ரா.கணபதியின் எழுத்தில்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇது ஒரு மறுபதிவு)
'மடாதிபதி'பீடாதிபதி' என்பவைகளை வைத்து அவர்
சிரித்துச் சிரித்து ஒரு சமயம் சொன்னதும்
அவரொருத்தரால்தான் முடியும்?

அநேக ஸம்ஸ்கிருதப் பதங்களில் நடுவே வரும்
ta-வை தமிழ் மொழியில் எழுதும்போதும்,தமிழ்
வழக்கில் பேசும் போதும் da-வாகத்தானே ஆக்கி
விடுகிறோம்!. அவ்வாறு matam,peetam என்பவற்றை
நாம் madam,peedam என்றே சொல்கிறோம்.

இது தொடர்பாக, இங்கே எழுதுவதே அபசாரமோ
என்று தயங்கும் விஷயத்தைத் [சொல்வது ரா,கணபதி]
தயக்கமே இல்லாமல்,சிலும்பிச் சிலும்பிச் சிரித்தவாறே
சொன்னார்---மடத்தனத்துக்கு அதிபதிதான் நாம் சொல்லும்
மடாதிபதி; பீடைக்கு அதிபதிதான் பீடாதிபதி என்று.

"மதம்" என்று சமயத்தைச் சொல்லும்போது
"mad[h]am" என்று d[h]a காரமாகத்தானே சொல்கிறோம்?
அது ஆனைக்குப் பிடிக்கும். மதத்தையும், உவமையணியாகத்
திமிர்த்தனத்தையுந்தான் குறிக்கும்.சரியான உச்சகரணம்
"தகப்பன்"என்பதில் வரும் 'த'வாக "mat[h]am" என்பதுதான்.
அவ்வாறு சொன்னால் "மதியால் ஆலோசித்துப் பெறப்பெற்ற
கொள்கை" என்று பொருள்."வாஸ்தவத்தில் நாம் mat[h]a-த்தை
mad[h]a-மாகத்தானே பண்ணிக் கொண்டிருக்கோம்?

உச்சரிப்பும் அப்படியே பண்ணுகிறோம்!" என்றார்.
இதெல்லாம் தமிழில் ஒலிக்கான எழுத்து இல்லாததால்
தவிர்க்க முடியாமல் ஏற்படுவது. ஆனால் தமிழ்க் கவி
மரபில் தள்ளிய ஸ,ஹ,ஷ,க்ஷ ஆகிய நிரந்தர க்ஷரங்களையும்
உரைநடையில்கூட தள்ளி, சிரிப்புக்கிடமான தப்பிதங்கள்
ஏன் செய்ய வேண்டும் என்று கேட்டார்.