம் கிட்டத்தட்ட 2 லக்ஷம் ரூபாய் தேவைப்படுகின்றது. அத்யாபகர் சம்பளம், மேனேஜர், சமையல்காரர், மளிகை, கட்டிட பரமாரிப்பு, ஆலய நிர்வாகம், கோசாலைக்கான செலவுகள் போன்றவைகளும் இதில் அடக்கம்.
பெயருக்கு ட்ரஸ்ட் இருந்தும் கார்ப்பஸ் ஃபண்ட் எதுவும் இல்லை.
ஸ்ரீ காமகோடி தற்போது ச்ரமப்பட்டுத்தான் இந்த சுக்ல யஜுர்வேத பாடசாலையை நிர்வகித்து வருகிறார்.
முடிந்தவர்கள் உதவி செய்யலாமே...
ஸ்ரீ காமகோடி: ஃபோன்: 98844 02624
Email: scvgtrust@gmail.com
Contributions can be sent directly to them.
நன்றி : Sarma Sastrigal

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends