ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே 1-5-10-வியாக்யானம்
தாரா இத்யாதி
தாராக்களாலே நிறைந்து இருந்துள்ள வயல் சூழ்ந்த
ஸ்ரீ சாளக்கிராமத்திலே
வந்து சந்நிஹிதனானார் ஸ்வாமியை கவி பாடிற்று
காரார்-இத்யாதி
மேகங்களின் உடைய நிரந்தர சஞ்சாரத்தை உடைத்தான
பர்யந்த்தத்தை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை
ஆரார் உலகத்தறிவுடையார்
லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார்
அமரர் நன்னாட்டரசு ஆள
நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
அத்தை
ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த
பேர் ஆயிரமும் ஒதுமின்கள்
ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாரும் கோள்
அன்றி யிவையே பிதற்றுமினே
அங்கன் இன்றிக்கே
இவற்றையே அடைவு கெட சொல்லப் பாரும் கோள்