Announcement

Collapse
No announcement yet.

சுருக் ' சூத்திரங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சுருக் ' சூத்திரங்கள்

    அமெரிக்காவைச் சேர்ந்த ' திங்க்ஆஹா ' என்ற பதிப்பகம் சமீபகாலமாகப் பல தலைப்புகளில் குட்டிப் புத்தகங்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறது . இவற்றை ' ட்வீ ட் ' புத்தகங்கள் என்று அழைக்கிறார்கள் .
    அதென்ன ' ட்வீ ட் ' ?
    இன்ட்ர் நெட்டில் ' ட்வீ ட்டர் ' என்ற சோஷியல் நெட்வொர்க் இணைய தளத்தைப்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அங்கே நாம் பேச விரும்புகிற விஷயங்களை 140 எழுத்துகளுக்குள் சொல்லி முடித்துவிட வேண்டும் . இதைத்தான் ' ட்வீ ட் ' என்கிறார்கள் .
    இப்படி ஒவ்வொரு தலைப்பிலும் ரத்தினச்சுருக்கமாக 140 எழுத்துகளுக்குள் அடங்கிய 140 வாசகங்களைத் தொகுத்தால் அவைதான் ' ட்வீ ட் ' புத்தகங்கள் . நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது, திட்டமிடுவது, முடிவெடுப்பது, புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது, தன்னம்பிக்கை என்று பல தலைப்புகளில் இந்தப் புத்தகங்கள் வெளியாகியுள்ளன .
    --- என். சொக்கன் , வெற்றிக்கு ஒரு புத்தகம் . குமுதம் , 29 . 9 . 2010
Working...
X