Announcement

Collapse
No announcement yet.

அம்மா எனும் அன்பு தெய்வம்

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • அம்மா எனும் அன்பு தெய்வம்

  அம்மா எனும் அன்பு தெய்வம்
  notice

  Notice

  நமது பண்பாட்டில் தாய்க்கு ஆக உச்ச ஸ்தானம். அம்மாவே தெய்வம் என்று நமது சாத்திரங்கள் கூறும். அம்மாவைப் போல எதையும் திரும்ப எதிர்பாராத அன்பு செலுத்தக் கூடியவர்கள் எவரும் இலர் என்பதே கருத்து. சம்ஸ்க்ருத இதிகாச புராண இலக்கியங்கள் எங்கும் தாயை உயர்த்திச் சொல்லும் ஞான மொழிகள் ஏராளம் இருக்கின்றன.
  மகாபாரதம் சாந்தி பர்வம்
  मातृलाभे सनाथत्वमनाथत्वं विपर्यये |
  மாத்ருʼலாபே⁴ ஸனாதத்வமனாதத்வம்ʼ விபர்யயே |
  அம்மா என்பவள் இருக்கும் வரை எவரும் அநாதை ஆவதில்லை.

  न च शोचति नाप्येनं स्थाविर्यमपकर्षति।
  श्रिया हीनोऽपि यो गेहमम्बेति प्रतिपद्यते।।
  ந ச ஸோசதி நாப்யேனம்ʼ ஸ்தாவிர்யமபகர்ஷதி|
  ஸ்ரியா ஹீனோ(அ)பி யோ கேஹமம்பேதி ப்ரதிபத்யதே||
  தாய் இருக்கும் வரை கவலை என்பதே மனிதனுக்கு இல்லை. செல்வம் அனைத்தும் அழிந்த பின்னும் அம்மா என்று அழைக்க வீட்டில் தாய் இருந்தால் போதும் அன்னம் அளிக்கும் தெய்வமே இருப்பதாக பொருள்.

  नास्ति मातृसमा च्छाया नास्ति मातृसमा गतिः।
  नास्ति मातृसमं त्राणं नास्ति मातृसमा प्रिया।।
  நாஸ்தி மாத்ருʼஸமா ச்சாயா நாஸ்தி மாத்ருʼஸமா கதி​:|
  நாஸ்தி மாத்ருʼஸமம்ʼ த்ராணம்ʼ நாஸ்தி மாத்ருʼஸமா ப்ரியா||
  தாயை விட பெரிய நிழல் ஏதுமில்லை. தாயை விட சிறந்த அடைக்கலம் வேறு எவரும் இலர். தாயைப் போல நம்மைக் காப்பவர் வேறு எவருமிலர். தாயை விட இனிய வஸ்து வேறு எதுவும் இல்லை.

  समर्थं वाऽसमर्थं वा कृशं वाप्यकृशं तथा।
  रक्षत्येव सुतं माता नान्यः पोष्टा विधानतः।।
  ஸமர்தம்ʼ வா(அ)ஸமர்தம்ʼ வா க்ருʼஸம்ʼ வாப்யக்ருʼஸம்ʼ ததா|
  ரக்ஷத்யேவ ஸுதம்ʼ மாதா நான்ய​: போஷ்டா விதா⁴னத​:||
  தாயின் அன்பு தூய்மையானது. பிள்ளையிடம் குறை காணாதது. சமர்த்தோ, அசமர்த்தனோ ஒல்லியோ குண்டோ எப்படி இருந்தாலும் தாய் தன் பிள்ளையை ரட்சிக்கிறாள். அவளுக்கு ஈடாக வேறு எவராலும் இதை செய்ய முடியாது.

  அனுசாசன பர்வம்

  दशाचार्यानुपाध्याय उपाध्यायन् पिता दश।
  दश चैव पितृन् माता सर्वां वा पृथ्वीमपि।
  गौरवेणाभिभक्ति नास्ति मातृसमो गुरु:।।
  தஸாசார்யானுபாத்⁴யாய உபாத்⁴யாயன் பிதா தஸ|
  தஸ சைவ பித்ருʼன் மாதா ஸர்வாம்ʼ வா ப்ருʼத்வீமபி|
  கௌரவேணாபி⁴ப⁴க்தி நாஸ்தி மாத்ருʼஸமோ குரு:||
  ஒரு நல்ல ஆசான் (வழிகாட்டி) பத்து (கல்வி போதிக்கும்) ஆசிரியர்களுக்கு சமம். ஒருவருடைய தந்தை நூறு ஆசான்களுக்கு சமம். ஆனால் தாயின் அன்பு தந்தையின் அன்பை விட பத்து மடங்கு அதிகம். நம்மைத் தாங்கும் நிலத்தை விட தாய் பெரியவள். தாயை விட பெரியவர் எவரும் இலர்.

  தாயை போற்றிப் பாதுகாக்காமல் விட்டுவிடுகிற பிள்ளைகளை நமது கலாசாரம் ஏற்றுக் கொள்வதில்லை. மிகவும் பாவமான காரியம் தாயை அவமதிப்பது என்று கூறுகின்றன நமது சாத்திரங்கள்.

  स जीवति वृथा ब्रह्मन् यस्य माता सुदुःखिता ।
  यो रक्षेत् सततं भक्त्या मातरं मातृवत्सलः |
  तस्येहानुष्ठितं सर्वं फलं चामुत्र चेह हि ।
  मातुश्च वचनं ब्रह्मन् पालितं यैर्नरोत्तमैः |
  ते मान्यास्ते नमस्कार्या इह लोके परत्र च ।
  ஸ ஜீவதி வ்ருʼதா ப்ரஹ்மன் யஸ்ய மாதா ஸுது​:கிதா |
  யோ ரக்ஷேத் ஸததம்ʼ ப⁴க்த்யா மாதரம்ʼ மாத்ருʼவத்ஸல​: |
  தஸ்யேஹானுஷ்டிதம்ʼ ஸர்வம்ʼ பலம்ʼ சாமுத்ர சேஹ ஹி |
  மாதுஸ்ச வசனம்ʼ ப்ரஹ்மன் பாலிதம்ʼ யைர்னரோத்தமை​: |
  தே மான்யாஸ்தே நமஸ்கார்யா இஹ லோகே பரத்ர ச |
  ஹே பிரம்மா! மகன் இருந்தும் எந்த தாய் துக்கத்தில் மூழ்கி இருக்கிறாளோ, அவள் பெற்ற மகன் வாழும் வாழ்வு வீண். எந்த பிள்ளை தாயிடம் பாசத்துடனும், பக்தியுடனும் இருந்து அவளை போஷிக்கிறானோ, அவனுடைய கர்மவினைகள் அனைத்தும் நீங்கி, மறுவாழ்விலும் நன்மை பெறுகிறான். எவர் தாயின் சொல்படி நடந்து காட்டுகின்றனரோ அவர்கள் போற்றத் தக்கவர்.

  आस्तन्यपानाज्जननी पशूनां आदारलाभाच्च नराधमानां ।
  आगेहकर्मावधि मध्यमानां आजीवितात्तीर्थमिवोत्तमानां ।
  ஆஸ்தன்யபானாஜ்ஜனனீ பஸூனாம்ʼ ஆதாரலாபா⁴ச்ச நராத⁴மானாம்ʼ |
  ஆகேஹகர்மாவதி⁴ மத்⁴யமானாம்ʼ ஆஜீவிதாத்தீர்தமிவோத்தமானாம்ʼ |
  பாலருந்தும் காலம் வரை தான் மிருகங்கள் தாயை தேடுகின்றன, திருமணம் ஆகும் வரையில் தாயை மதிப்பவன் அதமன், வீட்டு வேலை செய்து பராமரித்து வருவது வரை தாயை வேண்டுபவன் மத்திமன், உத்தமர்களுக்கோ ஆயுள் முழுவதும் குடிநீரைப் போன்று அவசியமானவள் தாய்.

  தாயைக் குறித்த மேலும் சில வாக்கியங்கள்:

  हस्तस्पर्शो हि मातृणामजलस्य जलाञ्जलिः ।।
  ஹஸ்தஸ்பர்ஸோ ஹி மாத்ருʼணாமஜலஸ்ய ஜலாஞ்ஜலி​:
  பாசகவி (ப்ரதிமா நாடகம்)
  தாயின் தொடுகை, தாகமெடுத்தவனுக்கு தண்ணீர் கிடைத்தது போன்றது.

  माता किल मनुष्याणां देवतानां च दैवतम् ।
  மாதா கில மனுஷ்யாணாம்ʼ தேவதானாம்ʼ ச தைவதம் |
  பாசகவி (மாத்யம வ்யயோகம்)
  தாயே மனிதர்களுக்கு தெய்வங்களுள் சிறந்த தெய்வம்

  कुपुत्रो जायेत क्व चिदपि कुमाता न भवति॥
  குபுத்ரோ ஜாயேத க்வ சிதபி குமாதா ந ப⁴வதி||
  சங்கராச்சாரியாரின் தேவி அபராத க்ஷமாபன ஸ்தோத்திரம்
  மகன் தீயவன் என்று கேள்விபடுவதுண்டு. தாய் ஒருபோதும் தீயவள் ஆவதில்லை.

  जनको जन्मदातृत्वाद् पालनाच्च पिता स्मृतः।
  गरीयान जन्मदा तुश्य योअन्नदाता पिता मुने।।
  तयोः शतगुणे माता पूज्या मान्या च वन्दिता।
  गर्भधारणपोषाभ्यां सा च चाभयां गरीयसी।
  ஜனகோ ஜன்மதாத்ருʼத்வாத் பாலனாச்ச பிதா ஸ்ம்ருʼத​:|
  கரீயான ஜன்மதா துஸ்ய யோஅன்னதாதா பிதா முனே||
  தயோ​: ஸதகுணே மாதா பூஜ்யா மான்யா ச வந்திதா|
  கர்ப⁴தா⁴ரணபோஷாப்⁴யாம்ʼ ஸா ச சாப⁴யாம்ʼ கரீயஸீ|
  உயிர் அளித்துக் காப்பதால் பெற்ற தந்தை வணங்கத் தக்கவர்களுள் முக்கியமாகக் கருதப் படுகிறார். அவரை விடவும் சிறந்தவர் உணவளிப்பவர் (அன்னதாதா). அவர்களைப் போன்று நூறு பேர்கள் சேர்ந்தாலும் ஒரு தாய் ஆக முடியாது.

  आयः पुमान् यशः स्वर्ग कीर्ति पुण्यं वलं श्रियम् ।
  पशुं सुखं धनं धान्यं प्राप्रुयान्मातृवन्दनात् ।।
  ஆய​: புமான் யஸ​: ஸ்வர்க கீர்தி புண்யம்ʼ வலம்ʼ ஸ்ரியம் |
  பஸும்ʼ ஸுகம்ʼ த⁴னம்ʼ தா⁴ன்யம்ʼ ப்ராப்ருயான்மாத்ருʼவந்தனாத் ||
  புகழ், பெருமை, ஸ்வர்க்கம், புண்ணியம், பலம், லட்சுமி, பசுக்கள், சுகம், தன தான்யம் ஆகிய அனைத்தும் தாயை வணங்குவதால் கிடைக்கும்.


Working...
X