Announcement

Collapse
No announcement yet.

காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Guest's Avatar
    Guest replied
    Re: காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

    Originally posted by krishnaamma View Post
    இல்ல மாமா, எனக்கு தெரியலை உங்க அத்தை பாட்டி அந்தகலத்திலே யே

    உங்களுக்கு சூப்பர் ஆக ஏதேதோ செய்து தந்திருக்கா
    அப்படி சொல்லகூடாது.அதுலையும் உன்னை மாதிரி பொண்கள் டிரை பண்ணி பார்கணும். அதான் ஏதோ
    எனக்கு தெரிஞ்ச க்லு கொடுத்து இருக்கேனே. எப்பவாவது டிரை பன்னு.

    Leave a comment:

  • krishnaamma
    replied
    Re: காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

    Originally posted by P.S.NARASIMHAN View Post
    புளிப்பு கொழக்கட்டை.
    அந்த காலத்திலே(நான் சொல்லரது சுமார் 50 வருஷங்களுக்கு முன்னால்) மளிகை கடையிலே எல்லா பருப்பு நொய் கலந்து கிடைக்கும். இப்போது கனாகூட காணமுடியாது. அதை எங்க அத்தை பாட்டி வாங்கிவந்து பதமா கலந்து (அரைத்து) பெரிய பெரிய கிரிகெட் பந்து அளவுலே பிடித்து, வென்னீர் பானையில் வைக்கோல் போட்டு அதிலே வைத்து மூடி வைத்து வேகவைத்து எடுத்து கொடுப்போ.அடாடா
    அதன் ருசியே தனி. இப்போஎல்லாம் நொய்யே கிடைக்காதே. எப்படி செய்ய முடியும். நீங்கள் செய்வீங்களா. இப்போ எப்படி செய்யரது.
    இல்ல மாமா, எனக்கு தெரியலை உங்க அத்தை பாட்டி அந்தகலத்திலே யே உங்களுக்கு சூப்பர் ஆக ஏதேதோ செய்து தந்திருக்கா

    Leave a comment:

  • Guest's Avatar
    Guest replied
    Re: காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

    புளிப்பு கொழக்கட்டை.
    அந்த காலத்திலே(நான் சொல்லரது சுமார் 50 வருஷங்களுக்கு முன்னால்) மளிகை கடையிலே எல்லா பருப்பு நொய் கலந்து கிடைக்கும். இப்போது கனாகூட காணமுடியாது. அதை எங்க அத்தை பாட்டி வாங்கிவந்து பதமா கலந்து (அரைத்து) பெரிய பெரிய கிரிகெட் பந்து அளவுலே பிடித்து, வென்னீர் பானையில் வைக்கோல் போட்டு அதிலே வைத்து மூடி வைத்து வேகவைத்து எடுத்து கொடுப்போ.அடாடா
    அதன் ருசியே தனி. இப்போஎல்லாம் நொய்யே கிடைக்காதே. எப்படி செய்ய முடியும். நீங்கள் செய்வீங்களா. இப்போ எப்படி செய்யரது.

    Leave a comment:

  • காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

    மஹாளபக்ஷம் - பலகாரம் - காஞ்சிபுரம் இட்லி அதாவது குடலை இட்லி

    இதற்கு ஏன் இந்த பெயர் என்றால், காஞ்சிபுரம் கோவிலில் இதை 'குடலை இட்லி' என்று சொல்வார்கள். இதை மந்தாரை இலை இல் தான் செய்வார்கள், அந்த அளவு மாவு கெட்டியாக இருக்கும். இருக்கணும். எங்க அம்மா பாட்டி எல்லாம் இதை இட்லி தட்டில் செய்ய மாட்டா , சின்ன சின்ன கப் களில் அல்லது டம்ளர் இல் விட்டு வேக வைப்பார்கள். இப்ப நான் இட்லி தட்டிலேயே வார்த்து விடுவேன்.

    தேவையானவை :

    ஒரு கப் அரிசி
    முக்கால் கப் உளுத்தம் பருப்பு
    ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
    கொஞ்சம் நெய்
    கொஞ்சம் கறிவேப்பிலை
    பெருங்காயம் அரை ஸ்பூன்
    சுக்கு பொடி அரை ஸ்பூன்
    உப்பு
    ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

    செய்முறை :

    அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
    ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
    பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
    உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
    மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
    பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
    பிறகு இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி வார்க்கணும்.
    சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்
    இதற்கு தொட்டுக்கொள்ளவே எதுவும் வேண்டி இருக்காது. வேண்டுமானால் தோசை மிளகாய் பொடி போட்டுக்கலாம். இல்லாவிட்டால் கட்டி தயிர் நல்லா இருக்கும்.
Working...
X