RIK VEDAM SAMITHAA THAANAM.
ருக் வேதம் ஸமித்தாதானம்.

ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;

கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்

விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது

தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.

ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.

ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.

அப உபஸ் ர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.

அக்னியை ஜ்வாலை செய்து , அக்னியின் முன்னிலையில் ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு பூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லி க்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால் அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.

ஒரு சமித்தை எடுத்துகொண்டு
அக்னயே சமித மித்யஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: த்ருஷ்டுப் சந்த: அக்னிர் தேவதா, சமிதா தானே வினியோக:

அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸேதயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா, அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.

என்று சொல்லி கைகளில் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு இரு கைகளை. யும் அக்னியில் காண்பித்து தேஜஸா மா ஸமனஜ்மி என்று சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும்.

இப்படி மூன்று முறை சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும். பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தை அக்னியில் வைக்கவும்.

அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு
மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது.

யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்.

ௐ ச மே ஸ்வரஸ்ச்மே யக்ஞோபசதே நமச்ச/ யத்தே ந்யூனம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே நம:

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.

பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது

மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.

மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).

பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.

ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

பிறகு காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி

மயாக்ருதம் ப்ராத:/ஸாயம் (காலை/ மாலை) ஸமிதா தானாக்யம் கர்ம ௐ தத்ஸத் ப்ருஹ்மார்பணம் அஸ்து. என்று ஒரு உத்திரிணி ஜலம் கையில் விட்டு தரையில் விடவும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends