மலை புரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்றுவரும் பட்டு அழியப் பார்த்தன்
சிலை வளையத் திண் தேர் மேல் முன் நின்ற செங்கண்
அலவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பொருள்: ""மலை போன்ற தோள்களைக் கொண்ட மன்னர்கள், பெரிய தேர்களைச் செலுத்தும் வீரர்கள், கவுரவர்கள் ஆகிய அனைவரையும் போரில் அழியச் செய்தான் எங்கள் கண்ணன். அர்ஜூனனின் காண்டீபம் என்னும் வில்லை வளையச் செய்தான். பார்த்தசாரதியாக வந்து உபதேசித்தான். இப்பெருமை மிக்க அவன் பூச்சி காட்டி என்னை பயமுறுத்துகிறான்! அம்மா! என்னைப் பயமுறுத்துகிறான்''
குறிப்பு: குழந்தைகள் தாடி, பெரிய மீசை ஒட்டிக் கொண்டு, பெரியவர்களை பயமுறுத்தும் விளையாட்டே பூச்சி காட்டுதலாகும்.