
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி தரணியில்
வேந்தர்கள் உட்க விசயன் மணித் திண்தேர்
ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்
உம்பர் கோன் என்னைப் புறம் புல்குவான்
பொருள்: நந்தகம் என்னும் வாள் ஏந்திய பெருமாளே! நீயே அடைக்கலம் என்று சரணாகதி அடைந்த அர்ஜூனனுக்கு உதவி செய்தவனே! நிலவுலகத்து அரசர்கள் அனைவரும் கதிகலங்கும்படி வலிமை மிக்க தேரினைச் செலுத்திய பார்த்தசாரதியே! குழந்தைக் கண்ணா! தேவர்களின் தலைவனே! என் முதுகின் பின்னால் வந்து கழுத்தைச் சேர்த்துக் கட்டி அணைத்துக் கொள்வாயாக.