பாப ஹர தசமி 20-06-2021


கங்காவதாரம். பாபஹர தசமி.20-06-2021


ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ தசமி திதியும் ஹஸ்த நக்ஷத்திரம் உள்ள
நாளில் பகீரத மஹா ராஜாவின் கடும் முயற்சியால் கங்கா தேவி ஆகாசத்திலிருந்து பூமிக்கு அழைத்து வரப்பட்டாள்.


இந்த நன்னாளே கங்காவதாரம் என்று அழைக்கபடுகிறது .இதில் சக்தி உள்ளவர்கள் கங்கையில் ஸ்நானம் செய்யலாம். .அல்லது மற்ற நதிகளிலும் கங்கையை ஸ்மரித்து ஸ்நானம் செய்யலாம்.. அல்லது


வீட்டிலோ கங்கையை மனதால் நினைத்துக்கொண்டு முறையாக ஸ்நானம் செய்ய வேண்டும்.


வீட்டில் உள்ள கங்கை சொம்பு ஜலத்தை பூஜித்து கங்கா தீர்தத்தினால் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம் .அனைத்து இன்னல்களும் விலகி மன நிம்மதி ஏற்படும்.


ராமாயணத்திலுள்ள கங்காவதார கட்டம் பாராயணம் செய்யலாம்.
.
தீபாவளி நாள் போல் இன்றும் எல்லா ஜலத்திலும் கங்கையின் ஸான்னித்யம் இருப்பதாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. கங்கா ஸ்நான பலன் உண்டு,


இன்று முறைப்படி ஸ்நானம் செய்வதால் பத்து விதமான பாபங்களிலிருந்தும் விடுபடுவான்.. ஆகவே இந்த நாளுக்கு பாபஹரா தசமீ என்ற பெயர் உண்டு.


ஜ்யேஷ்டே மாஸி , சுக்ல பக்ஷே தசம்யாம் பானு ஹஸ்தயோ: வ்யதீபாதே கரஜ கரணே கன்யா சந்த்ரே வ்ருஷே ரவெள என்பதாக
ஜ்யேஷ்ட மாதம், சுக்ல பக்ஷம், தசமி திதி புதன் கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம், வ்யதீபாத யோகம், கரஜ கரணம், கன்யா ராசியில் சந்திரன் இருத்தல், வ்ருஷப ராசியில் சூரியன் இருத்தல்.


ஆனந்த யோகம்(புதனும் ஹஸ்த நக்ஷதிரமும் சேருதல்) ஆகிய பத்தும் ஒன்று சேருகின்றன. ஆண்கள், பெண்கள் என்று ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் இன்று காலையில் எழுந்து தினந்தோறும் செய்யும் நித்ய கர்மாகளையும் முடித்து விட்டு சுக்லாம்பரதரம்+++ ஸர்வ விக்ன உப சாந்தயே.
ஆண்களுக்கு மாத்திரம் ப்ராணாயாமம், மமோபாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மன: த்விதீய பரார்த்தே ஶ்வேத வரஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலி யுகே ப்ரதனே பாதே ஜம்பூத்த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்ஸ்வே ஷாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்த
மானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ப்லவ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் சுப திதெள, பானு வாஸர, சித்ரா நக்ஷத்ர, பரிசும் நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம்
அஸ்யாம் தசம்யாம் சுப திதெள ஏதஜ் ஜன்மதி, ஜன்மாந்திர ஸமுத்பூத த்ரிவித காயிக, , சதுர்வித
வாசிக, த்ரிவித மாநஸேதி ஸ்காந்தோக்த தசவித பாப நிராஸ, த்ரயஸ் த்ரிம்சத் சத பித்ருத்தார ப்ருஹ்ம லோகா (அ)வாப்த்யாதி பல


ப்ராப்தியர்த்தம், ஜ்யேஷ்ட மாஸ, ஸித பக்ஷ, தசமி, பானு வாஸர, சித்ரா தாரக, வணிஜ கரண, வ்யதீபாதா(ஆ)நந்த யோக கன்யாஸ்த சந்த்ர, வ்ருஷபஸ்த ஸூர்யேதி தச யோக பர்வணி பாபஹர தசமீ

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
மஹா புண்ய காலே அஸ்யாம் (மஹாநத்யாம்) அல்லது அஸ்மின் கிரஹே ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
(இவைகளில் தசமியும் வ்யதீபாத யோகமும் மிக முக்ய மானது.. மற்றவை ஒரு சில வருஷங்களில் ஒன்று சேரும். )


என்று சங்கல்பம் செய்து கொண்டு முறைப்படி, நதி அல்லது, குளம், கிணறு, அல்லது ஏரி, அல்லது வீட்டிலேயோ கீழ் கண்ட ஸ்லோகங்கள்


சொல்லி கங்கா தேவ்யை ப்ரார்தனை செய்துகொண்டு பத்து விதமான பாபங்களும் விலகுவதாக மனதில் எண்ணிக்கொண்டு பத்து தடவை ஸ்நானம் செய்ய வேண்டும்.


கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜநானாம் சதைரபி முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி.


நமோ பகவத்யை தச பாப ஹராயை கங்காயை நாராயண்யை, ரேவத்யை சிவாயை தக்ஷாயை அம்ருதாயை விச்வரூபிண்யை நந்தின்யை தே நமோ நம:


இவ்வாறு முறைப்படி ஸ்நானம் செய்த பிறகு ஆடை உடுத்தவும். நெற்றி கிட்டு கொள்ளவும். மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே. கை நிறய சுத்த ஜலம் எடுத்து கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் விட வேண்டும்.


நம: கமல நாபாய நமஸ்தே ஜல சாயினே நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச க்ருஹானார்க்யம் நமோஸ்துதே. ஜலசாயினே நம: இதமர்க்யம்.


ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ தேஜோராசே ஜகத்பதே
அநுகம்பய மாம் பக்த்யா க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.


மஹாபல ஜடோத் பூதே க்ருஷ்ணே உபயதோமுகி வேதே ந ப்ரார்திதே கங்கே க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.க்ருஷ்ணாவேண்யை நம: இதமர்க்யம். இவ்வாறு அர்க்யம் தந்துவிட்டு


மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் யதா சக்தி தானம் அஹம் கரிஷ்யே. என்று சொல்லி பத்து ஏழைகளுக்கு பத்து விதமான பழங்களும்,. அரிசி, பதினாறு கைப்பிடி அளவுக்கு குறையாமல் தானமாக வேண்டும்.


மாலையில் விஷ்ணு ஆலயம் சென்று விஷ்ணு சன்னதியில் பத்து தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு பத்து விதமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.


பிறகு பத்து விதமான உணவு பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து
சாப்பிட செய்ய வேண்டும். இவ்வாறு முறையாக இந்த தசஹரா வ்ருதத்தை செய்பவர்கள் பத்து விதமான பாபங்களிலிருந்தும்


விடுபட்டு அனைத்து ஸுகங்களயும் அடைவார்கள் என்கிறது ஹேமாத்ரி என்னும் புத்தகம்.


தவிர்க்க வேண்டிய பத்து பாபங்கள்.


மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும் செய்ய படும் பாபங்கள் பத்து விதம்..


உடலால் செய்ய படும் பாபம்.மூன்று.


1. தனக்கென்று கொடுக்கபடாத பொருள்களை தான் எடுத்து உபயோகித்து கொள்வது.2. விசேஷமான விதியில்லாமல் உயிர்களை ஹிம்சிப்பது. 3. மற்றவர்களின் மனைவியினிடத்தில் தவறான எண்ணத்துடன் பழகுவது.


வாக்கால் செய்யபடும் பாபங்கள் நான்கு. 1. கடுஞ் சொற்கள் பேசுதல்.2 பொய் பேசுதல்;3 ஒருவரை பற்றி மற்றவரிடம் கோள் சொல்லுதல். 4. தேவையற்ற சம்பந்தமில்லாத பேச்சுக்களை பேசுதல்.
மனதால் செய்யும் பாபங்கள். மூன்று. மற்றவர்களின் பொருட்களை அடைய வேண்டும் என எண்ணுதல்.2. மற்றவருக்கு கெடுதல் நினைத்தல். 3. காரணமில்லாமல் மற்றவரை வெறுத்து ஒதுக்குதல்.


இந்த பாபங்களே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாகிறது..
21-06-2021. நிர்ஜலா ஏகாதசி.
22-06-2021 கவாமயன துவாதசி.


ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ துவாதசியன்று காலையில் த்ரிவிக்ரம மூர்த்தியான மஹா விஷ்ணு படத்தை துளசி, மல்லிகை பூ


ஆகியவற்றால் பூஜை ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.


அஹோராத்ரேண துவாதஸ்யாம் ஜ்யேஷ்டே மாஸி த்ரிவிக்ரமம் கவாமயன மாப்நோதி அப்ஸரோபிஸ்ச மோததே.


என்பதாக இன்று த்ரிவிக்ரம மூர்த்தியை பூஜிப்பதால் யாகங்களின் சிறந்ததான கவா மயனம் என்னும் யாகம் செய்த பலன் கிட்டும்.
என்கிறது ஶ்ரீ மஹாபாரதம் தான தர்ம ப்ரகரணம்..