Re: தேவி பாகவதம்
தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் சரியே இனித்தொடர்ந்து வரும் பகுதிகளைப் படிக்கும் போது விசாலாஷிரமணி அவர்கள் என்ன சொல்ல விழைகிறார் எனப்புரியவருமென நினைக்கிறேன் பொருத்திருந்து பார்ப்போம் தங்கள் கமெண்டை தொடர்ந்து எதிர்பார்துக் காத்திருக்கிறேன்
Announcement
Collapse
No announcement yet.
தேவி பாகவதம்
Collapse
X
-
Re: தேவி பாகவதம்
It was Baghavata Purana that the cursed King Parikshit heard over in his last days and not Devi Baghavatam? Devi Baghavatham is a different one, considered The Maha Puran with Devi as the primeordial controller and the creator of Universe.
AmI correct?
Varadarajan
Leave a comment:
-
தேவி பாகவதம்
தேவி பாகவதம்
Cont'd
நாதம், பிந்து, கலை, வைகரீ
நால்வகைப் பேறுகள் என நவிலப்படுவன
அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம்.
நாதம், பிந்து, கலை, வைகரீ என நவிலப்படும்.
அந்தரங்க சாதனமான அகண்டாகார விருத்தி
நாதத்தின் தன்மை வடிவினளான சக்தி பரை
ஜோதி மயமாக உறைவாள் மூலாதாரத்தில்!
புலப்பட மாட்டாள் இவள் நம் புலன்களுக்கு!
புலப்பட மாட்டாள் ஞான விசாரங்களுக்கும்!
பிந்துவின் தன்மை வடிவினளான பச்யந்தி.
சொந்த இதய வானில் பிரணவ மயமாவாள்.
கலையின் தன்மை வடிவினளான மத்யமா
விளங்குவாள் விசுத்தியில் ஸ்வரங்களாக!
வைகரீயின் தன்மை வடிவினளான வைகரீ;
விளங்குவாள் வாக்கு ரூபத்தில் ஒளிமயமாக
நாத வடிவான பராசக்தி மூலாதாரத்தில்
நமக்குப் புலனாகாது சூக்ஷ்மமாக உள்ளாள்.
பச்யந்தியாக இதய வானில் உள்ள போது
பார்வைக்குத் தென்படுவாள் மின்னல்போல.
மத்யமா சக்தியாக விசுத்தியில் இருந்து கொண்டு
சுத்தமாகப் பிரகாசிப்பாள் அக்னிசுவாலை போல.
வைகரீ சக்தி தோன்றுவாள் சப்த வடிவினளாக!
வையகம் முழுவதையும் விளங்கச் செய்வாள்.
“வாக்கினால் தேவியை விளக்க முடியும் – என் வாக்கை
வாக்கின் தேவதையே வந்திருந்து அலங்கரிக்கட்டும்!”
துதித்த பின் தொடங்குகின்றார் தேவியை வியாசர்!
துதித்த பின் தொடங்குவோம் நாம் வேத வியாசரை!
தேவி பாகவத மஹிமை
விஷ்ணு தோன்றினார் சத்தியவதியிடம்
வியாசராக, பராசர முனிவரின் மைந்தராக.
நான்கு பாகங்கள் ஆக்கினார் வேதங்களை!
நன்கு பரப்பினார் நான்கு சீடர்களின் மூலம்.
வேதம் பயில இயலாதவருக்கு அளித்தார்
வேத வியாசர் இதிஹாஸ புராணங்களை.
தேவி பாகவதத்தை இயற்றியவர் வியாசர்.
தேவி பாகவததைக் கேட்டவன் ஜனமேஜயன்.
முனிகுமாரன் சாபத்துக்கு ஆளான பரீக்ஷித்
பணி தீண்டி அடைந்தான் அகால மரணம்!
மரணத்தின் தீவினையை நீக்கிவிட மகன்
சிரவணம் செய்தான் தேவி பாகவதத்தை.
நவாவரண விதிப்படி பூஜித்தான் தேவியை.
சிரவணம் செய்து வந்த ஒன்பது நாட்களிலும்.
ஒன்பதாம் நாள் அடைந்தான் பரீக்ஷித் முக்தி,
ஒப்பற்ற தேவி பாகவதத்தின் மஹிமையால்.
“புத் என்னும் நரகத்தில் இருந்து என்னை மீட்ட
சத் புத்திரன் நீயே!” என மகிழ்ந்தான் பரீக்ஷித்.
தேவி பாகவதம் மிகவும் மேன்மை பெற்றது.
தேவி பாகவதம் தரும் நான்கு மேன்மைகளை.
ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது இது
ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்க வேண்டும்.
நவராத்திரி பாராயணம்
தினமும் சிரவண, மனன, அத்யயனம் செய்தால்
தீராத துன்பங்களும் தீர்ந்து விலகிச் செல்லும்!
சித்திரை, ஆடி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்களில்
தப்பாமல் செய்ய வேண்டும் பாராயணம் இதனை.
நவ யக்ஞவிதிகளை நன்கு கடைப்பிடித்தால்
நல்ல பலன் தரும் நாம் செய்யும் பாராயணம்.
நிறைவேறும் மனதின் கோரிக்கைகள் தவறாமல்.
குறைந்துவிடும் செய்து குவித்த பாவச் சுமைகள்.
தீர்த்த யாத்திரை, தானம், தவம், விரதம் மேலும்
சித்தி தரும் மந்திரஜபம் தரும் பலனைப் பெறலாம்;
சிறந்த தேவி பாகவத புராணத்தை எல்லோரும்
சிரவணம் செய்து சேகரிக்கும் புண்ணியத்தால்.
புரட்டாசியில் வரும் அமாவாசைக்குப் பின்னர்
சுக்கில பக்ஷத்து அஷ்டமி சுப தினத்தன்று
தேவி பாகவத புராணத்தை முறைப்படி பூஜித்து
தேவி ரஹஸ்யம் அறிந்த ஞானிக்கு அளித்தால்
குணமாகும் நம்மைத் துன்புறுத்தும் வியாதிகள்!
கண நேரத்தில் விலகிவிடும் சூழும் துன்பங்கள்!
ஆபத்து, அச்சம், அபசகுனங்கள் தாரா துயரங்கள்!
ஆனந்தம் பொங்கும் நமது இனிய இல்லங்களில்!
வேதியர் வேத பாண்டித்தியம் அடைவர் மேலும்!
ஞானியர் அடைவர் குறைவற்ற ஞானம் மேலும்!
அரசன் நல்ல பலமும்; வணிகன் செல்வமும்;
பிறர் வாழ்வில் உயர்வும்; மலடி பிள்ளைகளும்;
பெற்று மகிழ்ந்து வாழ்வார் நெடுநாள் பூமியில்!
குற்றமற்ற உறுதிமொழியை அளிப்பவள் தேவி!
பிரார்த்தனை
எந்த தேவியை வணங்கியதால் மும்மூர்த்திகள்
சொந்தப் பணியாற்றும் வல்லமை பெற்றனரோ;
எந்த ஆதி பராசக்தியின் வடிவம் எப்போதும்,
எல்லோருக்கும் தியானத்துக்கு உகந்ததோ;
எந்தப் பராசக்தியைத் தத்துவ ஞானிகள் கூடி
இந்த உலகத்தின் காரணம் என்கிறார்களோ;
அந்தப் பராசக்தியை; உலகின் அன்னையை;
அனைத்தையும் தருபவளை; வணங்குகிறேன்.
எந்த மகாசக்தி குழந்தையின் விளையாட்டாகவே
இந்த உலகைப் படைத்துக் காத்து அழிக்கிறாளோ;
எந்த தாக்ஷாயணி மலையரசன் மகளாக வந்து
சொந்த முயற்சியால் சிவனை அடைந்தாளோ;
எந்த தேவியைத் தன் துணைவியாக உடலிலும்,
பாதங்களை இதயத்திலும் சிவன் சுமக்கிறாரோ:
அந்த தேவியே, உலகத்தின் ஒரே அன்னையே,
இந்த உலகைத் தீமைகளிலிருந்து காக்கட்டும்.
வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணிLast edited by soundararajan50; 17-11-15, 08:49.Tags: None
Leave a comment: