Announcement

Collapse
No announcement yet.

Bhagavad gitsa dhyana slokas in tamil

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Bhagavad gitsa dhyana slokas in tamil

  Bhagavad gita dhyana sloka in tamil
  பகவத்கீதை த்யானச்லோகங்கள் தொடர்ச்சி


  6. பீஷ்மத்ரோணதடா ஜெயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா
  சல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேன வேலாகுலா
  அஸ்வத்தாம விகர்ணகோரமகரா துர்யோதனாவர்த்திநீ
  ஸோத்தீர்ணா கலு பாண்டவை: ரணநதீ கைவர்தக: கேசவ:


  பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப்போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.


  இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.


  சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


  துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.


  கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!


  7. பாராசர்யவச: சரோஜம் அமலம் கீதார்த்தகந்தோத்கடம்
  நானாக்யானககேசரம் ஹரிகதா சம்போதனாபோதிதம்
  லோகே ஸஜ்ஜனஷட்பதை: அஹரஹ: பேபீயமானம் முதா
  பூயாத் பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்சின: ஸ்ரேயசே


  அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.


  8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
  யத்க்ருபா தமஹம் வந்தே பரமானந்த சாகரம்


  யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.


  9. யம் ப்ரம்மா வருணேந்த்ரருத்ர மருத: ஸ்துந்வந்தி திவ்யை: ஸ்தவை:
  வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷதை: காயந்தி யம் ஸாமகா:
  த்யானாவஸ்தித்த தத்கதேன ,மனஸா பச்யந்தி யம் யோகின:
  யஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா: தேவாய தஸ்மை நம:
  இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.
Working...
X