08/03/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்ற ஒரு முக்கியமான அனுஷ்டானத்தில் நாம் உபயோகிக்கக் கூடிய மந்திரத்தின் பெருமைகளை பற்றி மேலும் தொடர்கிறார்.*


*அதில் முதல் மந்திரம், இந்த மந்திரம் காயத்ரி என்கின்ற சந்தஸ் மீட்டரில் அமைந்துள்ளது. இந்த மந்திரம் என்ன பிரார்த்திக்கின்றது என்றால், தாதா என்ற தேவதையானவர், எங்களுக்கு நல்ல ஐசுவரியத்தை கொடுக்கட்டும். குழந்தை என்கின்ற ஐஸ்வர்யம் தான் அது. இதுபோல் ஒரு நல்ல புத்திரன் அல்லது புத்திரி என்கின்ற தனத்தை நமக்கு கொடுப்பவர், தாதா தான். எப்படிப்பட்டவர் தாதா, ஈசானஹா - அனைத்தையும் சாதிக்க கூடியவர். அனைத்து அர்த்தங்களையும் கொடுப்பவர் ஈசானஹா பரமேஸ்வரன் ஆன தாதா தான்.*

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
*அந்த ஈஸ்வரன் ஆன தாதா முக்கியமாக ஐஸ்வர்யம் ஆன புத்திரனை எனக்கு கொடுக்க வேண்டும் அவர். அவரால் கொடுக்க முடியும். ஜஹதஹா பதிஹி. நாயக்கர் இந்த உலகத்திற்கு இராஜாவான தாதா பரமேஸ்வரன் தான்.*


*_இராஜா என்று இந்த தேசத்தில் நாம் யாரை சொல்கிறோம், பரமேஸ்வரன் தான் இராஜா. பரமேஸ்வரன் தான் பணக்காரன். பரமேஸ்வரன் தான் நம் அனைவருக்கும் தகப்பனார். பரமேஸ்வரன் தான் நமக்கு நல்ல ஆசிரியர். பரமேஸ்வரன் தான் நமக்கு நல்ல ஆலோசகர். இப்படி அனைத்துக்கும் நாயகனாக இருந்து இந்த உலகத்தை நடத்துபவர், பரமேஸ்வரன் ஆன தாதா தான்._*


*அப்படிப்பட்ட பரமேஸ்வரன், நம்மை பூர்னேன வாவததூ பூரணமாக இந்த உலகத்தில் வாழ வைக்க வேண்டும் எந்த விதத்திலும் குறைவில்லாமல் முக்கியமாக, குழந்தைகள் இல்லை என் என்ற ஒரு குறைபாடு இல்லாமல், பரமேஸ்வரன் ஆனவன் பூரணமாக நம்மை ஆக்க வேண்டும். இப்படி முதல் மந்திரம் பிரார்த்திக்கின்றது*


*_இரண்டாவது மந்திரம், திருஷ்டுப் என்கின்ற சந்தஸ்சில் அமைந்துள்ளது. இந்த தாதாவான பரமேஸ்வரன் பிரஜாயாஹா - இந்த உலகத்தில் பிறக்கக் கூடியதான அத்தனை குழந்தைகளுக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் ஈசஹா - பரமேஸ்வரன். ராயஹா என்றால் தனத்திற்கு அந்தப் பெயர். அறியாத பணம் அதாவது செல்வம் நம்மிடையே எது இருக்கிறதோ அதற்கு ராயஹா என்று பெயர். நம்முடைய நல்ல சந்ததிகள் தான் அழியாத செல்வம்.

அடுத்தடுத்த வாரிசுகள் இருந்தால் நம்முடைய கோத்திரத்தை சொல்லுவான். நம் பெயரை சொல்லுவான். நம்முடைய தலைமுறையை சொல்லுவான். இதுதான் அழியாத செல்வம். உலகத்தில் யார் இவர் என்று கேட்டால், இவர்தான் லட்சாதிபதி என்று யாரையாவது நாம் அறிமுகப்படுத்துவோமா?

இவர்தான் இன்னோவா கார் வைத்துக்கொண்டு இருக்கக்கூடிய பெரியவர் டிரைவர் அப்படி என்றா நாம் சொல்வோம்? இவர் யார் இவர் எந்த ஊரைச் சேர்ந்த இவருடைய பிள்ளை அப்படித்தான் நாம் அறிமுகம படுத்துவோம். நமக்கு இந்த உலகத்தில் ஒரு அறிமுகம் வேண்டும் என்றால் அதை நம்முடைய முன்னோர்கள் தான் கொடுக்கின்றனர். இவர் யார் என்று கேட்டால் இன்னாருடைய பிள்ளை அல்லது இன்ன கோத்திரத்தைச் சேர்ந்தவர் இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தான் உலகத்தில் நாம் அறிமுகப்படுத்துகிறோம்._*


*அப்படிப்பட்ட அறிமுகத்தை நமக்கு ஏற்படுத்துபவர் தாதாவான ஈஸ்வரன் தான். மேலும் இதம் விஸ்வம், இந்த உலகம் அனைத்தும் இருக்கிறதே சிருஷ்டி செய்தவர் அவர் தானே, இந்த உலகத்தையே ஸ்ருஷ்டி செய்தவர் தாதாவான பரமேஸ்வரன் தான்.*


*எப்படி இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்து, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான உணவையும் சிருஷ்டி செய்து அனைத்து ஜீவராசிகளும் சுவாசம் உயிர் வாழ்வதற்கான பலனை கொடுத்த பரமேஸ்வரன், எனக்கு ஒரு புத்திரனை கொடுக்க மாட்டாரா? கட்டாயம் கொடுப்பார்.*


*அப்படிப்பட்ட தாதா பரமேஸ்வரன் ஆனவன், இந்த எஜமானனான எனக்கு நல்ல புத்திரனை கட்டாயம் கொடுப்பார். அந்த தாதாவிற்கு தம்பதியாக

சேர்ந்து நாங்கள் இந்த அவிஸ்யை கொடுக்கிறோம். அவர் எங்களுக்கு இப்பொழுது உற்பத்தி ஆகி இருக்கின்ற இந்த நல்ல வாரிசை ஆரோக்கியமான மனநிலையோடு அந்த குழந்தையை வளரச் செய்து சரியான முகூர்த்தத்தில் அந்த குழந்தை எங்களுக்கு வந்து சேரும்படி இந்த தாதா வானவர் செய்ய வேண்டும். இப்படி இரண்டாவது மந்திரம் பிரார்த்திக்கின்றது. மூன்றாவது மந்திரத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*