Announcement

Collapse
No announcement yet.

மஹாளபக்ஷம் - பலகாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #61
    'கேழ்வரகு உளுந்து அவல் தோசை '


    அளவு :

    4 கப் கேழ்வரகு மாவு
    1 கப் உளுந்து
    2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
    ( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
    செய்முறை:

    அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
    பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
    தண்ணீர் மட்டா விடவும்.
    ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
    அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
    ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
    அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
    அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
    ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்சூப்பர் !

    Last edited by krishnaamma; 03-08-15, 19:55.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #62
      உப்புமா கொழுக்கட்டை 2


      தேவையானவை:

      பச்சரிசி - ஒரு கப் (வறுத்து ரவையாக உடைக்கவும்)
      துருவிய இஞ்சி
      ஊற வைத்த கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
      பச்சை மிளகாய் - கொத்த மல்லி விழுது - சிறிதளவு
      நெய் - ஒரு டீஸ்பூன்
      உப்பு - தேவையான அளவு.

      செய்முறை:

      இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவிட்டு, ஒரு டீஸ்பூன் நெய், ஊற வைத்த கடலைப்பருப்பு, உப்பு, துருவிய இஞ்சி, மாங்காய், பச்சை மிளகாய் - கொத்தமல்லி விழுது, பச்சரிசி ரவை சேர்த்துக் கிளறி இறக்கி, உருண்டைகளாகப் பிடித்து, 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
      தேங்காய் சட்டினியுடன் அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும்.


      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #63
        Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

        ரவா வெஜிடபிள் கொழுக்கட்டை


        தேவையானவை:

        வறுத்த பாம்பே ரவா - 1/2 கிலோ
        துருவிய கேரட், நறுக்கிய பீன்ஸ், குடமிளகாய் - எல்லாமாக சேர்த்து 2 கப்
        நெய் - 2 - 4 டீஸ்பூன்
        கொத்துமல்லி அல்லது புதினா - அலசி, பின் பொடியாக நறுக்கவும்
        பச்சை மிளகாய் - 2 - 4 பொடியாக நறுக்கவும்
        உப்பு

        செய்முறை:

        கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து, சிறிது வெந்நீர் தெளித்துப் பிசைந்து,நீள் உருண்டை களாக உருட்டி, நீராவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.
        கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
        எண்ணெய் நெய் அதிகம் இல்லாத உப்புமா போல இருக்கும்.
        Last edited by krishnaamma; 06-10-15, 00:34.
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        Working...
        X