ஸ்வாமி, அடியேன் ராமானுஜ தாசன் கிருஷ்ணன் தண்டசமர்பித்த
விஞ்ஞாபனம் . உபய குசலோபரி. ஒரு சந்தேக நிவர்த்திக்காக எழுது
கிறேன். சமீபத்தில் நங்கை நல்லூரில் ஒரு வைணவ பெரியவர் பரமபதித்து விட்டார். அவருக்கு 90 திருனஷ திரங்களுக்கு மேல்
கழிந்துவிட்டது. அவருடைய பார்யை பரமபதித்து ஒரு சில வருடங்கள் சென்றுவிட்டன. அவருக்கு சந்ததி ஏதும் கிடையாது.
அவருடைய மருமான் தான் அவருக்கான அபர கிரியைகள் எல்லாம்
செய்து முடித்தார். நன்காம் நாள் அன்றே பத்து நாள் காரியங்களை
செய்து முடித்து ஐந்தாம் நாள் ஏகொமம் முடித்து ஆறாம் நாள்
சபிண்டிகரணம் முடித்து ஏழாம் நாள் சுப ஸ்வீகாரமும் முடித்து
விட்டார். இதனை நான் குறையாகவோ ஆவலாதி யாகவோ சொல்ல
முன்வர வில்லை. ஆனால் இத்தகைய முறை உங்களை போன்ற
பெரியவர்களால் அங்கீகரிக்கப் பட்டால் வருங்காலத்தில் அயல்
நாடுகளில் வசிக்கும் பிள்ளைகளின் தாயாரோ தகப்பனாரோ பரம
பதித்து விட்டால் இந்த சுலப முறை அவர்களுக்கு சீக்கிரமாக
ஊர் திரும்ப மிகவும் வசதி யாக இருக்கும்.
தேவரீரின் ஒப்புதல் அல்லது ஆஷேபனை நிச்சயமாக ஒரு வழி
காட்டுதலாகவே அமைய பெரும்.
ராமானுஜ தாசன்,
கிருஷ்ணன்.

--
22/4 RANGAIAH GARDENS
P.S.SIVASWAMY SALAI
MYLAPORE
CHENNAI -- 600004

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இந்தக் கேள்வியை அடியேனிடம் கேட்க எண்ணியதற்கு மிக்க நன்றி!
ஆனால் தர்மசாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது என்ன? அதன் பொருள் என்ன என்பதைக் கூறுவதற்கே
அடியேனுக்குத் தகுதி உள்ளதா என்று ஐயப்படுகிறேன்.
அப்படியிருக்க, இதை அங்கீகரிக்கவோ அல்லது எதிர்க்கவோ
நிச்சயமாக அடியேனுக்கு அருகதை இல்லை.

மேலும், சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி பார்த்தால்,
கால, தேச, வர்தமானத்திற்குத் தகுந்தார்போல் ஆசார்ய புருஷர்கள்
சாஸ்திரததில் தேவையான மாறுதலைச் செய்துகொள்ளலாம் என
எந்த இடத்திலும் கூறியிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் சாஸ்திரத்தில் வைதீக ப்ராஹ்மணர்களின் (குறைந்த பக்*ஷம் நான்குபேர்)
அநுஜ்ஞை பெற்றுக்கொண்டு (உத்திரவு பெற்றுக்கொண்டு) அவர்களின்
அநுமதியின் பேரில் காரியம் செய்தால் அது சாஸ்த்ர சம்மதம் ஆகும் என்று
கூறப்பட்டுள்ளது.

இப்படிக் கூறக் காரணம், நல்ல வைதீக ப்ராஹ்மணர்கள், தவறான முன்னுதாரணத்திற்குத்
துணைபோக மாட்டார்கள், சாஸ்த்திரத்தின் எதிர்பார்ப்புக்கு விரோதமான
விஷயங்களை அநுமதிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்ககையிலும்,
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சாஸ்திரப்படி நடக்க இயலாது தவிக்கும்
சூழலில் ஒரு கர்மாவை விக்னமாக விட்டுவிடாமல், சாஸ்திரத்தில் அடுத்துக்
கூறப்பட்டுள்ள ஏற்ற முறையினை அறிவுறுத்தி அந்த வகையில் கர்மாவை
நிறைவேற்ற உதவுவார்கள் என்ற நம்பிக்கையிலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எனவே, ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானம்போட்டு அறிவித்தால் அது
சாஸ்திரத்தால் செல்லாததாகிவிடும். அவரவருடைய சூழ்நிலையை
அந்தந்தந்தக் காலத்தில் உள்ள பெரியோரிடம் தெரிவித்து, 100 சதவீதம்
சாஸ்த்ரப்படி செய்ய முடியாத சூழ்நிலையை விளக்கி, தகுந்த அநுமதி பெற்றுச்
செய்வதே உத்தமம் என்பது அடியேனுடைய மிகமிகத் தாழ்மையான கருத்து.
தாஸன்.