Originally posted by Sreekrishna
View Post
I have got another 250MB of FREE space because of you.
Thanks again.
dasan,
nvs
இந்த 2011ல் ஸ்ரீமத் அழகியசிங்கரை அனுக்ரஹித்து மீண்டும் ஒரு முறை எல்லாரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறாள் என்றால் மிகையில்லை. உண்மை தவிர வேறில்லை. பெரிய அழகியசிங்கரின் உடல்நிலை காரணமாகக் கடைசி நிமிடம் வரை சங்கல்பம் திருப்புல்லாணியில் இருக்குமா என்று சந்தேகம் நிலவிய வேளையில், தங்கள் முடிவில் மாறாத அழகியசிங்கர்கள், சுற்றிலுமிருந்தவர்கள் தடுத்தும், என்ன ஆனாலும் திருப்புல்லாணியில்தான் சங்கல்பம் என்று இங்கு எழுந்தருளினர். இருவருமே தாயாரிடம் அபார நம்பிக்கை வைத்ததின் விளைவு வந்த சில நாட்களிலேயே பெரிய அழகிய சிங்கர் உடல்நிலை முன்னேறத் தொடங்கி ஆகஸ்ட் 15ல் பல மாதங்களுக்குப் பின் அவரே திருவாராதனம் செய்து சமாச்ரயண, பரந்யாஸங்களும் செய்து வைக்கின்ற அளவுக்கு, மூன்று வேளை திருவாராதனங்களிலும் முழுமையாக இருந்து சிஷ்யர்களுடன் உற்சாகமாக உரையாடி ஆசீர்வதிக்கின்ற அளவுக்கு மாறியுள்ளது. சின்ன அழகியசிங்கர் தினமும் மாலையில் கோவில் மங்களாசாஸனம் செய்து வந்தார். சிஷ்யர்கள் ஆசார்யன் உடல்நிலை தேறுவதற்காக தினமும் தாயாருக்கு விசேஷ அர்ச்சனைகள் செய்து வந்தனர். அகமகிழ்ந்த தாயார் இந்த 60நாட்களிலும் பெரிய அழகியசிங்கருக்கு எந்த விதமான சிரமமும் இல்லாமல் பாதுகாத்திருக்கிறாள். இதோ இன்று மிக அருமையாக, கடைசி நாளின் நிகழ்வுகள் அமைந்து உத்தானத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம். பக்கத்திலுள்ள பரமக்குடியில் பெரிய கலாட்டா என்றாலும்கூட, இன்று சுமார் 70க்கும் மேற்பட்ட சிஷ்யர்கள் வந்திருத்தனராம். பல திவ்ய தேச, அபிமான ஸ்தலங்களிலிருந்தும் மாலை மரியாதைகள் வந்து அழகியசிங்கர்களுக்கு மரியாதை ஆகியிருக்கின்றது. அழகியசிங்கர்கள் மிக மகிழ்ந்து ஆலய கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் புடவை வேஷ்டியுடன் புஷ்கலமாகச் சம்பாவனைகளும் செய்து கௌரவித்தாயிற்றாம். ஆக, இந்த அளவு பெரிய அழகியசிங்கரின் தேக ஆரோக்யத்தையும் முன்னேற்றி, திருப்புல்லாணியில் நடந்த இரண்டாவதும், ஸ்ரீமத் அழகியசிங்கர்களின் முதலாவதுமான (திருப்புல்லாணியில் அழகியசிங்கர்களின் முதல் சங்கல்பம்) சங்கல்ப வைபவத்தை வெற்றிகரமாக நடத்தி வைத்து அனுக்ரஹித்து இரண்டாவது முறையும் எங்கள் தாயார் தனது கருணையை உலகுக்கு உணர்த்தியுள்ளாள்,
Leave a comment: