Bhudhashtami.
புதாஷ்டமி;- புதன் கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வருவது. 02-06-2021.


எந்த மாதத்திலாவது பெளர்ணமிக்கு பிறகு அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் புதன் கிழமை அன்று அஷ்டமி திதியும் வருமானால் அது புதாஷ்டமி விரதம், அல்லது சற்கதி விரதம் என பெயர்படும். அன்றைய தினம் விரதம் தொடங்க வேண்டும். வெல்ல பாகு மட்டுமே சிறிதளவு உட்கொள்ள வேண்டும். உள்ளங்கையிலே கடைசி மூன்று விரல்கள் கவரும் அளவை போல எட்டு பங்கு சாதம் தான் அவன் உட்கொள்ள வேண்டும்.


மாவிலையை தைத்து அதன் மேல் சாதத்தை கொட்டி , தர்பையால் கிளறி ஆற விட வேண்டும். அம்பிகையை பரிவாரங்களோடு பூஜிக்க வேண்டும். கற்கண்டினால் கலந்து தயாரிக்க பட்ட அன்னத்தை தானம் அளிக்க வேண்டும். விரத கதையை பக்தியுடன் கேட்க வேண்டும்.
புதாஷ்டமி
அக்னி புராணம் 218 ம் பக்கம் உள்ள கதை.


ஒரு சமயம் தீரன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவனது மனைவி ரம்பை . மகன் கெளசிகன், மகள் விஜயை. அவனிடம் ஒரு எருது இருந்தது. அதன் பெயர் தனதன்.
ஒவ்வொரு நாளும் மகன் கெளசிகன் மற்ற பசுக்களுடன் தனது எருதையும் மேய்த்து வர ஓட்டி செல்வான்.
ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் அங்கு வந்து எருதை கவர்ந்து சென்று விட்டனர். அவன் சகோதரி விஜையையும் அவனும் எருதை தேடி நாற்புரமும் சுற்றி திரிந்தனர்.
அவ்வாறு சுற்றி வரும்போது ஒரு ஏரியை அடைந்தனர். அங்கே தேவ லோக மங்கையர் பலர் வந்து நீராடிக்கொண்டிருந்தனர்.
வெகு நேரமாக காளையை தேடி அலைந்து திரிந்ததால் கெளசிகன் மிகவும் களைப்பும் பசியுடனும் இருந்தான். அங்குள்ள தேவ மங்கையர்களிடம் தனக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு வேண்டினான்.
அங்குள்ள மங்கையர் நீர் உம்முடைய தகுதிக்கு ஏற்ப விரதம் இருக்க வேண்டும். அப்போது நாங்கள் உணவளிப்போம் என்றனர்.
கெளசிகனும் அவர்களிடம் விரதம் இருக்க வேண்டிய வழி முறைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதன் படி விரதம் இருந்தான்.
அதன் பலனாக அவனது எருதும் அங்கு வந்தது. உணவும் கிடைத்தது.
பசி நீங்கியதும் தனது எருதுடனும், விஜயையுடனும் வீடு திரும்பினான்.
தீரன் தனது குமாரியை ஒருவனுக்கு மணம் செய்து வைத்தான். காலகிரமத்தில் தீரனின் வாழ்க்கை முடிவடைந்தது.
விரதம் அனுஷ்டித்ததின் பலனாக கெளசிகன் அயோத்தி நகருக்கு அரசனானான்.
தீரனும் அவனது மனைவி ரம்பையும் வாழ் நாள் முழுவதும் வீணடித்து விட்டதால் நரகத்தில் கிடந்து துன்புற்றனர். அதை காண சகிக்காது விஜயை கண்ணீர் விட்டு துக்கித்தாள்.


தன் கணவனிடம் பெற்றோர் துன்பத்தை நீக்கி அருளுமாறு பல முறை வேண்டிக் கொண்டாள். அவள் கணவன் தர்மராஜன் தனக்கு அந்த சக்தி இல்லை என்று கூறி விட்டான். விஜயைக்கு மனம் குமுறுவதை விட வேறு வழி இல்லை.


இவ்விதமிருக்கையில் ஒரு நாள் எதிர் பாரா விதமாக பெற்றோர் நரகத்தை விட்டு நீங்கி செல்வதை பார்த்தாள்.


விஜையைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கணவனிடம் கூறினாள். கணவன் கூறினான். இப்போது உன் தமையன் நல்ல நிலையில் உள்ளான்.
புதாஷ்டமி விரதம் இருந்த பலன் அரச பதவி கொடுத்தது. அவன் மறுபடியும் இரு புதாஷ்டமி விரதம் இருந்து அவற்றின் பலனை தன் பெற்றோர்களுக்கு அளித்தான்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அதன் பலனே உங்கள் பெற்றோர்களின் நரக துன்பத்திலிருந்து கரை ஏற்றியது. என்றான் தர்ம ராஜன்.
இவ்வாறு கணவன் கூறியதை கேட்டதும் விஜயையும் நியமத்தோடு விரதம் இருந்து பூர்த்தி செய்தாள். இதன் பலன் பேரின்ப வாழ்வு பெற்றாள்.


சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி அன்று புனர்பூசம் நக்ஷத்திரமும் கூடி வந்தால்
அன்றைய தினம் அசோக மரத்தின் வேர்கள் எட்டை ஊற வைத்து நீரை மட்டும் உட்கொண்டு எவனொருவன்


விரதம் இருக்கிறானோ அவன் எல்லாவித துக்கங்க லிருந்து விடுபட்டவனாகிறான். அவனை ஒருபோதும் எந்த துக்கமும் அணுகாது.
அன்றைய தினம் அஷ்ட மாதாக்களை வழிபட்டால் அவனுக்கு எதிரிகள் என்பவர்கள் இருக்க மாட்டார்கள்
.
அந்தணர்கள் யாக யக்யங்கள் செய்ய வேன்டும். இதற்கு வசதி இல்லாதவர்கள் இம்மாதிரி விரதங்கள் இருக்க வேண்டும்.
புதாஷ்டமி 29-09-21; 13-10-2021; வருகிறது