Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 38/114 : ஸ்ரீ வாமன அவதார வைப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 38/114 : ஸ்ரீ வாமன அவதார வைப

    5. திருவரங்கத்து மாலை - 38/114 : ஸ்ரீ வாமன அவதார வைபவம் 4/4

    அரங்கன் பாத நீர் சீத மந்தாகினி , ஓத கங்கை , மேதகு போகவதி ஆகி விழுகிறது !

    ஓதப்புனல் பொன்னி நல் நீர் அரங்கர் உலகு அளந்த
    பாதத்து நீர் விண் , படி , பலம் மூன்றிலும் - பால் புரை வெண்-
    சீதத் தரங்க மந்தாகினி ஆகி , செழும் கங்கை ஆய் ,
    மேதக்க போகவதி ஆகி - நாளும் விழுகின்றதே

    பதவுரை :

    ஓதப்புனல் பொன்னி வெள்ளமாக நீரை உடைய காவிரி நதியானது
    நல் நீர் அரங்கர் நல்ல நீரால் சூழப்பட்ட திரு அரங்கத்தில் இருக்கும் எம்பெருமான்
    உலகு அளந்த பாதத்து நீர் உலகை அளந்த திருவடியிலிருந்து பெருகிய தீர்த்தம்
    விண் , படி , பலம் மூன்றிலும் தேவருலகிலும் , மண் உலகிலும் , பாதாளத்திலும்
    பால் புரை வெண்சீத பால் போன்ற வெண்ணிறமான குளிர்ந்த
    தரங்க மந்தாகினி ஆகி அலைகளை உடைய மந்தாகினி ஆகியும் ,
    செழும் கங்கை ஆய் செழிப்புள்ள கங்கை ஆகியும் ,
    மேதக்க போகவதி ஆகி மேன்மை உள்ள போகவதி ஆகியும்
    நாளும் விழுகின்றதே எந்நாளும் விழுகின்றது


    அடுத்து வருவது : ஸ்ரீ
    வராஹனும் ஸ்ரீ திரிவிக்ரமனும் !

    V.Sridhar


    Last edited by sridharv1946; 03-12-13, 20:32.
Working...
X