Announcement

Collapse
No announcement yet.

oupaasanam.

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • oupaasanam.

  ஒளபாஸனம்;
  ஆசமனம். அச்சுதாய நம: அனந்தாய நம; கோவிந்தாய நம:
  கேசவா=================தாமோதரா.
  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.
  ப்ராணாயாமம்.
  ஓம் பூஹு===========ஸூவரோம்


  மமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்
  ப்ராதர் ஓளபாஸனம் (ஸாயமெளபாஸனம்) ஹோஷ்யாமி.
  ஆரம்ப பரிசேஷனம்.
  அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கில், மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.


  அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில், தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.


  ஸரஸ்வதேநு மன்யஸ்வ;-வடக்கில், மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.


  தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ;-ஹோமகுண்டத்தின், வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் விடவும்.
  அக்னி தியானம்;-


  சத்வாரி சிருங்காஹா த்ரயோ அஸ்ய பாதாஹா த்வே சீர்ஷே ஸப்தஹஸ்தா ஸோ அஸ்ய த்ரிதாபத்தோ விருஷபோ ரோரவீதி மஹோதேவோ மர்த்யாகும் ஆவிவேச ஏஷஹி தேவஹ ப்ரதிசோனு ஸர்வாஹா பூர்வோஹி ஜாதஹ ஸ உ கர்பே அந்தஹ ஸவிஜாய


  மானஸ்ஸஜ நிஷ்யமானஹ ப்ரத்யங் முகாஸ் திஷ்டதி விஸ்வதோ முகஹ


  ப்ராங்முகோ தேவ ஹே அக்னே மம அபிமுகோ பவ.


  அக்னிக்கு அலங்காரம்


  கிழக்கே நடுவிலிருந்து ஆரம்பித்து செங்கல் அல்லது ஹோ ம குண்டத்தின் மேல் அக்னிக்கு அருகில் எட்டு திக்குகளிலும் ப்ரதக்ஷிணமாக அக்ஷதையால் அலங்காரம் செய்க,


  இந்த்ராய நமஹ; அக்னயே நமஹ; யமாய நமஹ நிருரிதயே நமஹ; வருணாய நமஹ; வாயவே நமஹ; ஸோமாய நமஹ; ஈசானாய நமஹ ; என்று சொல்லி ஹோம குண்டத்தின் எட்டு திக்குகளிலும் அக்ஷதை போட்டு அக்னயே நமஹ என்று சொல்லி அக்னியில் அக்ஷதை போடவும்.


  ஆத்மனே நமஹ என்று தன் தலையில் அக்ஷதை போட்டுக்கொள்ள வேண்டும். ( ஸர்வேப்யோ ப்ராஹ்மனேப்யோ நமஹ ப்ராமணர் மீது அக்ஷதை போடவும். அருகில் ப்ராஹ்மணர்கள் இருக்கும் போது மட்டும்)
  ஹோம த்ரவ்யத்தை அதாவது களைந்த பச்சரிசியை ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு அதை இரண்டாக பிறித்து ஓம் பூர்புவஸ்ஸூவஹ என ப்ரோக்ஷித்து ஹோஷ்யாமி என உத்திரவு கேட்டு ஜுஹூதி என தானே பதில் சொல்லி கொண்டு கையால் ஹோமம் செய்யவும்.


  ஓம் ஸூர்யாய ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம. இது காலையில்
  முன் செய்த ஹோமத்தை விட அதிக அரிசி( மற்றொரு பாகம்) எடுத்து கொண்டு முன் ஆஹூதி மேல் படாமல் வட கிழக்கு மூலையில் உரக்க மந்திரம் கூறி ஹோமம் செய்க.
  அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
  மாலையில்
  ஓம் அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம .


  முன் செய்த ஹோமத்தை விட அதிகம் அரிசி எடுத்து கொண்டு (மற்றொரு பாகம்.) முன் ஆஹுதி மேல் படாமல் ஈசான மூலையில் உரக்க மந்திரம் கூறி ஹோமம் செய்க,


  அக்நயே ஸ்விஷ்ட க்ருதே ஸ்வாஹா அக்னயே ஸ்விஷ்ட க்ருதே இதம் ந மம
  மறுபடியும் முடிவு பரிசேஷனம். இரு வேளையும் உண்டு.
  அதிதேநு மன்யஸ்வ அக்னிக்கு தெற்கில், மேற்கிலிருந்து கிழக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.
  அநுமதேநு மன்யஸ்வ ; மேற்கில் தெற்கிலிருந்து வடக்காக நீளவாக்கில் கையால் ஜலம் விடவும்.


  ஸரஸ்வதேநு மன்யஸ்வ;- வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக நீள வாக்கில் ஜலம் விடவும்.
  தேவ ஸவிதஹ ப்ரஸூவஹ; ஹோமகுண்டத்தின் வட மேற்கில் ஆரம்பித்து வட மேற்கில் ப்ரதக்ஷிணமாக ஜலம் சுற்றவும்.
  இரு வேளைகளிலும் சொல்ல வேண்டியது.


  அக்நியில் ஒரு ஸமித்தை வைத்து அக்னி உபஸ்தானம் கரிஷ்யே என்று எழுந்து நின்று சொல்லவும்.


  அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விசுவானி தேவ வயுனானி வித்வான், யுயோத் யஸ்மத் ஜுஹு ராண மேனோ பூயிஷ்டாம்தே நம உக்திம் விதேம


  அக்னயே நமஹ மந்த்ர ஹீனம் க்ரியாஹீனம் பக்திஹீனம் ஹுதாசன யத்து தம்து மயா தேவ பரிபூரணம் ததஸ்துதே ப்ராயஸ்சித்தானி அசேஷானி தபஹ் கர்ம ஆத்ம


  கானிவை யானி தேஷாம் அசேஷானாம் ஸ்ரீக்ருஷ்ணானு ஸ்மரணம் பரம் . ஶ்ரீ க்ருஷ்ண; க்ருஷ்ண க்ருஷ்ண
  அபிவாதயே========= நமஸ்காரம்.
  ப்ராதர்//ஸாயம் ஒளபாஸன ஸாத்குண்யார்த்தம் அ நாக்ஞ்யாதி மந்திர ஜபம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொண்டு அநாக்ஞாதம் யதாக்ஞாதம் யக்ஞயஸ்ய க்ரியதே மிது: அக்னே ததஸ்ய கல்பய த்வகும்ஹி வேத்தயதா ததகும் என்று கூற வேண்டும்.
  சிறிது தண்ணீர் விட்டு சாம்பல் குழைத்து ரக்ஷை செய்து தரிக்க வேண்டிய மந்திரம்.
  ப்ருஹத் ஸாம க்ஷத்ரப்ருத் ,வ்ருத்த ,விஷ்னியம், த்ருஷ்டு பெளஜஸ்ஸுபித முக்ர வீரம். இந்தரஸ் தோமேன பஞ்ச தசேன மத்யமித வாதேன ஸகரேண ரக்ஷ. பஸ்மாவை தரித்து ஆசமனம் செய்யவும்.
  காயேன வாசா மனஸே இந்திரியைர்வா புத்தியார்த்தனாவா ப்ருஹதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஸ்ரீ மன் நாராயணாயேத்தி ஸமர்ப்பயாமி. என் தீர்த்தம் பூமியில் விட வேண்டும்.
  முற்றிற்று.
  முதலில் இவ்வளவு நாட்களாக செய்யாததற்கு விச்சின்ன அக்னி ஸந்தானம் செய்ய வேண்டும். பிறகு ஒளபாஸனம் செய்து விட்டு அந்த அக்னியை ஒரு மண் பானையில் வரட்டி, உமி, தவிட்டுடன், வைத்து அது அன யாமல் காத்து, மாலை மறுபடியும் ஸ்நானம் செய்து பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டு
  இந்த அக்னியில் ஒளபாஸனம் செய்து விட்டு திரும்ப இந்த அக்னியை மண் பானையில் அணையாமல் பத்திரமாக பாது காக்க வேண்டும். மறு நாள் காலை இதே அக்னியில் ஒளபாசனம் செய்ய வேண்டும். அக்னி அணைந்து விட்டால் விச்சின்னாக்னி ஹோத்ரம் மறுபடியும் செய்து அந்த அக்னி அணையாமல் பாதுகாத்து
  தினமும் அதிலேயே இரு வேளையும் ஒளபாசனம் செய்ய வேண்டும். மாலை ஒளபாசனம் சூர்ய அஸ்தமனதிற்குள் செய்ய வேண்டும். ஒரு வேளையும் செய்யாமல் இருக்க கூடாது. வெளியூர் சென்றால் மனைவியோ அல்லது வேறு யாரோ ஒருவர் செய்ய வேண்டும். அந்த காலத்தில் கூட்டு குடும்பம் ஆனதால் வீட்டிலுள்ள யாரோ ஒருவர் செய்து கொண்டிருந்தனர்.
  மனைவி செய்வதானால் மந்திரமில்லாமல் களைந்த அரிசியை இரு பிடிகள் போட்டு அணையாமல் பார்த்து கொள்ளலாம். காலை சூர்ய உதயத்திற்கு பிறகு தான் செய்ய வேண்டும்.
  இது தான் முடியாமல் பலர் செய்வதில்லை.
Working...
X