4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 080/116 கச்சி அருளாளன் தாள் இச்சித்து இருப்பது என்று ?

திருப்பதி - 74/108. தொண்டை - 1/22 : திருக்கச்சி - அத்திகிரி

பொருள் ஆசை , மண் ஆசை , பூங்குழலார் போகத்து
இருள் ஆசை , சிந்தித்து இராதே - அருளாளன் ,
கச்சித் திருப்பதி ஆம் அத்தியூர்க் கண்ணன் தாள்
இச்சித்து இருப்பது யாம் என்று ?

பதவுரை :

பொருள் ஆசை செல்வத்தின் மேல் ஆசை .
மண் ஆசை மண்ணின் மேல் ஆசை ,
பூங்குழலார் போகத்து கூந்தலில் மலர் அணிந்த பெண்களது இன்பத்தில்
இருள் ஆசை வைக்கும் இருண்ட ஆசை ,
சிந்தித்து இராதே இவற்றை மனதில் வையாமல்
அருளாளன் பேரருளாளன் ஆகிய
கச்சித் திருப்பதி ஆம் காஞ்சிபுரத்தில் உள்ள
அத்தியூர்க் கண்ணன் தாள் அத்தியூரில் இருக்கும் வரதராஜனின் திருவடிகளை
இச்சித்து இருப்பது யாம் நாம் உபாயமாக் விரும்பி
என்று கவலை இல்லாமல் இருப்பது எந்நாளோ ?

V.Sridhar