Re: Rangoli on amavasya
Respected Swamin ,
Many many thanks for the appropriate explanation about rangoli.
Warm regards.
Adiyen dasan,
Govindarajan.
Announcement
Collapse
No announcement yet.
Rangoli on amavasya
Collapse
X
-
Re: Rangoli on amavasya
sri it is very nice of you to give such a post well explained. This is the reason why i have posted it in our forum to know the truth of what i have read. I sincerely thank you,
Leave a comment:
-
Re: Rangoli on amavasya
ஸ்ரீ :
இதுபற்றி வேறு யாரும் வருத்தப்பட்டதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை.
நாளை நாம் இறந்துபோனாலும், நாமும் எதிர்மறை சக்தியாகிவிடுவோம் என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்கிறீர்களா?
எதிர்மறை சக்தி என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்? பிசாசு போன்றவையா?
ப்ரயோகத்தில் 12ம் நாள் ஸபிண்டீகரணம் பண்ணும்போது ஸங்கல்பத்தில் ”வஸ்வாதி பித்ருத்வ ஸித்யர்த்தம், பைசாச பாதா நிவ்ருத்யர்த்தம்” என்று சொல்லப்பட்டுள்ளனது.
பித்ருக்கள் - ஸ்வர்கத்திற்காக காத்திருக்கும் தேவதைகள் என்று வர்ணிக்கப்படுகிறது.
விவாஹ மந்திரத்தில் ஒரு இடத்தில் - வரன் தன் மாமியாராக வரப்போகிறவரைப் பார்த்து, அவர்களைக் கலங்கவேண்டாம் என்றும்,
பகன், அர்யமா, ஸவிதா போன்ற தேவதைகள் மட்டுமின்றி வானத்தில் உள்ள பித்ருக்களுக்கும் இந்த விவாஹமானது மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியது-
”வாமம் பித்ருப்ய மய இதம் ஸமேரிரே ...” என்கிற வேத மந்திரத்தால் குறிப்பிட்டுச் சொல்வதாக அமைந்துள்ளது.
ஏகாக்னி காண்டம் என்னும் வேத பாகத்தில் பித்ரு தேவதைகளுக்காகவே ஒரு அநுவாகத்தை ஒதுக்கி அவர்களுக்காகப் பண்ணவேண்டிய கர்மாக்களுக்கான மந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு எதிர்மறை சக்தியை ஆத்தில் வைத்து ஆராதிக்கவேண்டும் என்று வேதம் சொல்லுமா?
தேவதைகள் ப்ரக்ருதி என்கிற பூமி ஸம்பந்தப்படாதவர்கள், பித்ருக்கள் மனித சரீரம் எடுத்ததனால் பூமி ஸமபந்தப்பட்டவர்கள் எனவே தேவதைகளைக் காட்டிலும்
பித்ருக்கள் தாழ்ந்தவர்கள் எனக் கொள்ளலாமேயன்றி அவர்களும் தேவதைகளே.
எனவேதான் நாந்தி என்கிற பெயரில் ஒவ்வொரு சுபகாரியத்திலும் பித்ருக்களையும் வரவழைத்து ஆராதிக்கிறார்கள்.
ச்ராத்தம், தர்பணம் போன்றவற்றில் பித்ருக்களை ஆவாஹனம் பண்ணும்போது சொல்லும் மந்திரத்தில்
”ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: ...” என்கிற மந்திரத்தில் பித்ருக்களை வாருங்கள், சௌம்யமாகவும், கம்பீரமாகவும், முன்னோர் பதித்த வழித்தடத்திலும் வாருங்கள்
வந்து எங்களுக்கு தஹத்தஹாயமான, தேஜஸ் பொருந்திய, 100 ஆண்டுகள் வாழக்கூடிய தீர்காயுசான ப்ரஜைகளை (வாரிசுகளை) வழங்கி ஆசீர்வதிப்பதற்காக வாருங்கள்
என்றுதான் அந்த மந்திரம் குறிப்பிடுகிறது.
ஏற்கனவே, பித்ருக்களை பேய், பிசாசு என்கிற எண்ணத்தில் கொண்டுதான் ச்ராத்தாதிகளை ஆத்தில் பண்ணாமல் வெளியில் போய் செய்துகொண்டுள்ளார்கள்
இதுபோன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்பினால், இந்த நிலை இன்னும் மோசமடையும் என்பது திண்ணம்.
இதனால் நமக்கென்ன என்று எண்ணவேண்டாம், மேற்சொன்ன பித்ரு ஆவாஹன மந்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி,
பித்ரு தேவதைகளே எதிர்கால சந்ததியினரின் மணவாழ்க்கை, வாரிசுகள் இவற்றுக்கு ஆசீர்வதிக்கும்
சக்தியுடையவர்கள். அவர்கள் சரிவர ஆராதிக்கப்பட்டால்தான், நம் எதிர்கால சந்ததியினரின் மணவாழ்க்கை ஒழுங்காக இருக்கும்,
வாரிசுகளும் சிறப்பாக இருப்பர்.
குறிப்பு - என்னென்னவோ போஸ்டிங் செய்கிறார்கள், அடியேன் எதிலும் தலையிடுவதில்லை என்று ஒதுங்கியுள்ளேன்
ஆயினும் இது மிகவும் தவறான கருத்து என்பதால் இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்.
மற்ற உறுப்பினர்களும் வாளா இருக்காமல் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யவேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன்.
தாஸன்
என்.வி.எஸ்
Leave a comment:
-
Re: Rangoli on amavasya
Respected Swamin,
Thank you very much for the detailed post. When i've received the post i was totally confused. Thank you for the clarification about KOLAM
Leave a comment:
-
Re: Rangoli on amavasya
ஸ்ரீ
”கோலம் என்பது ஒரு சக்கரம் (graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நேர்மறை சக்தியை (positive energy) மட்டுமே உள்ளே அனுப்பும்.”
இதுவும் ஒரு ஆதாரமற்ற இடுகை ஆகும்.
கோலம் என்பது வீட்டிற்கு அழகு சேர்க்கும் ஒரு கலை அம்சம் - அவ்வளவே.
ஸம்ப்ரதாயமாக - ஒரு இழை கோலத்தை அபர காரியத்திற்கும்
இரு இழைக் கோலத்தை சுப காரியத்திற்கும்
மூன்று இழைக் கோலத்தை - ச்ராத்த காரியத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர்
இது கூட - அபர காரியத்திற்கு ஒரு தர்பத்தினால் செய்யப்பட்ட பவித்ரம் என்றும்
சுப காரியத்திற்கு இரு தர்பத்தினால் செய்யப்பட்ட பவித்ரம் என்றும்
ச்ராத்த காரியத்திற்கு மூன்று தர்பங்களால் செய்யப்பட்ட பவித்ரம் என்றும் - ப்ரயோக சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதை
அடியொற்றி அதே முறையைக் கோலத்திலும் கொண்டுவந்திருக்கவேண்டுமேயன்றி,
“அலங்க்ருத்ய” என்கிற வார்த்தை தவிர கோலம் பற்றிய விரிவான விளக்கம் எதுவும் ப்ரயோக சாஸ்த்ரத்தில் இல்லை.
Leave a comment:
-
Re: Rangoli on amavasya
ஸ்ரீ:
பித்ருக்கள் எதிர்மறை சக்தி என்பதை வன்மையாக கண்டிக்கிறேன். மனதில் தோன்றியதை எல்லாம் ஆதரமின்றி பரப்புகிறார்கள்.
சரியான விளக்கம்: பித்ருக்கள் உட்பட அனைத்து தேவதைகளும் நியதிக்கு கட்டுப்பட்டவர்கள், எனவே வாசலில் இடப்பட்டுள்ள இரு இழை கோலம் மற்ற தேவதைகளுக்கானது என்பதால் நாம் செல்வது முறை ஆகாது என்பதால் தயங்குவார்கள். எனவே பித்ரு தினங்களில் இரு இழைக்கு பதிலாக 3 இழையில் கோலமிட்டால் அவர்கள் உற்சாகமாக பங்கேற்பார்கள், மற்ற தேவதைகளும் பித்ரு தினம் என்பதை அறிந்து கொள்வார்கள்.
Leave a comment:
-
Rangoli on amavasya
அமாவாசை மற்றும் தர்பண தினத்திலும் வீட்டு வாசலில் கோலம் போடலாமா ?
கோலம் என்பது ஒரு சக்கரம் (graphical diagram) இது நம் வீட்டிற்க்கு நேர்மறை சக்தியை (positive energy) மட்டுமே உள்ளே அனுப்பும்.
எதிர்மறை சக்தியை (negative energy) தடுக்கும் உள்ளே நுழைய விடாது.
அதனால் தான் கோலம் இடுவது வழக்கம், முன் காலத்தில் சாணம் தெளித்து கோலம் போட்டனர் நமது முன்னோர்கள் நச்சு பொருள்களும் வாரமல் தடுக்க.
அமாவாசை மற்றும் தர்பண தினங்கள் என்பது நாம் நம் பித்துருக்களுக்காக (முன்னோர்கள்) செய்வது.
நாம் அவர்களை தெய்வமாக பாவித்தாலும், அவர்கள் ஏதிர்மறை சக்தியே, அவர்களை வாசலில் உள்ள கோலம் தடுத்து நிறுத்தும்.
உள்ளே தலைவாழஇலை விரித்து விருந்து வைத்து கதவை தாள்இட்டு முடியது போல்தான்.
அவர்களால் வந்து உண்ண முடியாது.
எனவேதான் அமாவாசையன்றும் மற்ற தர்பணகாலத்திலும், ஸ்ரார்தகாலத்திலும் கோலம் போட கூடாது
இந்த மகாளய பட்ச காலத்திலும் ஒருநாள் தர்பணம் செய்தாலும், ஹிரண்யமாக செய்தாலும், ஸ்ரார்தமாக செய்தாலும், பட்சகாலத்தில் முழுவதும் தர்பணம் செய்தாலும் 15 நாட்களுக்கும் பித்ருக்கள் வருகை புரிவதால் 15 நாளும் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது.
தர்பணம் முடிந்த பிறகு நித்ய பூஜைகள் செய்யலாம்.
Source: As received thro emailLast edited by soundararajan50; 08-03-17, 06:24.Tags: None
Leave a comment: