திருவரங்கத்தந்தாதி 61 கருத்து இல்லார் பிறப்பு என்பர் வையகத்தே !

மாதம்பத்துக்கொங்கையுமல்குற்றேரும்வயிறுமில்லை
மாதம்பத்துக்குறியும்கண்டிலேம்வந்துதோன்றினைபூ
மாதம்பத்துக்கெதிர்மார்பாவரங்கத்துவாழ்பரந்தா
மாதம்பத்துக்கருத்தில்லார் பிறப்பென்பர்வையகத்தே

-




பதவுரை : மா + தம்பத்து
மாதம் + பத்து
மாது + அம + பத்து


பூ மாது தாமரையில் இருக்கும் மஹா லக்ஷ்மியின்
அம்பத்துக்கு கண்களுக்கு
எதிர் மார்பா இலக்காய் விளங்கும் மார்பை உடையவனே !
அரங்கத்து வாழ் பரந்தாமா ஸ்ரீ ரங்கத்தில் வசிக்கும் பரந்தாமா !
மா தம்பத்து பெரிய தூணில்
கொங்கையும் தனங்களும் ,
அல்குல் தேரும் தேர் போன்ற பெரிய இடுப்பும் ,
வயிறும் இலை பெருத்த வயிறும் இல்லை
மாதம் பத்து பத்து மாதங்களுக்குரிய
குறியும் கண்டிலம் கர்ப்பச் சின்னங்களும் பார்க்கவில்லை
வந்து தோன்றினை ஆனால் அந்த தூணீல்ருந்து நர சிம்ஹனாக அவதரித்தாய்
தம் கருத்து உன்னிடம்
பத்து இலார் பக்தி இல்லாதவர்கள்
வையகத்துப் பிறப்பு என்பர் உன்னை பூமியில் மானிடப் பிறப்பு என்று கூறுவார் !