ஸ்ரீ கிருஷ்ணரின் மீது பக்தி வர வேண்டுமென்றால், அவர் சொன்ன கீதையை நாம் படித்து புரிந்து கொண்டாலே போதும். பக்தியும் வரும். ஸ்ரீ கிருஷ்ணரையும் நமக்கு புரியும்.

கிருஷ்ணர் கீதையில் சொன்னது வெறும் வார்த்தை அல்ல, அறிவுரை அல்ல.
கீதை சொன்ன பொழுது, ஸ்ரீ கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் 100 வயது.


தன் அனுபவத்தை தான், மனம் ஒடிந்து போயிருந்த அர்ஜுனனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் தன் வாழ்க்கையில், தான் எப்படி இருந்தேன் என்று தான் சொல்கிறார்.
கீதை அவரது குணம்.

ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் பொதுவாக நமக்கு என்ன சொல்கிறார்? அனைவருக்கும் வாழ்க்கையில் துன்பம் வரும், சுகம் வரும், வெற்றி வரும், தோல்வி வரும், மானம், அவமானம் வரும், ஆரோக்கியம் வரும், ரோகம் வரும். இது சகஜம்.

எது வந்தாலும் கலங்காமல், சமமாக இரு.

உலகம் அனித்யம் (மாறக்கூடியது) என்று புரிந்து, கலங்காமல் தீரமாக, தர்மத்தில் இரு.

முயற்சி செய்வதை விடாதே.

இப்படி தான் சொன்னதோடு இல்லாமல், ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையிலும் நடத்திக் காட்டினார்.

  • எந்த ஒரு நிலையிலும் இவர் கலங்கவில்லை.
  • ஜெயிலில் பிறந்தோம் என்று சோர்வடையவில்லை.
  • தர்மம், அதர்மம் தெரிந்தும், அதர்மத்திற்கு துணை போன கர்ணனை போன்று, தானும் செல்லவில்லை.
  • தர்மத்திற்காக யுதிஷ்டிரனுக்கு தேரோட்டவும் தயார் என்றார்.


கீதை மூலமே ஸ்ரீ கிருஷ்ணர் தன் வாழ்க்கையை எப்படி தர்ம வழியில், தீரமாக நடத்தினார் என்று புரிந்து கொள்ளலாம்.

ஜெயிலில் பிறந்தும், க்ஷத்ரியனாக பிறந்தும் மாடு மேய்க்கும் நிலை வந்தும், பிறந்த பொழுதே தாய் தந்தை அரவணைப்பு இல்லாமல் வளர்ந்தும், எதிரிகள் பலர் இருந்தும், எந்த நேரத்திலும்,

Read further in my blog:
http://proudhindudharma.blogspot.in/...g-post_71.html

Feel Proud to Born as Hindu