18-04-2018 ஸங்கீதமும்மூர்த்திகளில் ஒருவரானஶ்யாமா சாஸ்திரிகள் ஜயந்தி.


அக்ஷயத்ருதியை:-


அக்ஷயத்ருதியை அன்று அதி காலை 5-30மணிக்குள்வைசாக ஸ்நான ஸங்கல்பத்தில்சொல்லியபடி ஸ்நானம் செய்யவேண்டும்.


காலைஸந்தியா வந்தனம் , காயத்ரிஜபம், ஸமித்தாதானம், ஒளபாஸனம்,செய்ய வேண்டும்.


லக்ஷமிநாராயணர் 16 உபசாரபூஜை செய்ய வேண்டும்.சுண்டல், நீர்மோர்,பானகம்,பழம்,தாம்பூலம்,கை விசிறி ,அன்ன தானம்,வஸ்த்ர தானம்,வித்யா தானம்,வேதம் படிக்கும்குழந்தைகளுக்கும்,புரோஹிதர்களுக்கும்,ஏழைகளுக்கும்செய்யலாம்.


குருமுகமாக இன்று மந்த்ர உபதேசம்பெற்று கொள்ளலாம். உபதேசம்பெற்ற மந்திரங்க்களை இன்றுஅதிக எண்ணிக்கை ஜபம் செய்யலாம்.ராமா,க்ருஷ்ணா,கோவிந்தாஎன்றும் இன்று அதிக மாகசொல்லலாம்.


விஷ்னுஸஹஸ்ர நாமம் பாராயணம்,ரகு வீர கத்யம்,கருட தண்டகம்சொல்லலாம்.
ருத்ரம்,சமகம்,புருஷ ஸுக்தம்ஸ்ரீ ஸுக்தம் இத்யாதிசொல்லலாம்.மற்றவிஷ்ணு ஸ்தோத்ரங்கள் சொல்லலாம்.


விஷ்ணுகோவிலுக்கு சென்று அதிக மாகவேப்ரதக்ஷிணங்கள் செய்யலாம்.


இன்றுபுதிய வாஹனங்கள், வீட்டுஉபயோக பொருட்கள், வேட்டி,புடவைகள்,வாங்கலாம்.ஷேர்,ப்லாட்,வீடு வாங்கிபத்ர பதிவு செய்யலாம்.


இன்றுக்ருத யுகம் ஆரம்பமான தினம்.ஆதலால் தர்பணம்செய்பவர்கள் இன்று க்ருதயுகாதி தர்ப்பணம் செய்யலாம்.


இந்ததினம் கிருஷ்ணர் பாண்டவர்களுக்குஅக்ஷய பாத்திரம் கொடுத்தநாள்.
அன்னபூரணிசிவனுக்கு மண்டை ஒட்டில்அன்ன மளித்த நாள்.
கிருஷ்ணர்குசேலருக்கு அவல் சாப்பிட்டுவிட்டுஅனுகிரஹம் செய்த நாள்.


வியாசர்கணபதி துணையுடன் மஹா பாரதம்எழுத துவங்கிய நாள்.
பரசுராமர் அவதரித்த நாள்.இவர் இன்னும்உயிருடன் இருப்பதாக உள்ளநம்பிக்கையால் ஜயந்திகொண்டாடுவதில்லை.


கும்பகோனம்பெரிய தெருவில் இன்று கருடவாஹனங்களில் ஒரே பந்தலின்கீழ் தரிசிக்க முடியும்.சாரங்கபானி,சக்கிரபானி,ராமர்,வராஹர் ,இத்யாதிஉற்சவர்கள், இன்றுதரிசனம் செய்ய முடியும்.


விஜயதசமி, யுகாதி,அக்ஷய த்ருதியைஇம்மூன்று நாட்களிலும் புதிதாகதொழில் துவங்கலாம்.


அவரவர்சக்திக்கு தகுந்தபடி இன்றுசூரியனுக்கு கோதுமை,சந்திரனுக்குபச்சரிசி, இனிப்புபண்டங்கள் கோதுமை,பச்சரிசியில்தயாரித்தும் தானம் செய்யலாம்.தங்கம்,வெள்ளி ,பருப்பு ,சிறு தானியவகைகளும் தானம் செய்யலாம்.குடிக்க சுத்தஜலம், பானகம்,நீர்மோர்தரலாம்.


அக்ஷயத்ருதியை, புதன்கிழமை, ரோஹிணி நக்ஷத்திரமும் சேர்ந்துவந்தால் மிக அதிக புண்ய காலமாகிவிடும்.


தயிசாதம், ஊறுகாய்,ப்லாஸ்டிக்டப்பாவில் போட்டு ஏழைகளுக்குஅன்ன தானம் செய்யலாம்.