ஆன்மிக கேள்வி - பதில்!
* விநாயகர் அகவலை இயற்றியவர் யார்? -- ஔவையார்.
* திருவாரூர் கமலாலயக் குளக்கரையில் உள்ள விநாயகர் பெயர் என்ன? -- மாற்று உரைத்த விநாயகர்.
* சந்தானக் குரவர்கள் யாவர்? -- மெய்கண்டார், மறைஞான சம்பந்தர், அருனந்தி சிவாச்சாரியார், உமாபதி சிவம்.
* சைவ சமயக் குரவர்கள் யாவர்? -- திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்.
* பெருந்தமிழன் என்று தன்னைக் கூறிக்கொண்ட ஆழ்வார் யார்? -- பூதத்தாழ்வார்.
* திருவிண்ணகரம் என்று அழைக்கப்படும் தலம் எது? -- உப்பிலியப்பங்கோவில்.
* பைந்தமிழின் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல் என்று திருமாலைப் புகழும் நூல் எது? -- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்.
* திருவாவினங்குடி தலத்தின் தற்போதைய பெயர் எது? -- பழனி.
-- தினமணி வெள்ளிமணி,..11 - 5 - 2012.
-- இதழ் உதவி: K.கண்ணன், செல்லூர்.
Posted by க. சந்தானம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends