தர்ம கடம்தானம்: 14-04-2018 முதல்14-06-2018 வரை.

நாம் கஷ்டபட்டுநேர்மையான முறையில் சம்பாதித்தபணம் பொருள் ஆகியவற்றைமற்றவருக்கு தேவையான நேரத்தில்கொடுப்பதே தானம் எனப்படும்.தண்ணீர் (ஜலம்)இந்த கோடை மாதங்களில்சித்திரை வைகாசி மாதங்களில்

பிறருக்குகொடுப்பதும் சிறந்த தானமாகும்.தண்ணீர் பந்தல் அமைத்துதண்ணிர் கொடுப்பது ப்ரபாதானம் என்று பெயர். இதுஅனைத்து பாபங்களையும் போக்கிகுழந்தைகளுக்கும் நன்மைதரும் .

ப்லாஸ்டிக்குடங்களிலும் தண்ணீர்கொடுக்கலாம்.. தண்ணீர்பந்தல் அமைக்க சக்தி அற்றவர்கள்ஒரு குடம் நிறைய ஜலம்எடுத்துக்கொண்டு ஏஷ தர்மகடோ
தத்த: ப்ருஹ்மவிஷ்ணு சிவாத்மக: அஸ்யப்ரதாநாத் ஸகலா: மமஸந்து மனோரதா:

தர்மகுடம் என்னும் இந்த ஜலம்நிரம்பிய குடத்தை ப்ருஹ்மவிஷ்ணு ருத்ரர்களின் ப்ரீதிக்காகதானம் செய்கிறேன் , இதனால்எனது விருப்பங்கள் அனைத்தும்நிறைவேறட்டும். என்றுசொல்லி குடத்துடன் ஜலத்தைதானம் செய்ய வேண்டும்

.இவ்வாறுகோடை காலம் முழுவதும் தினமும்ஒரு குடம் தானம் செய்யலாம்.முடியாவிட்டால் பிறந்தநக்ஷதிரத்தன்று ஒரு குடம்,அல்லது 3,6,12, குடங்கள்தானம் செய்யலாம்.

இதுமஹா விஷ்ணுவின் அருளை பெற்றுதரும் மஹா புண்ணியத்தை தரும்.