Announcement

Collapse
No announcement yet.

Temples for Childless couples

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Temples for Childless couples

  Puthirakameshwara Temple

  குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர், ஆரணியில் அருள் பாலிக்கிறார்.

  தல வரலாறு:
  தசரத சக்கரவர்த்திக்கு, நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தைப்பேறு உண்டாக குல குரு வசிஷ்டரிடம் ஆலோசனை கேட்டார். அவர், சிவனை வழிபட அந்த பாக்கியம் கிடைக்குமென்றார். அதன்படி தசரதர், சிவலிங்க பிரதிஷ்டை செய்து, ரிஷ்ய சிருங்க மகரிஷியின் தலைமையில் புத்திர காமேஷ்டி யாகம் நடத்தி சிவனை வழிபட்டார். இதன் பின், அவர் ராமர், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் என நான்கு பிள்ளைகளைப் பெற்றார். சிவனுக்கு "புத்திரகாமேட்டீஸ்வரர்' என்று பெயர் சூட்டினார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

  தசரதர் சன்னதி:
  ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய தீர்த்தம் நதியாக பெருக்கெடுத்தது. கமண்டல நதி எனப்பட்ட, இத் தீர்த்தக் கரையில் அமைந்த கோயில் இது. கோயில் எதிரே இந்த நதி வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி சுழித்துக் கொண்டு ஓடுகிறது. மழைக்காலங்களில் இந் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடும். புத்திரகாமேட்டீஸ்வரர், ஒன்பது தலை நாகத்தின் கீழ் காட்சியளிக்கிறார். பவுர்ணமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று, சுவாமி புறப்பாடும் உண்டு. அம்பாள் பெரிய நாயகிக்கு கொடி மரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.
  கோயிலுக்கு வெளியில் தசரதர் சன்னதி இருக்கிறது. இவர் சக்கரவர்த்தியாக இல்லாமல், யாகம் நடத்தியபோது இருந்த அமைப்பில் முனிவர் போல காட்சியளிப்பது வித்தியாசமான தரிசனம். கைகளில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் வைத்திருக்கிறார்.

  குழந்தை பாக்கிய வழிபாடு:
  குழந்தை வேண்டி புத்திரகாமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச்சாதமோ, கறிவகைகளுடன் சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுத்து, பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும். ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோயிலில் இந்த மாலை கிடைக்கும்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமியன்று கோயில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் ரூ.500.

  பிறநாட்களில் தனியாக யாகம் நடத்த கட்டணம் ரூ.5500. (கோயில், அர்ச்சகர் செலவு உட்பட) புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம். இதற்கும் ரூ.5500 கட்டணம்.

  முதலும் முடிவும்:
  கமண்டல நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். ஒரு செயலைத் துவங்கும்போது, இந்த விநாயகரை வணங்கி துவங்குகின்றனர். அச்செயல் சிறப்பாக முடிந்ததும் ஆஞ்சநேயருக்கு நன்றி சொல்கின்றனர். ஆஞ்சநேயர் சிலையில் சங்கு, சக்கரம் உள்ளது.

  இருப்பிடம்:
  திருவண்ணா மலையில் இருந்து 58 கி.மீ., தூரத்தில் ஆரணி உள்ளது (வேலூரில் இருந்து 41 கி.மீ.,). பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ உண்டு.

  திறக்கும் நேரம்: காலை 7- 11 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.

  போன்: 97891 56179, 96294 73883.

  http://www.penmai.com/forums/infertility-treatments/436-temples-childless-couples.html

 • #2
  Re: Temples for Childless couples

  சார் இனிமேல் குழ்ந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலை உள்ளோர் இங்கு தரிசனம் செய்தால் புத்ர தோஷம் நீங்குமா

  Comment


  • #3
   Re: Temples for Childless couples

   Originally posted by soundararajan50@gmai View Post
   சார் இனிமேல் குழ்ந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலை உள்ளோர் இங்கு தரிசனம் செய்தால் புத்ர தோஷம் நீங்குமா

   திரு சௌந்தரராஜன் சார்,
   நீர் மிகவும் அவசரக்காரராக இருப்பீர் போல இருக்கிறது. யாரோ அரச மரத்தை சுற்றி விட்டு உடனே அடிவயிற்றை தொட்டு பார்த்துக்கொண்டாளாம். அது மாதிரி அல்லவா இருக்கிறது உமது அவசரம். சார் இதற்க்கெல்லாம் கொஞ்சம் பொறுமை வேண்டும் .

   Comment


   • #4
    Re: Temples for Childless couples

    சார் எனது கேள்வியின் அர்த்தம் அப்படி ஒரு விசேஷம் உண்டென்றால் எனக்கு தெரிந்த சிலர் அந்நிலையில் இருப்பதால் அவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளத்தான்

    Comment

    Working...
    X