முல்லா நசுருதின் ஒரு நாள் கழுதையில் கடைத்தெரு வழியாக வேகமாகப் போய்க்கெர்ண்டிருந்தார்
தெருவில் உள்வர்கள் "என்ன முல்லா வேகமாகப் போகிறீர்கள் என்று கேட்க, பதிலே சொல்லவில்லை.
அடுத்த நாள் கழுதையில்லாமல் முல்லா வந்தபோது, "ஏன் நாங்கள் கேட்டதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை" என்று தெருவாசிகள் கேட்டனர்.
முல்லா பதில் சொன்னார்: "நானா வேகமாகப் போனேன்? என் கழுதை வேகமாகப் போனது, அதைக் கேளுங்கள் என்றார்".
கழுதையில் நீங்கள்தானே போனீர்கள் அதனால் உங்களுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாதா? என்றனர்.
"உங்களுக்கு என் கழுதையைப் பற்றி தெரியாது, நான் போகச் சொன்ன இடத்திற்கு அது போனதாக வரலாறே கிடையாது. நான் கிழக்கு போ என்றால் அது மேற்கே போகும். பலமுறை கூறிப்பார்த்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். நாம் கூறுவது அதற்குப் புரியவில்லை, ஏனென்றால் அது கழுதை, அதற்குப் புரிய நியாயம் இல்லை, எனவே, நாம்தான் அதோடு ஒத்துப்போகவேண்டும். அது எந்தப்பக்கம் போகிறதோ அந்தப்பக்கம் நமக்குள்ள வேலையை முடித்துக்கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன் - அதனால் நான் சந்தோஷமாக இருக்கிறேன்" என்றார்.
நீங்களும் உங்கள் வாழ்க்கையில் பல கழுதைகளோடு காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டால்
உங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம்.
அந்தக் கழுதை - உங்கள் பாஸ் ஆக இருக்கலாம், உங்கள் பிள்ளைகளாக இருக்கலாம்,
உங்கள் மனைவி அல்லது கணவனாக இருக்கலாம் - அவர்களோடு நீங்கள் காம்ப்ரமைஸ்
பண்ணிக்கொண்டால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம்.

இந்த விஷயத்தை இன்னும் சுவைபட ஶ்ரீசுகிசிவம் அவர்களின் சொற்பொழிவாகக் கேட்க கீழுள்ள
ப்ளே பட்டனைச் சொடுக்கவும்.