இறைவா!!!


வருமானம் குறைவானாலும் வயிறாற உணவை கொடு!


வாழ்நாள் குறைவானாலும் நோயில்லா உடலைக் கொடு!


வசதி குறைவானாலும் அன்பான உறவைக் கொடு!


உறவுகள் குறைவானாலும் உயிர்தரும் நட்பைக் கொடு!


படிப்பு குறைவானாலும் நடிப்பில்லா தொழிலைக் கொடு!


பணம்குறைவானாலும் பக்தி செலுத்தும் மனதைக் கொடு!


பிறர் வலியை தன்வலியாய் உணரும் உணர்வைக் கொடு!


மலைபோல் பணம் இருந்தாலும்
தர்மம் செய்யும் சிந்தை கொடு!


வாழ்வில் பல துணைகள் இருந்தாலும் உயிர்துணையாய் இறைவா நீயே வருவாய்!!!


படித்ததில் பிடித்தது