Announcement

Collapse
No announcement yet.

மணியோசை-2 source : facebook (Srirangam Srimath Andavan Ashramam)

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • மணியோசை-2 source : facebook (Srirangam Srimath Andavan Ashramam)

  மணியோசை-2 source : facebook (Srirangam Srimath Andavan Ashramam)

  அன்று பேரருளாளன் பெருந் தேவித் தாயாரை தரிசிக்க, பெற்றோர்கள் குழந்தையை, கோயி-லுக்கு அழைத்துச் சென் றனர். அங்கு தீபாரத்தி நடக் கும் பொழுது, அர்ச்சகர் வாயிலாக வரதராஜப் பெரு மாளே “ ராமாநுஜ ரைப்போன்று இந்த குழந்தையும் தர்ஸன ஸ்தாபகராக விளங்குவான் “ என்றார். அது கேட்ட பெற்ரோர்களும், சுற்றியிருந்தவர்களும் பெருமகிழ
  ்ச்சி அடைந்தனர்.

  ஸ்ரீவேங்கடநாதனுக்கு, வயது ஐந்து !

  தகப்பனார் அக்ஷராப்யாஸம் செய்து வைத்தார். பிறகு ஒரு நாள் அப்பிள்ளார் பாலகனை தேவாதிராஜன் ஸந்நிதிக்கு அழைத்துச்சென்றார். அதுசமயம் மலைமேல், நடாதூரம்மாள் காலக்ஷேபம் நடந்துக்கொண்டி ருந்தது. அங்கு சென்று அம்மாளை சேவித்த அப்பிள்ளார்,குழந்தை யையும் சேவிக்கச்சொன்னார். நடாதூரம்மாள் குழந்தையை குளிர கடாக்ஷித்தார். அப்போது காலக்ஷேப கோஷ்டியிலிருந்த, வடக்குத் திருவீதிப்பிள்ளை, “சுடர்போன்று திகழும் இந்த பாலகன் யார் ? “ என்று வினவ, அருகில் இருந்தவர்கள், “அப்பிள்ளாரின் மருமான் இவன். திருவேங்கடமுடையானின் திருமணி அம்ஸமாகப் பிறந்த குழந்தை. பரா-ஸரரைப் போன்றே பன்னிரண்டு மாதங்கள் தாயார் வயிற்றில் கர்பவாஸம் இருந்து அவதரித்தவர். “ என்று கூறினர். சிறிது நேரம் மௌனம் சாதித்த அம்மாளும், மேற்கொண்டு காலக்ஷேபத்தைத்தொடர, “ யாம் விட்ட இடம் எது ? “ என்று கேட்க, கேட்டுக்கொண்டிருந்தவர்கள், தெரியாது விழித்தனர். குழந்தை வேங்கடநாதன், தாம் வந்தபோது அம்மாள் என்ன விஷயம் சாதித்துக்கொண்டிருந்தாரோ, அதைச்சொல்லி, ”இதுவே தாங்கள் கடைசீ-யாக உபதேஸித்த விஷயம், “ என்று விண்ணப்பிக்க,அதனைக்கேட்ட நடா தூரம்மாள், பாலகனை, அருகில் அழைத்து, அணைத்து உச்சிமோந்து,புல ஸ்த்யர், பராஸரரை அநுக்ரஹித்தது போன்று, “ ப்ரதிஷ்டாபித வேதாந்த : ப்ரதிக்ஷிப்த பஹிர்மத: பூயா: த்ரைவித்யமாந்ய: த்வம் பூரிகல்யாண பாஜநம் “ என்று அநுக்ரஹித்து விட்டு, அப்பிள்ள்ரிடம், “ இவன் ஒரு அவதார புருஷன்” , ஸ்ரீபாஷ்யகாரரின் ஸ்ரீபாஷ்யங்களை உபதேஸிக்கும்படி விண்ணப்பித்தார். பிறகு பிள்ளான், எங்களாழ்வானுக்கும் ” இந்த குழந்தை நமக்களித்த ஸத்பாத்திரம். நமக்கு வயதாகிவிட்டக் காரணத்தால், இவ னுக்கு உபதேஸிக்கும் பாக்யம் பெற்றிலேன்” என்று நியமித்தார். பிறகு கிடாம்பி அப்பிள்ளாரை அழைத்து, “ நீர் இந்தக் குழந்தைக்கு, எம்பெரு மானார் திருவுள்ளம் உகக்கும்படி ஸாமாந்ய சாஸ்த்ரங்களுடன், ஸ்ரீபாஷ் யாதி க்ரந்தங்களையும், மந்தரமந்த்ரார்த்தங்களையும் உபதேஸிக்கக்கடவீர் “ என்று கூறி, அப்பிள்ளாரின் கரத்தில் குழந்தையை பிடித்துக் கொடுத்தார்.

  வேங்கடநாதனுக்கு, தந்தை ஏழாம் வயதில், உபநயனம் செய்து வைத்தார். அதன் பிறகு,வேங்கடநாதன் தந்தையிடம், வேதாத்யயனம் செய்ய ஆரம்-பித்தார். ஆளவந்தாரை போன்று அதிமேதாவியாக விளங்கும் தம்குமார ரைக்கண்டு மனம் பூரித்தார் அநந்தஸூரி.

  அதன் பிறகு அம்மாள் நியமனப்படி, அப்பிள்ளார் தம் மருமானுக்கு, சப்த தர்க, மீமாம்ஸாதி,ஸகல ஸாமாந்ய சாஸ்த்ரங்களையும் போதித் தார். மேலும், ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம்,பகவத்விஷயம் இத்யாதி வேதாந்த க்ரந்தங் களையும் விசேஷார்த்தங்க-ளுடன்,உபதேஸித்தார். இவற்றையெல்லாம் கற்ற வேங்கடநாதன், நாதமுனிகள், ஆளவந்தார்,எம்பெருமானாருக்கு ஈடாக எழுந்தருளியிருந்தார். மேலும் ஒரு ஆச்சார்யனாகத்தகுந்த குண பூர்த்தியுடன் மிக தேஜஸ்வியாகத்திகழ்ந்தார்.
  நம்தூப்புல் மணிக்கு, திரு-மங்கை என்னும் பெண் மணியைப் பாணிக்ரஹணம் செய்து வைத்தனர் பெற்-றோர். இந்த திருமணம் அப்பிள்ளார் நியமனப்படியே நடந்தேறியது. அவர் தன் மருமானுக்கு, எந்த கெடு-தலும் நேராமலிருக்க ரக்ஷை செய்து, வைநதேயன் மந்தரத் தையும் உபதேஸித்தருளினார். மேலும்,” ராமாநுஜ சித்தாந்த ஸ்தாபக-ராகத்திகழ்வாய் ” என்று ஆசீர்வதித்தார். ஸ்வாமியும் பெருமாள் கோயி-லில் நித்ய கர்மானுஷ்டானங்களை முறைப்படி அனுஷ்டித்து வந்தார். பகவத், பாகவத,
  ஆச்சார்ய கைங்கர்யங்களைப்
  பண்ணிக் கொண்டு பலருக்கும் சாமான்ய விசேஷ சாஸ்த்ரங்களை உபதேஸித்து வந்தார்.

  சிலகாலம் சென்றதும், அப்பிள்ளார் திருமேனி க்கு, அஸௌகர்யம் உண்டாயிற்று. அப்போது தன் மருமானை அழைத்து, “ உம்மால் ராமாநுஜ சித்தா-ந்தம் நிர்தாரிக்கப்பட வேண்டுமென்பது உடையவர் திருவுள்ளமென்று நடாதூரம்மாள் அருளிச்செய்திருக்கின்றபடியால் அவர் வழியாக வந்த உடையவர் பாதுகைகளை உமக்கு தரு கின்றோம். “ என்று சொல்லிப் பாதுகைகளை அளித்தார். ஸ்வாமியும் அவற்றை மிக பயபக்தியுடன் ஸ்வீகரித்துத் திருவாராதனத்தில் எழுந்தருளப் பண்ணி ஆராதித்து வந்தார்.

  அப்பிள்ளார் பரமபதித்த பிறகு, அவருடைய திருக்குமாரர் பத்மநாபாச்சார்-யரைக்கொண்டு,சர்ம கைங்கர்யங்களை நன்கு நடத்திவைத்தார். வீர வல்லி பெருமாளையன், மற்றும் வீரவல்லி கிருஷ்ணமாச்சாரி போன்ற வர்கள் நம் ஸ்வாமியிடம் காலக்ஷேபம் பண்ணினார்கள்.

  இவ்வாறு ஸித்தாந்த ப்ரவசனம் செய்து கொண்டிருந்தபோது, அப்பிள்ளார் உபதேஸித்த வைநதேய மந்த்ரத்தை ஆவ்ருத்தி செய்து ஸித்திபெற எண்ணினார்.

  அதற்காக, அடியவர்கருளும் தெய்வநாயகன் நித்யவாஸம் செய்யும் திருவஹீந்த்ர புரத்திற்கு எழுந்தருளினார்.

  அங்கு கருட நதியில் நீராடி நித்ய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு,செங்கமலவல்லி நாச்சி யாரையும், தேவநாதனையும் தொழுது ஔஷதகிரிக்கு எழுந்தரு ளினார். அங்கு ந்ருஸிம்ஹனை ஸேவித்து அந்த சந்நி திக்கு சமீபத்தில் இருந்த ஓர் அச்வத் விருக்ஷத்தின் ( அரசமரத்தின் )அடியில் ஆஸமிட்டு அமர்ந்து வைந தேயன் மந்த்ரத்தை ஜபித்துவந்தார். வைநதேயன் அவர் முன்பாக ப்ரத்யக்ஷமாகி ஹயக்ரீவ மந்த்ரத்தை உபதேஸித்தருளினார். அன்று முதல் ஸ்வாமியும், ஹயக்ரீவ மந்தரத்தை ஜபிக்க , இவர் தபஸி னால் ப்ரீதியடைந்த ஹயக்ரீவப் பெருமாள் இவர் முன் ப்ரத்ய க்ஷமாகி தம்முடைய லாலாமயமான அம்ரு தத்தைக் கொடுத்து அநுக்ரஹத்து விட்டுமறைந்தார்.

  ஸ்ரீஹயக்ரீவரின் லாலா அமுதத்தை பருகிய நம் ஸ்வாமியிடம் அனைத்து வித்யைகளும் தாமாகவே வந்து சேர்ந்தன். அவர் முதலில் ஹயக்ரீவன் விஷயமாக, “ ஹயக்ரீவ ஸ்தோத்ரத்தை” அருளிச்செய்தார். பிறகு ஹயக்ரீவ மந்த்ரத்தை தமக்கு உபதேஸித்தருளிய கருடன் விஷயமாக “ கருட பஞ்சாசத் “ அருளினார். தொடர்ந்து திருவஹீந்த்ர எம்பெருமான் தேவநாதன் விஷயமாக “ தேவநாயக பஞ்சாசத் “ ப்ராக்ருத மொழியில், “ அச்சுத சதகம் “அழகிய செந்தமிழில் மும்மணிக்கோவை கந்துபா, கழற்பா,அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா, நவரத்னமாலை ஆகியவற்றை இயற்றி னார். ஸ்ரீதேவநாதனையும், செங்கமல நாச்சியாரையும் மங்களா சாஸனம் செய்து கொண்டு சிலகாலம் அங்கேயேத் தங்கியிருந்த ஸ்வாமிகள், “ பரமதபங்கம் “ என்ற க்ரந்தத்தையும் அருளினார். அங்கேயே கோயிலில் எழுந்தருளி யிருக்கும் ஸ்ரீராமன் விஷயமாக, “ரகுவீரகத்யம்”, கோபாலனைப் பற்றி “ கோபாலவிம்சதி “ ஆகியவற்றையும் அருளிச்செய்தார்.

  பிறகு, பேரருளாளனைக்காண விழைந்தவராக, அங்கிருந்து புறப்பட்டவர் வழியில்,திருக்கோயிலூர் அடைந்தார். அங்கு ஆயனாரை தரிசித்தவர் அந்த எம்பெருமான் விஷயமாக, “ தேஹளீகஸ்துதி ” யை அருளிச்செய்தார்.

  பிறகு அங்கிருந்து திருக்கச்சி என அழைக்கப்படும் காஞ்சீபுரம் வந்து சேர்ந்தார். அநந்தஸரஸில் நீராடி நித்யகர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்து விட்டு பேரருளாளன் வரதராஜன் சந்நிதிக்கு எழுந்தருளினார். பெருமாளை ஆபாதசூடம் சேவித்து மகிழ்ந்தார்.

  எம்பெருமானார் கத்யத்தில் அருளிச்செய்துள்ள ப்ரபத்யர்த்தத்தை, தம் ஆச்சார்யரான அப்பிள்ளார் உபதேஸித்தபடி, அங்க பஞ்சக பஞ்சக ஸம்பந்தமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்பணத்தை ( சரணா கதியை ) பேரருளாளன் திருவடிகளில் ஸமர்பித்து விட்டு, தூப்புல் அக்ரஹாரம் வந்து சேர்ந்தார். அங்கு காலக்ஷேபங்களை அரு ளிச்செய்துகொண்டு இருந்தார். அப்போதுதான் சரணாகதி விஷயமாக, “ ந்யாஸதஸகத்தை “ யும் வரதராஜன் விஷயமாக, “ வரதராஜபஞ்சாசத் “ என்ற ஸ்தோத்ரத்தையும் அடைக்கலபத்து, அர்த்த பஞ்சகம், ஸ்ரீவைஷ்ணவதினசர்யை, திருச்சின்ன மாலை, பன்னிருநாமம், என்று ஐந்து தமிழ்ப்ரபந்தங்களையும் அருளிச் செய்து, “ அத்திகிரி மஹாத்ம்யம் “ என்ற க்ஷேத்ர மகிமையையும் அருளிச் செய்தார். தீப ப்ரகாஸர் விஷயமாக, “ சரணாகதி தீபிகை ” யும் யதோக்தகாரி விஷயமாக, “ வேகாஸேது ஸ்தோத்ரத்தை “ யும் அஷ்டபுஜ பெருமாள் விஷயமாக, “ அஷ்டபுஜாஷ்டகத்தை “ யும் ஆளரி விஷயமாக “ காமாஸி காஷ்டகம் “ ,திருப்புட்குழி எம்பெருமான் விஜயராகவன் மீது “ பரமார்த்த ஸ்துதி “ யும் அருளிச்செய்தார்.

  பிள்ளானின் குமாரர் புண்டரீகாக்ஷர். அவர் விஜயநகர மன்னனின் அத்யக்ஷராக இருந்தார். அவர் அப்பிள்ளாரின் குமாரத்தியை விவாஹம் செய்து கொண்டிருந்தார்., அவள் தன் தகப்பனாரின் க்ருஹத்தில் ப்ரசவிக்க காஞ்சீபுரம் வந்திருந்தாள். அவளுக்கு சோபக்ருத் ஆண்டு, புரட்டாசிமாதம், ச்ரவண நக்ஷத்ரத்தில் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தூப்புல்மணி ஸ்ரீநிவாஸன் எந்ற பெயரைச்சூட்டி, ரக்ஷையும் செய்துவைத்தார். புண்டரீகாக்ஷருக்கு குழந்தை பிறந்த செய்தி அனுப்பிவைக்கப்பட்டது.

  செய்திகேட்ட புண்டரீகாக்ஷரும் புறப்பட்டு காஞ்சீபுரம் வரத்தயாரானார். அப்போது அவர் ஸ்ரீபாஷ்யகாரர், பிள்ளான் முதலியவர்களால் ஆராதிக்-கப்பட்டு, பிற்பாடு புண்டரீகாக்ஷரிடம் வந்து சேர்ந்த ஸ்ரீஹயக்ரீவரை வேங்கடநாதனிடம் சமர்பித்துவிட வேண்டும் என்று தாம் கண்ட கனவை விஜயநகர மன்னனிடம் கூற, மன்னன் புண்டரீகாக்ஷரையும், ஹயக்ரீ வரையும் ஸகல ராஜமரியாதைகளுடன் காஞ்சீபுரம் அனுப்பி வைத்தார். காஞ்சீமாநகரிலும், புண்டரீகாக்ஷரை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஸ்ரீஹயக்ரீவன் நம் ஸ்வாமி ஸ்வப்னத்திலும் வந்து கூறியதால், அவரும் எதிர்கொண்டு அழைத்தார். பிறகு முறையே குசல ப்ரச்நம் முடிந்தவுடன், புண்டரீகாக்ஷர் ஹயக்ரீவரை ஸ்வாமிகளிடம் அளிக்க ஸ்வாமிகளும் அந்த மூர்த்தியை தம் பிதாமஹ,ப்ரபிதாமஹாதிகள் ஆராதித்து வந்த பேரருளாளன் விக்ரஹத்துடன் எழுந்தருளச்செய்து ஆராதித்து வந்தார்.

  தம் அவதாரத்திற்கு முக்ய காரணமாக விளங்கிய திருவேங்கடமுடையானை தரிசிக்கவேண்டுமென்று ஸ்வாமிகள் எண்ணி யாத்ரை புறப்பட்டார். வழியில் சோளிங்கரை அடைந்தவர் அங்கு அக்காரக்கனியை மங்களாஸாஸனம் செய்துவிட்டு, பிறகு சிலகாலம் திருச்சானூரில் தங்கி அலர் மேல்மங்கைத் தாயார், கீழ்திருப்பதியில் கோவிந்தராஜன் ஆகியவர்களை ஸேவித்துவிட்டு திருமலைக்கு எழுந்தருளினார்.

  ஸ்வாமி புஷ்கரணியில் நீராடி, நித்ய கர்மா-நுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, முதலில் ஸ்ரீவராஹனை ஸேவித்துவிட்டு, ஸ்ரீநிவாஸன் ஸந்நிதிக்கு எழுந்தருளி பாதாதிகேசம் கண் களால் அனுபவித்து விட்டு தீர்த்தப்ரஸா தங் களை பெற்றுக் கொண்டார். திருவேங்கடமுடையான் தயையைப்பற்றி “ தயாசதகம் “ என்ற நூறு ஸ்லோகங் களை இயற்றினார். பிறகு சிலநாட்கள் அங்கு தங்கியிருந்து, திரும்ப மனமின்றி புறப்பட்டார். ஸ்ரீநிவாஸனின் விபவம் ஒன்றும் குறைவின்றி நித்ய ஸ்ரீர்நித்ய மங்களமாக இருக்கவேண்டுமென்று “ ப்ரஸமிதகலிதோஷம் “என்ற ஸ்லோகத்தை அருளிச்செய்து மங்களாசாஸனம் செய்தார்.

  திருமலையைவிட்டுப் புறப்பட்வர் வடதேஸத் திலுள்ள திவ்யதேசங்களுக்கு யாத்ரை சென்றார். செல்லும் வழியில் துங்கபத்ரா நதிக்கரையில் வித்யாரண்யரை சந்தித்தார்.

  பால்ய நாட்களிலிருந்து இருவரும் அன்புடன் பழகி வந்தவர்கள். இப்போது வித்யாரண்யர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஸ்வீகரித்துக்கொண்டு, கங்காயாத்ரை புறப்பட்டு இருந்தார். நம் ஸ்வாமியைக்கண்டதும் மிக்க சந்தோஷத்துடன் க்ஷேமசமாசாரங்களைப் பரிமாறிக்கொண்டார்கள். அப்போது அந்த தேஸத்து அரசனின் மகளை ப்ரஹ்மராக்ஷஸ் பிடித்துக்கொண்டு இருப்பதாயும், அதனை ஓட்டவேண்டுமென்று ராஜாவின் ப்ரதிநிதி வித்யாரண்யரை அணுக, அவர் நம் ஸ்வாமியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஸ்வாமிகள் சம்மதிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு த்வாரகை, கோகுலம், ப்ருந்தாவன், மதுரா,மாயை, அவந்தி, அயோத்யா போன்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுக்குச் சென்று சேவித்தார்.
  பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீகூர்மம், புருஷோத்தமம், அகோபிலம், திருஎவ்வுள்,திருநின்றவூர், திருவல்லிக்கேணி,
  திருகடல்மல்லை ஆகிய திவ்யதேசத்து எம்பெருமான்களை மங்களா சாஸனம் செய்துவிட்டு ஸ்ரீபெரும்பூதூருக்கு எழுந்தருளினார். யதிராஜனை ஸேவித்தார். எம்பெருமானாரால் குளிரக் கடாக்ஷிக்கப்பெற்றவராய் மீண்டும் காஞ்
  காஞ்சீ-புரத்திற்கே வந்து ஸித்தாந்த ப்ரவசனம் பண்ணிவந்தார்.

  ஒரு சமயம் காஞ்சீபுரத்திற்கு அருகாமை யிலுள்ள திருப்புட்குழி என்ற திவ்ய தேஸத்தில் வைஸூரி என்ற கொடிய வியாதியால் மக்கள் அவதி யுற்றனர். பலர் இறந்தனர். செய்தி கேட்ட நம் ஸ்வாமிகள் வாளாயிருக்காமல் உடனை அங்கு சென்று,” ப்ரதிபட ஸ்ரேணிபூஷண “ என்று தொடங்கும் சக்ரத்தாழ்வார் மீதான “ சுதர்னாஷ்டகம் “ என்ற எட்டு ஸ்லோகங்களை அருளிச்செய்ய, அந்த வியாதியிலிருந்து மக்கள் விடுபட்டதுடன் அவர் பெருமையை உணர்ந்தனர். இந்த ஸ்லோகத்தை சொல்வதால், வியாதிகள் மட்டுமல்ல,பேய், பிசாசு தொல்லைகளி லிருந்தும் விடுபடலாம் என்பது உறுதி.

  to be co
  nt..!
  Last edited by sridharv1946; 10-07-13, 12:23.
Working...
X