லக்கினம் என்பது முதல் வீடு, ஆதலால் -1 என்று குறிப்பிட படும்.
கேந்திரம் என்பது=1,4,7,10ம் வீடுகள்.
பணபரம் என்பது-2,8,5,11ம் வீடுகள்.


ஆபோக்லிபம் என்பது-3,6,9,12ம் வீடுகள்.
திரிகோணம் என்பது- 1, 5,9ம் வீடுகள்.
உபஜயம் என்பது-3,6,10,11ம் வீடுகள்.


ஆண் ராசிகள்=மேஷம், , மிதுனம், சிம்மம், துலாம், தனுசு,கும்பம்.
பெண் ராசிகள்= ரிஷபம், கடகம், கன்னி, விருக்கிகம், மகரம், மீனம்.


பெண் ராசியில் பெண் பிறந்தால் பெண்ணாக இருப்பர்,
ஆண் ராசியில் ஆண் பிறந்தால் ஆணாக இருப்பர்.


ஒற்றை ராசிகள்:- மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்.
இரட்டை ராசிகள்:- ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.


குரு 100 சதவிகிதம் சுப கிரஹம்.
சுக்கிரன் 75% சுப கிரஹம்.
வளர்பிறை ஏகாதசி முதல் தேய்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% சுபன்.
வளர் பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன்-சம நிலை-50% சுபன்.
இந்த சம நிலையில் சந்திரன் சுபருடன் சேர்ந்தால் சுபன்; ப்பாபியுடன் சேர்ந்தால் பாபி.
தேய்பிறை சஷ்டி முதல் தசமி வரை சந்திரன் சம நிலை-50% சுபன்.
தேய் பிறை ஏகாதசி முதல் வளர்பிறை பஞ்சமி முடிய சந்திரன் 100% பாபி.


புதன் ஒரு ராசியில் தனியாக இருந்தால் 50%ஸுபன்.
சுப கிரஹங்களான குரு, சுக்கிரன், வளர் பிறை சந்திரனுடன் சேர்ந்தால் 50% சுபன்.
அசுப கிரஹங்களான சூரியன், செவ்வாய், சனி, தேய் பிறை சந்திரன், ராஹு, கேது
இவர்களுடன் சேர்ந்தால் 50% அசுபன்.


நக்ஷத்திரங்களின் விசேஷ குணங்கள்.
மிருது நக்ஷத்திரங்கள்:-மிருகசீரிடம், சித்திரை, அனுஷம், ரேவதி.
துரித நக்ஷத்திரங்கள்:- அசுவினி, ஹஸ்தம், மூலம்.
ஸ்வபாவ நக்ஷத்திரங்கள்_:-கார்த்திகை, விசாகம்.
சர நக்ஷத்திரங்கள்:- சுவாதி, திருவோணம், புனர்பூசம், அவிட்டம், சதயம்,
ஸ்திர நக்ஷத்திரங்கள்:- உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதி.
உக்கிர நக்ஷத்திரங்கள்:- பரணி,மகம், பூரம், பூராடம், பூரட்டாதி.
உச்ச நிலை நக்ஷத்திரங்கள்:- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்.
கீழ் நிலை நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, கார்திகை, மகம், பூரம், மூலம், பூராடம்,உத்திராடம்.
இடை நிலை நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், அவிட்டம்
சுவாதி விசாகம், அனுஷம், கேட்டை, திருவோணம், சதயம்,பூரட்டாது, உத்திரட்டாதி, ரேவதி.


மேல் நோக்கு நக்ஷத்திரங்கள்:- பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம்,பூரட்டாதி.


கீழ் நோக்கு நக்ஷத்திரங்கள்:- ரோஹிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம்,திருவோணம்,
அவிட்டம், சதயம்,உத்திரட்டாதி.


சம நோக்கு நக்ஷத்திரங்கள்:- அசுவுனி, மிருகசீர்ஷம்,புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம்,
கேட்டை, பூராடம், ரேவதி.


ஆண் நக்ஷத்திரங்கள்:- அசுவதி, பரணி, ரோஹிணி;ஆயியம், மகம், உத்திரம்,சித்திரை, சுவாதி,
பூராடம்,பூரட்டாதி, உத்திரட்டாதி.


பெண் நக்ஷத்திரங்கள்:- கார்த்திகை, மிருகசீர்ஷம்,திருவாதிரை, புனர்பூசம், பூசம்,பூரம், ஹஸ்தம்.
விசாகம், அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி.


அலி நக்ஷத்திரங்கள்:- மூலம், கேட்டை.


கண்டாந்த நக்ஷத்திரங்கள்:- அசுவதியின் ஆரம்பம், ரேவதியின் கடைசி, ஆயில்யம் கடைசீ மகம் ஆரம்பம்,
கேட்டையின் கடைசீ மூலத்தின் ஆரம்பம். ஆகியவைகள்.


தனிஷ்டா பஞ்சமி :- அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய இந்த 5 நக்ஷத்திரங்களில்
ஏதேனும் ஒன்றில் யாராவது இறந்தால் அந்த வீடு 6 மாதங்களுக்கு பூட்டி வைக்க பட வேண்டும்.


உத்திரகாலாம்ருதம் புத்தகம் சொகிறது:- புதன்-பூமி தத்துவம்.
சந்திரனும், சுக்கிரனும் ஜல தத்துவம்;
செவ்வாயும், சூரியனும் நெருப்பு (அக்னி) தத்துவம்,
குரு-ஆகாயம் தத்துவம், சனி வாயு தத்துவம்.
மேஷம்0-30*;ரிஷபம்30-60*; மிதுனம்60-90* கடகம்90-120*
சிம்மம்120-150*; கன்னி150-180*;துலாம் 180-210* விருச்சிகம்210-240;
தனுசு240-270*; மகரம்270-300*;கும்பம்300-330* ;மீனம்330-360*
டிகிரீஸ்=பாகை.


சூரியன் 10ஆவது பாகையில் உச்சபலம்-100%
சந்திரன் 33ஆவது பாகையில் உச்ச பலம்-100%
செவ்வாய் 298 ஆவது பாகையில் உச்சபலம்-100%
புதன் 165 ஆவது பாகையில் உச்சபலம் 100%Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
குரு 95ஆவது பாகையில் உச்சபலம்-100%
சுக்கிரன் 357ஆவது பாகையில் உச்ச பலம்-100%
சனி 100 ஆவது பாகையில் உச்சபலம்-100%
மற்ற பாகைகளில் உச்சபலம் மாறுபடும்.


சூரியன் 190ஆவது பாகையில் உச்சபலம்-0%
சந்திரன் 213ஆவது பாகையில் உச்ச பலம்-0%
செவ்வாய் 118ஆவது பாகையில் உச்சபலம்-0%
புதன் 345 ஆவது பாகையில் உச்சபலம்-0%
குரு 275 ஆவது பாகஒயில் உச்சபலம்-0%
சுக்கிரன் 177ஆவது பாகையில் உச்சபலம்-0%
சனி 21 ஆவது பாகையில் உச்சபலம்-0%.
0 பாகையிலிருந்து உச்ச பாகை நோக்கி படிபடியாக பலம்
கூடிக்கொண்டே சென்று உச்சபலமான 100 தொட்டு முடித்ததும்
படிபடியாக குறைந்து கொண்டே வந்து 0 பலத்தை அடையும்.
யுக்மா யுக்ம பலம்:- சூரியன்,செவ்வாய், குரு, சனி ஆண் ராசி என்னும்
ஒற்றைபடை ராசியில் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.
இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால் அதன் பலம் 0 ஆகும்.
சந்திரன், புதன் சுக்கிரன் இரட்டைபடை ராசி எனும் பெண் ராசியில் இருந்தால்
அதன் பலம் 25 ஆகும். ஒற்றைபடை ராசியான ஆண் ராசியில் இருந்தால்
அதன் பலம் 0 ஆகும்.
கேந்திர பலம்:- 1,4,7,10 எங்கிற கேந்திர ஸ்தாநங்களில் கிரஹங்கள் இருந்தால்
அதன் பலம் 100 ஆகும்.
2,5,8,11, ஆகிய பணபர ஸ்தானத்தில் கிரஹங்கள் இருந்தால் அதன் பலம் 50 ஆகும்.


3,6,9,12 எனும் ஆபோக்லிப ஸ்தாநங்களில் கிரகங்கள் இருந்தால் அதன் பலம் 25 ஆகும்.
மூல த்ரிகோண வீடுகள்:-


சூரியனுக்கு சிம்மம்,ஆக்ஷி வீடு, மூல த்ரிகோண வீடும் இதுவே.பலம்100%.
சந்திரனுக்கு ,ஆக்ஷி வீடு-கடகம்,--பலம் 75% உச்சமும், மூல த்ரிகோணமும் ரிஷபம்.
செவ்வாய்க்கு ஆக்ஷி வீடு-மேஷ,விருச்சிகம்- மூல த்ரிகோணம் மேஷம்-ஆக செவ்வாய் மேஷத்தில்
இருந்தால் 100 பலமும், விருச்சிகத்தில் இருந்தால் 75 பலம்.


புதன்- ஆக்ஷி வீடு:-மிதுனம்-75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோணமும், உச்சமும் கன்னி 100 பலம்.
குரு- ஆக்ஷி வீடு-தனுசு, மூல த்ரிகோணமும் இது தான் ஆதலால்100 பலம். மீனத்தில் ஆக்ஷி 75 பலம்.
சுக்கிரன்:-ஆக்ஷி-ரிஷபத்தில் 75 பலம், ஆக்ஷியும், மூல த்ரிகோண மும் மீனத்தில் 100 பலம்.
சனி:- மகரம் ஆக்ஷி வீடு 75 பலம், கும்பம் ஆக்ஷியும், மூல த்ரிகோணமும் 100 பலம்.


மீனத்தில் சுக்கிரன் உச்சம், அதை கன்னியில் இருக்கும் சனி பார்ப்பதால் சுக்கிரனின் உச்ச தன்மை போய் விடுகிறது.
லக்கினத்தின் 12 ஆவது வீடு விரய ஸ்தானம் -இதில் உதாரணமாக ரிஷப லக்கினம்- மேஷம் 12 ம் வீடு, சூரியன் இதில் உச்சம் . ஆனால் விரய ஸ்தானம் ஆவதால் உச்ச பலம் இல்லை. இதை தற்போது உள்ள கம்ப்யூட்டர் சொல்லாது.
நாம் தான் பார்த்து பலன் சொல்ல வேண்டும். கம்பூயூடர் உச்சம் என்றே உள்ள பலங்களை சொல்லும்.
ஒரு உச்சனை மற்றொரு உச்சன் பார்த்தாலும் உச்ச பலம் போய்விடும். இரவில் கார் ஓட்டும்போது எதிரே
வரும் வண்டியும், நீங்களும் சர்ச் லைட் போட்டால் வண்டி ஓட்ட முடியாது. ஒருவர் அணைக்க வேண்டி உளது.


டார்ச் லைட் வெளிச்சம் டார்ச் லைட் இருக்குமிடத்தில் வெளிச்சம் தெரியாது. சற்று தூரத்தில் தான் தெரியும். அது போல்
தான். கிரங்களின் பார்வை , தான் இருக்குமிடத்திலிருந்து தள்ளி பார்வை வீசுகிறது.


குரு தான் இருக்கும் வீட்டிற்கு நன்மை செய்யாது. பார்வை-5,7,9 தான் நன்மை செய்யும். சனி தான் இருக்கும் வீட்டிற்கு
நன்மை செய்வார், 3,7,10 பார்வை கெடுதல் செய்யும்.


திக் பலம்:-
சூரியன், செவ்வாய் இருவரும் பத்தாம் வீட்டில் திக் பலம் பெறுவர்.
மகர லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் சூரியன் நீசம் அடைந்தாலும், சூரியன் இங்து இருப்பவர்களுக்கு திக் பலம் உண்டு,
துலா லக்ன காரர்களுக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் நீச மடைந்தாலும் சூரியன் இங்கு இருந்தால் திக் பலம்
என்ற அமைப்பில் பலம் பெறுவர். சனி லக்னத்திலிருந்து 7ம் வீட்டில் இருந்தால் திக் பலம் பெறுவர்.


சந்திரனும், சுக்கிரனும் 4 ஆம் இடத்தில் திக் பலம் பெறுகிறார்கள். புதனும், குருவும் லக்னத்தில் திக் பலம் பெறுவார்கள்.