Announcement

Collapse
No announcement yet.

நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி.

    .கருட பஞ்சமி அல்லது நாக பஞ்சமி 21-08-2023.
    கச்யபருக்கு கத்ரூ என்பவளிடம் உண்டானவர் நாகர். தாய் சொல்லை கேட்காததால் தாயே தீயில் விழுந்து இறக்கும்படி சபித்தாள். அந்த சாபத்தால் பல பாம்புகள் தீயில் மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை

    நிறுத்தி சாபத்தை அகற்றினார். அது இந்த சிராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதி அன்று தான். ஆகவே இன்று பாம்புகளை பூஜித்தால் நன்மை உண்டாகும். ஆகவே இன்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜை செய்யலாம்.


    மேலும் வம்சத்தில் நல்ல குழந்தைகள் ஏற்படவும் ஏற்படாமல் செய்யவும் சக்தியுடையவர் நாகராஜா. .. ஸந்தானம் உண்டாக நாகப்ரதிஷ்டை செய்ய சொல்கிறது சாஸ்திர விதி. மஹா விஷ்ணு அனந்தன் என்ற பாம்பாக

    இருந்து கொண்டு பூமியை தாங்கி வருகிறார், அவருக்கு உதவியாக தக்ஷன் , வாஸுகி, கார்கோடன் என்ற பாம்புகளும் உள்ளன.

    தினசரி ஸந்தியாவந்தனத்தில் அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தோ என்று சொல்லி பாம்புகளை ப்ரார்திக்கிறோம்.

    வயலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்மணியின் நான்கு ஸஹோதரர்களை ஸர்ப்பம் தீண்டியது. அந்த பெண்மணி ஸர்ப்ப பூஜை செய்து ப்ரார்தித்து தனது சஹோதரர்களை காப்பாற்றினாள்...

    அதுவே நாக பஞ்சமி. ஆகவே இன்று ஸஹோதரிகள் தன் உடன் பிறந்த ஸஹோதரர்களின் நன்மைக்காக வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த பாம்பு பிம்பத்தையும், நடுவில் புஷ்பம் கட்டிய ஒரு மஞ்சள் சரட்டையும்

    பூஜை செய்து தனது வலது கையில் சரட்டை கட்டி கொள்ள வேண்டும் .வீட்டில் பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள பாம்பு புற்றுக்கு சென்று பால் விட்டு தாம்பூலம், பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி விட்டு

    வர வேண்டும் .புற்றுக்கு சென்று பால் விட்டு வர வசதி இல்லாதவர்கள் நாக பிம்பத்திற்கே பாலாபிஷேகம் செய்து விட வேண்டும்.

    வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் பூசி , குங்குமத்தால் – மேலே தலை கீழே வால் இருக்கும்படி – பாம்பு படம் வரைந்து கற்புரம் ஏ|ற்றி நமஸ்கரித்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.

    பாம்பு புற்று மண் எடுத்து வந்து அத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்து ஸஹோதரர்கள் வெளியூரில் இருந்தால் தபாலில் அனுப்பலாம். உள்ளூரில் இருந்தால் நேரில் சென்று கொடுத்து ஸஹோதரர் வயதில் மூத்தவராக

    இருந்தால் நமஸ்காரம் செய்யலாம். சிறியவராக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம். ஸஹோதரர்களும் தன் சக்திக்கு தக்கப்படி ஏதாவது பொருளை அன்பளிப்பாக தாம்பூலத்துடன் ஸஹோதரிக்கு கொடுக்கலாம்

Working...
X