1. சோம்பேறி என்பவன் இரண்டு முள்களும் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும் ஓடினாலும் பயனில்லை!
-கூப்பர்

2. உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன்: உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது!
-பெர்னார்ட் ஷா

3. ஊடுருவும் சூரிய ஒளி போன்றது உண்மை; அதை யாராலும் மூடி மறைக்க முடியாது!
-மில்டன்

4. உழைத்துச் சம்பாதிக்காத ஓய்வை, நாம் அனுபவிக்க முடியாது!
-டென்னிசன்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends5. பட்டங்கள் மனிதர்களுக்குப் பெருமை சேர்ப்பதில்லை; மனிதர்கள்தான் பட்டங்களுக்குப் பெருமை அளிக்கிறார்கள்!
-மாக்கியவெல்லி

6. கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!
-ரூபி பிளேக்

7. செய்யத்தக்கது இது என்று தெரிந்தும், எவன் அதைச் செய்யாமல் இருக்கிறானோ, அவனே கோழை!
-கன்ஃபூசியஸ்

8. அநீதி இழைப்பவன், அநீதிக்கு ஆளானவனைவிட அதிகமாகத் துயரடைவான்!
-பிளேட்டோ

9. மனிதர்களை உயர்ந்த மனிதர்களாக்குவது சோதனை நேரம்தான்! வெற்றி நேரமல்ல!
-தாமஸ் ஹூட்

10. மிக நல்ல புத்தகங்களை முதலிலேயே படித்துவிடு! இல்லையெனில் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காமலேயே போய்விடும்!
-கோரா